惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
A
About on SuperTechFans
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
N
Netflix TechBlog - Medium
Microsoft Security Blog
Microsoft Security Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
博客园 - Franky
D
Docker
Martin Fowler
Martin Fowler
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
人人都是产品经理
人人都是产品经理
Last Week in AI
Last Week in AI
U
Unit 42
F
Fortinet All Blogs
H
Help Net Security
Blog — PlanetScale
Blog — PlanetScale
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
罗磊的独立博客
P
Proofpoint News Feed
月光博客
月光博客
G
Google Developers Blog

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
“பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியி...
செய்திப்பிரிவு · 2026-04-11 · via hindutamil

Updated on: 

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்டத்தில் லக்​னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. 182 ரன்​கள் இலக்கை துரத்​திய லக்னோ அணி கடைசி பந்​தில் த்ரில் வெற்​றியை வசப்​படுத்​தி​யது. இந்த அணி​யில் அணி​யின் இளம் பேட்​ஸ்​மே​னான 21 வயதான முகுல் சவுத்​ரி​யின் அதிரடி ஆட்​டம் முக்​கிய பங்கு வகித்​தது.

ஒரு கட்​டத்​தில் லக்னோ அணி 16 ஓவர்​களில் 7 விக்கெட்கள் இழப்​புக்கு 128 ரன்​கள் எடுத்து தோல்​வி​யின் பிடி​யில் சிக்கியிருந்​தது. அந்த அணி​யின் வெற்​றிக்கு கடைசி 4 ஓவர்​களில் 54 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. நெருக்கடியான அந்த நிலை​யில் முகுல் சவுத்ரி அதிரடியாக விளை​யாடி 27 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 54 ரன்​கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்​கொடுத்​தார். வைபவ் அரோரா வீசிய 17-வது ஓவரில் முகுல் சவுத்​ரி, தோனியை போன்று ஹெலி​காப்​டர் ஷாட் அடித்து அசத்​தி​னார். இது அனை​வரை​யும் வெகு​வாக கவர்ந்​தது.

ராஜஸ்​தான் மாநிலத்​தைச் சேர்ந்த முகுல் சவுத்ரி ஜெய்ப்பூரில் உள்ள ஆரவல்லி பயிற்சி மையத்​தில் ஆரம்பத்​தில் ஒரு மிதவேகப் பந்​து​வீச்​சாள​ராகவே தனது கிரிக்​கெட் பயணத்​தைத் தொடங்​கி​னார். ஆ​னால் விக்கெட் கீப்​ப​ராக இருப்​ப​தற்கு வேறு வீரர் இல்​லாத​தால் விக்​கெட் கீப்​ப​ராக மாறி​யுள்​ளார். இதன் பின்​னர் பயிற்சியாளர்​கள் அவரது இயல்​பான அதிரடி ஆட்​டத் திறமை​யைக் கண்​டறிந்​து, பேட்​டிங் பக்​கம் திசை​திருப்பினர்.

கடந்த ஆண்டு டிசம்​பர் மாதம் நடந்த சையத் முஷ்​டாக் அலி கோப்பை தொடரில், டெல்லி அணிக்கு எதி​ரான கடைசி ஓவரில் முகுல் சவுத்​ரி​யின் அணிக்கு 25 ரன்​கள் தேவைப்​பட்​டன. சாத்​தி​யமே இல்லை என்று தோன்​றிய அந்த இலக்கை மிக நெருக்​க​மாகக் கொண்டு வந்த முகுல் சவுத்​ரி, கடைசி பந்​தில் 5 ரன்​கள் தேவை என்ற நிலைக்கு ஆட்​டத்தை மாற்​றி​னார்.

அந்த அற்​புத​மான இன்​னிங்​ஸ்​தான் அவரை ஐபிஎல் அணிகளின் பார்​வை​யில் பட வைத்​தது. அந்த சிறப்​பான ஆட்​டத்​துக்​குப் பிறகு, லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் முகுல் சவுத்​ரியை ரூ.2.60 கோடி ஏலத்​தில் எடுத்​தது. அதில் இருந்து 5 மாதங்​களுக்​குப் பிறகு தற்​போது அதை​விடப் பெரிய​தாக ஐபிஎல் மேடை​யில் ஒரு சூழல் முகுல் சவுத்​ரிக்கு கொல்கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அமைந்​தது.

