惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
IT之家
IT之家
J
Java Code Geeks
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
I
InfoQ
博客园 - 【当耐特】
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 司徒正美
V
V2EX
博客园 - Franky
U
Unit 42
S
SegmentFault 最新的问题
美团技术团队
The Register - Security
The Register - Security
Last Week in AI
Last Week in AI
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 叶小钗
M
MIT News - Artificial intelligence
博客园 - 聂微东
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
Troy Hunt's Blog
B
Blog
P
Palo Alto Networks Blog
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
P
Privacy International News Feed
K
Kaspersky official blog
The GitHub Blog
The GitHub Blog
C
Cisco Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
F
Fortinet All Blogs
S
Schneier on Security
C
CERT Recently Published Vulnerability Notes
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
Engineering at Meta
Engineering at Meta
TaoSecurity Blog
TaoSecurity Blog
小众软件
小众软件
T
Threatpost
Exploit-DB.com RSS Feed
Exploit-DB.com RSS Feed
Martin Fowler
Martin Fowler
AWS News Blog
AWS News Blog
V
Visual Studio Blog
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
H
Heimdal Security Blog

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல்
வி.வெங்கடேஸ்வரன் · 2026-04-12 · via hindutamil

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் நேர்காணலின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன்.

படங்கள்: எஸ்.சத்தியசீலன்

Updated on

6 min read

சென்னை கிரீன்வேஸ் இல்லம். சனிக்கிழமை காலை 10.45 மணி. முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்திக்க காத்திருந்தோம். அவருடைய அறை வாசலில் கட்சிக்காரர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். பக்கத்து அறையில் அமர்ந்திருந்தோம்.

’அண்ணனுக்குத் தொண்டை வலினு சொல்றாங்க... மைக்ல கத்திக் கத்திப் பேசுறதுனால குரலே சன்னமாக இருக்கு.. அடுத்து தஞ்சை பிரச்சாரத்துக்குக் கிளம்பறார்போல.. இருந்தாலும் கட்சிக்காரங்கள சந்திக்காம விடறதில்ல. வணக்கம் வச்சு, அவருக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்பைக் காட்டி அனுப்பிவிடுகிறார்’ என்று மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர்.

தேர்தல் நேரம் என்பதால், முக்கியத் தலைவர்களுடன் உட்கார்ந்து ஆற அமர, மாத்தி மாத்திக் கேள்விகள் கேட்டு சுவாரஸ்யமாக உரையாட முடியாத சூழல். நாம் முன்னரே பகிர்ந்த கேள்விகளைத் திரும்பத் திரும்பப் படித்து இபிஎஸ்சே பதில்களை ’டிக்டேட்’ பண்ணிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். உதவியாளர் ஒருவர் அங்கும் இங்கும் ஓடி பிரின்ட் எடுத்துக் கொடுத்து, இபிஎஸ்சிடம் திருத்தி வாங்குவதையும் காண முடிந்தது. சிறிது நேரத்திலேயே உள்ளே அழைக்கப்பட்டோம். வரவேற்றார்.

நாமே அறிமுகப்படுத்திக் கொள்ள முயன்றபோது, ‘உங்களைத் தெரியாமலா? நம்மதான் சந்திச்சிருக்கோமே?’ என்றவர், ‘ஏடாகூடமா கேள்வி கேட்டு வச்சுருக்கீங்க. இருந்தாலும் எனக்குப் புடிச்சிருந்தது. அம்மா வழில நேர்மையான அரசியல் பண்ணனும்னு நெனைக்கிறேன். கடுமையா உழைக்குறேன். பத்திரிகைக்காரங்க கேட்குறதுக்குப் பதில் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்ல’ என்றபடி சிரித்தார்.

அரசியல் களத்தில் அறியப்படும் விமர்சனங்கள், வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே கேள்விகள் தயாரித்தோம். மற்றபடி, தேர்தல் நேரத்தில் உங்களைச் சங்கடப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை... என்றேன்.

நீங்கள் வெளிப்படையாகக் கேட்டிருந்த கேள்விகளை விரும்புவதால்தான்... ’புடிச்சிருந்தது’ என்ற வார்த்தையைச் சொன்னேன்.. என்றபடி தொடர்ந்தார்.

