惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Vercel News
Vercel News
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு?
ந. சரவணன் · 2026-04-12 · via hindutamil

திருப்பத்தூரைச் சுற்றியுள்ள மலை பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் செழிப்பாக வளர்ந்திருப்பதாலும், தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தன கிடங்கு திருப்பத்தூரில் அமைந்திருப்பதால் திருப்பத்தூருக்கு ‘சந்தன மாநகரம்’ என மற்றொரு பெயர் உண்டு.

இத்தொகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் உள்ளது. குறிப்பாக, சிறுதானியம் விளைச்சல் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. விவசாயம் மட்டுமின்றி ஊதுபத்தி தயாரிப்பு இங்கு அதிகமாக செய்யப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் ஊதுபத்தி உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தொகுதியில் 50-வது தொகுதியாக திருப்பத்தூர் உள்ளது. திருப்பத்தூர் தொகுதியை பொருத்த வரை கடந்த காலங்களில் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும், சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி அதிக முறை வெற்றி பெற்றிருப்பதால் இது திமுகவின் கோட்டை என கூறப்படுகிறது. மாவட்டத் தின் தலைநகரமாக திருப்பத் தூர் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் ஒரு நகராட்சி, திருப்பத்தூர், கந்திலி என 2 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளடக்கி யுள்ளன. இந்த 2 ஊராட்சி ஒன்றியங்களில் 54 கிராம ஊராட்சிகள் உள்ளன.

திருப்பத்தூர் தொகுதியை பொறுத்தவரை வெற்றி, தோல்வியை வன்னியர்களே முடிவு செய்கின்றனர். இத்தொகுதியில் வெள்ளாள கவுண்டர்கள் 25 சதவீதமும், வன்னியர்கள் 25 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 20 சதவீதமும், முதலியார் மற்றும் வேளாளர்கள் 10 சதவீதமும், முஸ்லீம்கள் 10 சதவீதமும், மலைவாழ் மக்கள் 10 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 3 சதவீதமும், செட்டியார், ரெட்டியார் உள்ளிட்ட சமூகத்தினர் 2 சதவீதமும் உள்ளனர்.

திருப்பத்தூர் தொகுதியில் கடந்த 2016 மற்றும் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நல்லதம்பி தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்று தற்போது 3-வது முறையாக திமுக சார்பில் மீண்டும் களம் காண்கிறார்.

அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான அமமுக சார்பில் ஞானசேகரன் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அதிமுகவில் இருந்து சமீபத்தில் வெளியேறிய டாக்டர் திருப்பதியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆறுமுகம் போட்டியிடுவதால் 4 முனை போட்டி இத்தொகுதியில் நிலவுகிறது.

இவர்கள், மட்டுமின்றி தமிழக வாழ்வுரிமை கழகம் உட்பட 20 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காததால் வெறுப்படைந்து அக்கட்சியில் இருந்து வெளியேறிய டாக்டர் திருப்பதி, தொகுதியில் தனக்கு இருக்கும் தனி செல்வாக்கையும், தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்து வசதிகளும் மக்களுக்கு செய்து தரப்படும் எனக்கூறி தங்களது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்.

நாம் தமிழர் கட்சியினர் இந்த தேர்தலிலும் வழக்கமாக தங்களது பிரச்சாரத்தை நடத்தி வந்தாலும், கனிசமான வாக்குகளை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட நாள் கோரிக்கை

* திருப்பத்தூர் தொகுதி விவசாயம் சார்ந்த தொகுதி என்பதால் இங்கு மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைத்து தர வேண்டும்.

* இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய சிப்காட் அமைத்து தர வேண்டும்.

* போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

* திருப்பத்தூர் பெரிய ஏரியை தூர்வாரி படகு சவாரி அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.

* திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும்.

* ஊதுபத்தி தொழிலை மேம்படுத்த வேண்டும்.

* திருப்பத்தூரில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

* நகர பகுதியிலும் கிராமப்புற பகுதியிலும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

* கந்திலியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் கொண்டு வர வேண்டும்.

* தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள்

1951 - ஈ.எல்.ராகவ முதலியார் - சுயேட்சை

1957 - ஆர்.சி.சமன்னகவுண்டர் - காங்கிரஸ்

1962 - கே.திருப்பதி - திமுக

1967 - சி.கே.சின்னராஜி - திமுக

1971 - ஜி.ராமசாமி - திமுக

1977 ப.சுந்தரம் - திமுக

1980 - ப.சுந்தரம் - திமுக

1984 - ஒய்.சண்முகம் - காங்கிரஸ்

1985 - ச.ப.மணவாளன் (இடைத்தேர்தல்) - காங்கிரஸ்

1989 - ப.சுந்தரம் - திமுக

1991 - ஏ.கே.சி.சுந்தரவேல் - அதிமுக

1996 - கோ.சண்முகம் - திமுக

2001 - டி.கே.ராஜா - பாமக

2006 - டி.கே.ராஜா - பாமக

2011 - கே.ஜி.ரமேஷ் - அதிமுக

2016 - அ.நல்லதம்பி - திமுக

2021 - அ. நல்லதம்பி - திமுக

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,12,703

பெண் - 1,13,959

மூன்றாம் பாலினத்தவர் - 29

மொத்த வாக்காளர்கள் - 2,26,691