இது அவருக்கு ஒரு புதிய அடை​யாளத்தை கொடுத்துள்ளது. கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்டத்துக்கு பின்​னர் முகுல் சவுத்ரி கூறிய​தாவது: எனது ஆட்டத்தை எனது தந்​தைக்கு அர்ப்​பணிக்​கிறேன். அவருக்குத் திரு​மணம் ஆவதற்கு முன்​பே, தனக்கு மகன் பிறக்க வேண்​டும். அவனை ஒரு கிரிக்​கெட் வீர​ராக்க வேண்​டும் என்ற கனவு இருந்​தது.

அதே​போல், எம்​.எஸ்​.தோனி ஆட்​டத்தை முடிக்​கும் விதத்தை நான் எப்​போதும் உன்​னிப்​பாகக் கவனிப்​பேன். நானும் அதே வரிசை​யில் தான் விளை​யாடு​கிறேன், எனவே அவருக்​கும் அதை அர்ப்​பணிக்​கிறேன். இயற்கையிலேயே எனது உடல்​வாகு எனது ஷாட்​டு​களில் அதிக சக்​தியை வெளிப்​படுத்​தும் வித​மாகவே அமைந்துள்ளது.

எனது மரபணுக்​கள் அப்​படி அமைந்​திருக்​கின்​றன. அதோடு நான் கடுமை​யாக​வும் பயிற்சி செய்​கிறேன். தினமும் சுமார் 100 முதல் 150 சிக்​ஸர்​களை அடிக்​கிறேன். கடந்த ஐந்​து-ஆறு மாதங்​களாக நான் மேற்​கொண்ட தீவிரமான பயிற்​சி​தான் இப்​போது என்​னுள் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்​துள்​ளது. ஹெலி​காப்​டர் ஷாட்டை நான் சிறு​வய​திலிருந்தே பயிற்சி செய்து வருகிறேன்.

தோனி அந்த ஷாட் வாயி​லாக ஆட்​டத்தை முடிக்​கும் விதம் எனக்கு மிக​வும் பிடிக்​கும். அவர், யார்க்​கர் பந்​தைக் கூட சிக்​ஸ​ராக மாற்​றி​விடு​வார். அப்​படிப்​பட்ட ஒரு பந்தை நீங்கள் சிக்​ஸருக்கு அனுப்​பி​னால், பந்​து​வீச்​சாளர் அடுத்த பந்தை எப்​படி வீசுவது என்று குழப்​பம் அடைந்து வேறு எதை​யா​வது செய்ய முயற்​சிப்​பார். பயிற்​சி​யாளர் ஜஸ்​டின் லாங்​கர் என் மீது நம்​பிக்கை வைத்​தார், அந்த நம்பிக்கையை நான் நிறைவேற்ற விரும்​பினேன்.

கொல்​கத்​தாவுக்கு எதி​ராக நான் ஒரு​போதும் ஆட்​டத்​தின் முடிவைப் பற்றி யோசிக்​க​வில்​லை, போட்​டியை கடைசிவரை எடுத்​துச் சென்று வெற்​றிக்கு நெருக்​க​மாக கொண்டு வர வேண்​டும் என்று விரும்​பினேன். இரண்டு ஆண்​டு​களுக்கு முன்பு வரை நான் எப்​போதும் அவசரப்பட்டு விளை​யாடு​வேன். ஆனால், கடந்த இரண்டு வருட பயிற்​சி​யின் மூலம், என்​னால் எவ்​வளவு நேரம் களத்தில் இருக்க முடி​யுமோ அவ்​வளவு நேரம் விளை​யாட வேண்​டும் என்​பதை மனதில் பதித்​துக்​கொண்​டேன்.

போட்​டியை நான் இறு​திவரை எடுத்​துச் சென்​றால், நிச்சயம் வெற்றி பெறு​வேன். நம்மை சுற்றி நிறைய விஷயங்​கள் நடந்​து​கொண்​டிருக்​கும் போது, நான் 5 விநாடிகள் அமை​தி​யாக இருந்​து, இரண்டு மூன்று முறை ஆழமாக மூச்சை இழுத்து விட விரும்​புவேன்.

பிறகு பந்தை மட்​டும் கவனித்து விளை​யாடு​வேன். கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் கடைசி ஓவரில் பந்து​வீச்​சாளர் ஏதேனும்​ ஒரு பந்​தில்​ நிச்​ச​யம்​ தவறு செய்வார்​ என்​று எனக்​குத்​ தெரி​யும்​, அந்​தப்​ பந்​தை ​நான்​ சிக்​ஸருக்​கு விரட்​ட வேண்​டும்​ என்​ப​தில்​ உறு​தி​யாக இருந்தேன்​. இவ்​​வாறு முகுல்​ சவுத்​ரி கூறி​னார்​.