நேரமின்மை காரணமாகவும், குரல் வளத்தைப் பாதுகாத்து அடுத்தடுத்த ஊர்கள்ல பேசணுங்கிறதுக்காகவும் இப்ப உங்ககிட்ட நெறைய நேரம் பேச முடியாத நிலைமை.

2009.. திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்துச்சுல்ல.. அப்போ, தேர்தல் வேல பாக்கச் சொல்லி அம்மா என்னைய மாதிரி சில முக்கிய நிர்வாகிகள அனுப்பிச்சிருந்தாங்க. நாங்களும் ஓடியாடி வேல செஞ்சோம். ஒருநாள் கூப்பிட்டு, எல்லார்கிட்டயும்... தொகுதில நெலவரம் எப்படி? நமக்கு சான்ஸ் எப்படி இருக்குன்னு கேட்டாங்க. மத்தவங்கள்லாம் ரொம்ப அருமையா இருக்குங்கம்மானு ரிப்போர்ட் குடுத்துட்டாங்க. நான் மட்டும்... ‘கஷ்டம்’னு சொன்னேன்.

அப்போ கட்சில சீனியரா இருந்தவங்க, ‘பழனிசாமி உன் கதை முடிஞ்சது.. அம்மாகிட்டயே போய் நெகட்டிவ்வா சொல்றியா’ன்னு பயமுறுத்துனாங்க. நான் என் கருத்துல தெளிவா இருந்தேன்.

நான் சொன்னபடித்தான் ரிசல்ட் வந்துச்சு.. அப்புறம் அம்மா கூப்ட்டு பாராட்டுனாங்க. எதுக்கு? உண்மையை, துணிச்சலா சொன்னதுக்காக.. நேர்மையா நடந்துக்கிட்டதுக்காக... ஒரு பேரியக்கத்தை வழிநடத்துகிற தலைவிக்கு அதன்பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரிச்சுது. அந்த உண்மை, துணிச்சல், நேர்மை புடிச்சுப்போய் அவங்க என்னைய வளர்த்ததாலதான் இந்த இடத்துக்கு வந்துருக்கேன்..

பேசிக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்தார்... ‘நேரமாயிடுச்சு...’ என்றவரிடம், ‘சமீபமாகத் தனிப்பட்ட விமர்சனங்கள் கடுமையாக இருக்கிறதே?’ என்று கேட்டதற்கு, ‘என்னிக்காச்சும் நான் மரியாதை இல்லாம பேசிப் பாத்துருக்கீங்களா? யாரா இருந்தாலும் அவர்களே.. என்று குறிப்பிடுவதுதான் என் வழக்கம். வம்பிழுத்தா எப்படி விட முடியும்? லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக... சும்மா விட்டா தொண்டர்கள் என்னையப் பத்தி என்ன நெனப்பாங்க..?’ என்றவாரே அறையில் இருந்து கிளம்பினார்.

’ரொம்ப நன்றி சார்.. வாழ்த்துக்கள்’ என்று சொல்லிவிட்டு நாமும் வெளியேறினோம். முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நாம் பகிர்ந்துகொண்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கே...

Q

ஒரு சாதாரண கிளைச் செயலாளராகத் தொடங்கி, கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் அந்தஸ்து வரை உயர்ந்துள்ளீர்கள். இந்த எளிய விவசாயப் பின்னணிதான் உங்களுக்கு அடித்தட்டு மக்களிடையே அசைக்க முடியாத வலுவான செல்வாக்கை உருவாக்கியுள்ளதா?

A

எங்களை ஆளாக்கிய புரட்சித் தலைவர் போதித்த, ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்ற தத்துவத்தைக் கடைபிடித்து எந்த பிரதிபலனும் பார்க்காமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியதன் விளைவாக இயக்கத் தோழர்கள் எனக்கு இந்த அந்தஸ்தைப் பரிசாக அளித்துள்ளனர். அவர்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பாடுபடுவேன். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்.

Q

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வியிலிருந்து, கட்சியின் பொதுச்செயலாளராக நீங்கள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்ன?

A

‘படுதோல்வி’ என்ற உங்கள் வார்த்தை சரியல்ல. தனித்துப் போட்டியிட்டாலும் எங்களுக்கென உள்ள வாக்கு சதவீதத்தை உலகுக்கு உணர்த்த அந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தனித்துப் போட்டியிட திராணியில்லாத தலைவர்களிடம் போய், தோல்வி பயத்தால்தான் கூட்டணி அமைத்துள்ளீர்களா என்று தைரியமாக உங்களால் கேட்க முடியுமா?

