


























எகிப்து பெரிய பிரமிடில் உள்ள சிந்து சமவெளி செந்தமிழ் எழுத்துகள்.
Updated on:
திருச்சி: உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் பண்டைய காலத்தில் பார்வோன் (Pharaoh) என்ற பூமியை ஆள்வோன் என்னும் சிறப்பு பெயருடைய மன்னர் வம்சத்தின் நினைவுச் சின்னங்களாக உள்ளன. இங்கு 4,540 ஆண்டுகள் பழமையான பாரோ கூபுவின் சமாதியான கிசா(Giza) என்ற பெரிய பிரமிடின் நுழைவாசலில் பொறிக்கப்பட்டுள்ளவை குறியீடுகள் அல்ல என்றும், அவை கிமு 7500 ஆண்டுகள் முதல் 3500 ஆண்டுகள் வரையிலான காலத்துக்கு உட்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் செந்தமிழ் மொழியின் 6 எழுத்துகள் என திருச்சியைச் சேர்ந்த சிந்து சமவெளி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் கூறியுள் ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: பெரிய பிரமிடின் 6 எழுத்துகளை சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுதும் முறைப்படி இடமிருந்து வலமாகவும், உள்ளிருந்து வெளியாகவும் 2 விதமாக படித்து பொருளறியலாம். முதலாவதாக, ‘பஉளின் நள்’ அதாவது பவுழியன் நள் எனவும், அதற்கு தமிழ் அகராதியின் துணையுடன் ‘பூமி நாட்டை ஆண்டவனான சேரன் நடுவே’ எனவும் பொருளறியலாம்.இரண்டாவதாக, ‘பா உ(ள்) ளன்நள்’ என்பதற்கு ‘தூய்மையான உற்ற நட்பினன் நடுவே’ என பொருளறியலாம். இவற்றில் முதலாவதை பூமியை ஆள்வோன் (பார்வோன்) என்பதால் பூமி நாட்டை ஆண்டமன்னன் நடுவே என்பதைக் கொண்டு ‘கூட்டுப் பொருள்கோள்’ என்ற தமிழ் இலக்கண முறைப்படி ‘நடுவே உள்ளவன் பார்வோன்’ எனக் கருதலாம்.
சிந்து சமவெளி செந்தமிழ் உயிர், மெய் எழுத்துகள்.
இரண்டாவதை சிந்து சமவெளி நகர நாகரிக பானை ஓடுகள், வில்லைகள், முத்திரைகளில் தூய்மை எனப் பொருள்பெறும் ‘பா’ என்ற சொல் அதிக அளவில் முன்னிலை பெற்றுள்ளதால், தூய்மையான உற்ற நட்பினன் நடுவே என்பதைக் கொண்டு ‘கூட்டுப் பொருள்கோள்’ என்ற தமிழ் இலக்கண முறைப்படி நடுவே உள்ளவன் தூய்மையான உற்ற நட்பினன் எனவும் கருதலாம்.
நைல் நதிக் கரையோரம் அமைந்துள்ள மன்னர்கள் பள்ளத்தாக்கில் (கிங்ஸ் வேலி) மேலை நாட்டு அறிஞர் பெருமக்களால் கண்டறியப் பெற்றுள்ளதும், 2100 ஆண்டுகளுக்கும் முற்பட்டதுமான சிகைக் கொற்ற(ா)ன், சாத்தன் போன்றவை செந்தமிழ் பெயர்ச் சொற்கள் என்பதால் எகிப்து நாட்டுக்கும், தமிழகத்துக்கும் இடையே தொடர்பு இருந்தது தெரியவருகிறது. இருப்பினும், எகிப்து நாட்டுக்கும், சிந்து சமவெளிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பு எவ்வகையானது, பிரமிடின் கட்டுமானப் பணியில் தமிழக கட்டிடக்கலைஞர்களின் பங்கு இருந்துள்ளதா போன்ற வினாக்களுக்கான விடைகள் ராயத்தக்கவை. இவ்வாறு அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。