惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
F
Fortinet All Blogs
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
GbyAI
GbyAI
MongoDB | Blog
MongoDB | Blog
Jina AI
Jina AI
aimingoo的专栏
aimingoo的专栏
I
InfoQ
IT之家
IT之家
罗磊的独立博客
Blog — PlanetScale
Blog — PlanetScale
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
The Cloudflare Blog
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
美团技术团队
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog RSS Feed
G
Google Developers Blog
大猫的无限游戏
大猫的无限游戏
博客园_首页
Engineering at Meta
Engineering at Meta
Martin Fowler
Martin Fowler

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
“மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உற...
மோகன் கணபதி · 2026-04-11 · via hindutamil

Updated on: 

பாக்முண்டி (மேற்கு வங்கம்): மேற்கு வங்கத்தில் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பாஜக ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவது உறுதி என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாக்முண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “மேற்கு வங்கத்தில் குர்மி மற்றும் சந்தால் சமூகத்தவர் இடையே மோதல்களை தூண்டிவிடும் வேலையை முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகளாக செய்து வருகிறார். குர்மி மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதில் அவர் துளியும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பாஜக ஆட்சி அமைந்ததும் மிகச் சிறந்த குர்மி மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்க்க நாங்கள் முழுமையாக பாடுபவோம்.

ஊடுருவல்காரர்கள்தான் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கியாக இருக்கிறார்கள். அவர்களை மம்தா அரசு மேற்கு வங்கத்தில் குடியேற்றியுள்ளது. அவரது ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. மே 5ம் தேதி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்க உள்ளது. அப்போது, ஊடுருவல்காரர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு நாங்கள் அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவோம்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள கூட்டுக் கொள்ளையர்களின் நிழல், மேற்கு வங்கம் முழுவதும் படர்ந்துள்ளது. ஒருவர் சொந்தமாக வீடு கட்டுவதாக இருந்தால்கூட மிரட்டிப் பணம் பறிக்கும் இந்த கும்பலுக்கு கப்பம் கட்ட வேண்டி உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்று கருதாதீர்கள். பாஜக ஆட்சியை அமைத்துத்தாருங்கள். மிரட்டிப் பணம் பறிக்கும் இந்த கும்பலை நாங்கள் தலைகீழாக தொங்கவிட்டு பாடம் புகட்டி சரி செய்வோம்.

ஆசிரியர் நியமன ஊழல், நகராட்சிப் பணியாளர் ஊழல், மாடு கடத்தல் ஊழல், ரேஷன் பொருட்கள் விநியோக ஊழல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊழல் என பல நூறு ஊழல்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரங்கேற்றி வருகிறது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழலில் ஈடுபட்ட எவரும் தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும்.

மேற்கு வங்கத்தின் ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதி அனுப்பியுள்ளார். மேற்கு வங்க கிராமங்களின் வளர்ச்சிக்காக மோடி அனுப்பிய அந்த பணம் முழுவதும் மம்தா பானர்ஜியின் கூட்டுக்கொள்ளைக் கும்பல் வசம் சென்று வீணடிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் செய்த ஊழல்களுக்கு தண்டனையே கிடைக்காது என்று அவர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள். இந்த மேடையில் இருந்து நான் சொல்கிறேன், அந்த கூட்டுக்கொள்ளை கும்பலில் தொடர்புடையவர்கள் கொள்ளையடித்த ஒவ்வொரு பைசாவும் திரும்பப் பெறப்படும். கூட்டு சேர்ந்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவது உறுதி” என தெரிவித்தார்.