Q

’கட்சித் தலைமை தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் உங்களின் முதன்மை இலக்கு’ என்ற விமர்சனத்தையும், மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்ற கட்சிக்குத் தாவுவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

கட்டுக்கோப்புடனும், கட்டுப்பாட்டோடும்தான் ஒரு இயக்கம் இயங்க வேண்டும் என்றுதான் எந்தவொரு கட்சித் தலைமையும் நினைக்கும். எங்கள் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டை போதித்தார். அவர் வழியில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடை போட்டார்கள்.

நானும் அவர்கள் காட்டிய பாதையில் பயணம் செய்கிறேன். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் மீது பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இங்கு இருந்த வரை அனுபவித்துவிட்டு, கட்சிக்குத் துரோகம் செய்ததுடன், சுய லாபத்துக்காக அவர்கள் மாற்றுக் கட்சிகளில் சேருகிறார்கள். அதற்காகக் கவலைப்பட முடியுமா?

Q

‘பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை’ என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி தற்போது மீண்டும் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது உங்கள் அரசியல் வியூகமா அல்லது டெல்லியின் அழுத்தமா?’

A

கூட்டணி என்பது தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப அமைவது. 1999-ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, 2004-ல் மீண்டும் கூட்டணி அமைத்தது. 1999-ல் பாஜகவோடு சேர்ந்த திமுக, 2004-ல் அங்கிருந்து விலகி காங்கிரசோடு சேர்ந்தது. தமிழகத்தின் தீயசக்தியான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் டெல்லி அழுத்தம் என்பது உங்கள் கற்பனை.

Q

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு சிதறும் என்ற கணிப்புகளை மீறி, அத்தனை சவால்களையும் முறியடித்து ஒற்றைத் தலைமையாக கட்சியை இரும்புக்கரம் கொண்டு வழிநடத்துகிறீர்கள். அந்த அரசியல் வலிமையும் சாதுர்யமும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

A

உண்மையான, விசுவாசமிக்க தொண்டர்கள் அம்மா மறைவுக்குப் பின் இந்த இயக்கம் பாழ்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் உண்மைத் தொண்டனான, உழைப்பாளியான எனக்கு ஆதரவளித்தார்கள். கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்கள், துரோகம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு ‘களை எடுத்து’ இயக்கத்தை பாதுகாத்திருக்கிறோம். தூய்மை அடைந்த எங்கள் இயக்கம் எதிரிகளோடு போராடி வருகிறது. களத்தில் வெற்றி நிச்சயம்.

Q

அமைச்சர்களை எதிர்த்துப் போராட வேண்டிய தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கிவிட்டதாகவும் சென்னையில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் கொடுத்து பாஜகவின் வெற்றியை தடுக்கும்விதமாக உள்நோக்கத்தோடு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அண்ணாமலை தரப்பு குற்றம்சாட்டுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

முழுக்க முழுக்க கற்பனையான, உள்நோக்கத்துடன் கேட்கப்படும் கேள்வி இது. தொகுதிகள் பங்கீட்டில் எங்கள் கூட்டணிக் கட்சிகளிடம் எந்தவொரு மனவருத்தமும் இல்லை.. வேண்டுமென்றே அண்ணாமலையின் பெயரை இழுத்தது ஏற்கத்தக்கதல்ல.

Q

நீட் விலக்கு, ஜிஎஸ்டி, கச்சத்தீவு போன்ற விவகாரங்களில் மத்திய அரசிடம் நீங்கள் உறுதியாக அழுத்தம் கொடுக்காதது.. கூட்டணி தர்மத்துக்காக மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்ததுபோல் தெரிகிறதே?

A

இந்தப் பிரச்சினைகளில் எல்லாம் விட்டுக்கொடுத்தது அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக மற்றும் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர்தான். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலும் திமுக இருந்தது. எனவே, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக திட்டங்களைக் கொண்டுவந்தது திமுக.

இந்தப் பிரச்சினைகளில் எல்லாம் திமுக ஆட்சியாளர்களைவிட நாங்கள் மத்திய அரசிடம் அதிகம் வாதாடி வருகிறோம். ஜிஎஸ்டி வரி விதிப்பினால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பை 5 வருடங்களுக்கு மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத்துக்குப் பல்லாயிரம் கோடியை கொண்டு வந்தது அம்மா தலைமையிலான அதிமுக அரசு.

