惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
Tailwind CSS Blog
Engineering at Meta
Engineering at Meta
MongoDB | Blog
MongoDB | Blog
爱范儿
爱范儿
小众软件
小众软件
MyScale Blog
MyScale Blog
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
V2EX
量子位
云风的 BLOG
云风的 BLOG
A
About on SuperTechFans
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
Martin Fowler
Martin Fowler
C
Check Point Blog
月光博客
月光博客

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...
எஸ்.முஹம்மது ராஃபி · 2026-04-12 · via hindutamil

Updated on: 

பரமக்குடி: “விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் இணையதளங்களில் வெளியானதற்கு, நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி கதிரவன், முதுகுளத்தூர் ராஜகண்ணப்பன், திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் ஆகியோரை ஆதரித்து இன்று (ஏப்.12) பரமக்குடியில் மாலை 4 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பரமக்குடியில் உள்ள தனியார் மஹாலில் தங்கினார். பின்னர், இன்று பரமக்குடியில் நடைபயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி காந்தி சிலை, பெரிய பஜார் பகுதிகளில் பொதுமக்களிடமும் , எமனேஸ்வரம் பகுதியில் பொது மக்களையும் சந்தித்து திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பொதுமக்கள் கைகுலுக்கி, செல்ஃபி, புத்தகங்களை வழங்கியும் மகிழ்ந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் தினமும் நடப்பது வாக்காளர்களை சந்திப்பதற்காக இல்லை. எப்போதும் காலையில் நான் நடப்பேன். சென்னையில் இருந்தாலும் சரி, எந்த ஊருக்குப் போனாலும் சரி காலையில் நடப்பது, எனது வழக்கம் . அப்போது நான் மக்களை சந்திக்கிறேன். தேர்தல் நேரமாக தற்போது இருப்பதால் நடைப் பயிற்சியின் போது மக்கள் வந்து என்னைச் சந்திக்கிறார்கள். உங்களுக்குத் தான் ஓட்டு என சொல்கிறார்கள். அது எனக்கு உற்சாகமாக உள்ளது. அதனால் நான் கொஞ்சம் கூடுதலாகவே நடக்கின்றேன்.

எடப்பாடி பழனிச்சாமி தோல்வியினுடைய விரக்தியில் இருக்கிறார். அந்த விரக்தியில் திமுக தலைவர்கள் பற்றி அவதூறாக பேசி வருகிறார். தமிழ் நாட்டுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி என்று நான் கூறி வருவதற்கு காரணம். அதிமுகவின் முகமுடி போட்டு தானே பாஜக உள்ளே வருகிறது. அதனால் தான் அப்படிக் கூறுகிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறித்து கண்டித்து அறிக்கை அளித்துள்ளேன். மேலும் டி.ஆர். பாலு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் இணையதளங்களில் வெளியானதற்கும், நடிகர் விஜய் திமுகவிற்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று கூறி வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நோ கமெண்ட்ஸ். அதைப் பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினார்.