Q

சிஏஏ, மணிப்பூர் போன்ற விஷயங்களில் பாஜக நிலைப்பாட்டை ஆதரித்த பிறகு, சிறுபான்மையினர் வாக்குகளை நீங்கள் மீண்டும் எப்படிப் பெறப் போகிறீர்கள்?

A

எத்தனை காலத்துக்கு இதே உருட்டை உருட்ட முடியும். மணிப்பூர் பிரச்சினையில் உரிய முறையில் நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம். சிஏஏ சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள், குறிப்பாக தமிழக முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை நான் முதல்வராக இருந்த நேரத்தில், சட்டப்பேரவையில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியருக்கு என்ன பாதிப்பு என்பதை ஆதாரத்துடன் சொன்னால் பதிலளிக்கிறேன.

ஓட்டுக்காக தங்களை ஆதரிப்பது யார் என்பதையும் உண்மையிலேயே அவர்கள் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் யார் என்பதையும் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்தத் தேர்தலில் அவர்கள் முழுவிருப்பத்தோடு அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

Q

’மோடியும் அமித்ஷாவும்தான் உங்களின் கொள்கைத் தலைவர்கள்’ என முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் தொடர்ந்து விமர்சிப்பதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

A

சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் கொள்கைத் தலைவர்களாக ஏற்று அவர்களுக்கு சலாம் அடித்துச் செயல்படும் மு.க.ஸ்டாலினின் பிதற்றல் இது. எங்கள் ஆதர்ச தலைவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எங்கள் ஆட்சியில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நேரடியாக குற்றம்சாட்ட இயலாமல் 2019 முதல் இதையே மேடைதோறும் பேசித் திரிகிறார்கள் ஸ்டாலினும், உதயநிதியும்.

Q

நீங்கள் என்னதான் திமுகவை குறை சொன்னாலும், ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் பல துறைகளில் முன்னணி மாநிலமாக இருந்ததாக உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவின் மத்திய அரசே சான்றிதழ் தந்திருக்கிறதே?

A

சான்றிதழைக் காட்டுங்கள் பார்க்கலாம். முதலமைச்சர் அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகளையே நீங்கள் கேள்வியாக்கியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

Q

பலமான திமுக அரசை சட்டப்பேரவைக்கு உள்ளேயும்வெளியேயும் ஆக்ரோஷமாக எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் உருவெடுத்துள்ளீர்கள். உங்களின் இந்த சமரசமற்ற போர்க்குணம் மக்கள் மத்தியில் உங்களுக்கான ஆதரவை அதிகரித்துள்ளதா?

A

ஆதரவு அதிகரித்துள்ளது என்பதைவிட உண்மைகளை எடுத்து வைக்கும் என்னைப் பார்த்து இந்த ஆட்சியாளர்கள் பயந்து போயுள்ளதையும் மக்கள் உணர்கிறார்கள். சட்டப்பேரவையில் நான் பேசும்போது மட்டும் டி.வி நேரலை துண்டிக்கப்பட்டதில் இருந்தே இந்த அரசின் பயந்தாங்கொள்ளித் தனத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

Q

’திமுகவுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி.. அதிமுக ரேஸிலேயே இல்லை’ என தவெக தரப்பினர் சொல்வதை, அரசியல் அனுபவமிக்க ஒரு மூத்த தலைவராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

அரசியலில் கருத்துச் சொல்ல தவெகவினருக்கும் சுதந்திரம் உள்ளது.

Q

திமுக அரசு ஈர்த்த முதலீடுகளை போலி என்கிறீர்கள். அப்படியெனில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவசங்களைத் தாண்டி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கான தெளிவான மாற்றுத் திட்டம் என்ன வைத்திருக்கிறீர்கள்?

A

‘முதலீடுகளை ஈர்க்கிறேன்’ என்று கூறிவிட்டு வெளிநாடுகளுக்கு ஸ்டாலின் குடும்பம் சுற்றுலா சென்று வந்தது. ஆனால், முதலீட்டை ஈர்த்தது போல் காட்டிக் கொண்டனர். நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். எங்களின் முந்தைய ஆட்சிக் காலங்களைப்போல் அந்நிய முதலீட்டாளர்களை முறையாக ஈர்த்து தொழில் வளத்தைப் பெருக்குவோம்.

வேலை வாய்ப்பை உருவாக்குவோம். தமிழக அரசின் வருவாயைப் பெருக்கி, மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 2021 வரை செய்ததுபோல் இணையதளத்தில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பான செய்திகளை வெளியிடுவோம். இவர்களைப் போல் வெள்ளைக் காகிதத்தைப் பதிலாக காட்ட மாட்டோம்.

Q

வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வருகிறது. இதனால் அதிமுகவுக்கு பெரும் பாதிப்பு என்கிற போது, பிரதான எதிர்க்கட்சியாக அதைத் தடுக்கத் தவறிவிட்டீர்களா?

A

யார் சொன்னது.. அதிமுகவுக்கு பாதிப்பு என்று.. போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்படப் போவது திமுகதான். அது ஊருக்கே தெரியும்.

Q

ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்டத்தை ‘நடைமுறைக்குச் சாத்தியமில்லை' என்று நீதிமன்றத்தில் கூறிவிட்டு, இப்போது ‘கண்டிப்பாக நிறைவேற்றுவோம்' என வாக்குறுதி அளிப்பதை முரண்பாடாகக் கருதுகிறார்களே?

A

எங்களது தேர்தல் அறிவிப்புகளைச் சரியாகப் படித்துப் பார்த்தால் புரிந்திருக்கும். எங்களது தேர்தல் அறிக்கை சொல்வது என்னவென்றால் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தற்போது விடியா திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும் என்பதுதான்.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைத் திமுக ஏமாற்றி விட்டது. இந்தக் கேள்வியை நீங்கள் திமுகவிடம் கேட்டிருக்க வேண்டும்.

Q

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அதிமுக ஆட்சியில் நீங்கள்தான் முன்னெடுத்தீர்கள், இப்போது அதற்கு எதிராகப் பேசுவது.. எந்தவகையில் சரி?

A

மக்களைப் பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதே அன்றும், இன்றும் எங்கள் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விட்டு, ஆளும்கட்சியானவுடன் பெயரை மாற்றி திட்டத்தைச் செயல்படுத்தும் திமுகவிடம் இப்படியொரு கேள்வியை நீங்கள் கேட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

Q

ஒருபுறம் இலவசங்கள் மாநில நிதிநிலைக்குச் சுமை என்று சொல்கிறீர்கள்; மறுபுறம் திமுகவுக்குப் போட்டியாக ‘ஃபிரிட்ஜ்' வழங்குவோம், ரூ.2000 உரிமைத்தொகை தருவோம் என புதிய வாக்குறுதிகளை அறிவிப்பது ஏன்?

A

இலவசம் என்று சொல்லாதீர்கள். இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் விலையில்லாமல் குடும்பத்துக்குத் தேவையானவற்றை வழங்க விரும்புகிறோம். அந்த அடிப்படையில்தான் ஃபிரிட்ஜ் தருவதாகச் சொல்லியிருக்கிறோம். அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வங்கிக் கணக்கு மூலம் ரூ.10000 வரவு வைப்போம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மக்கள் எங்களுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டார்கள். இந்த செலவினங்களைச் சமாளிக்க வேண்டிய நேரத்தில், அரசின் நிதிநிலையை உயர்த்தும் வல்லமை எங்களிடம் உண்டு. தமிழக அரசின் 75 ஆண்டு கால கடன் தொகையான ரூ.5 லட்சம் கோடியை ஐந்தே ஆண்டில் வாங்கி ஊதாரித்தனமாக திமுக அரசு செலவு செய்ததுபோல் அதிமுக அரசு செயல்படாது.

Q

உங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘குடிமராமத்து’ திட்டமும், மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடும் விவசாயிகளின் ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியது. அந்த நிர்வாகத் திறமை உங்களை மீண்டும் முதல்வர் அரியணையில் ஏற்ற உதவும் என்று நம்புகிறீர்களா?

A

நிச்சயம் நம்புகிறேன். திமுக அரசால் முடக்கப்பட்ட குடிமராமத்து திட்டம் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்படும். 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு மூலம் மருத்துவம் படித்துவரும் அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் வாழ்க்கை உயர்ந்திருப்பது நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கிறது. அனைத்து நல்ல திட்டங்களும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் உயிர் பெறும் என்று உறுதி அளிக்கிறேன்.