惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
云风的 BLOG
云风的 BLOG
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
The Blog of Author Tim Ferriss
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
小众软件
小众软件
博客园_首页
博客园 - 聂微东
罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
U
Unit 42
N
Netflix TechBlog - Medium
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - Franky
D
DataBreaches.Net
Last Week in AI
Last Week in AI

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர வ...
மோகன் கணபதி · 2026-04-11 · via hindutamil

Updated on: 

சென்னை: ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என்று தெரிவித்துள்ள தமிழக பாஜக, படம் வெளியானது குறித்து சிபிஐ விசாரணை கோர தயாரா என்றும் சவால் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “’ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானதால் ரூ.500 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றி பரிதாப வாக்குகளைப் பெற விஜய் நாடகம் ஆடுகிறார்.

பாஜக மீதும் மத்திய அமைச்சர் எல். முருகன் மீதும் பொய் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் பட்டியல் சமூக பிரதிநிதியாக நேர்மையோடு செயல்படும் மத்திய அமைச்சர் எல். முருகனை அவமதிக்கும் நோக்கத்துடன், அவதூறு பரப்பிவிட்டு அம்பேத்கர் தான் எங்கள் கொள்கை தலைவர் என்று கூறுவதற்கு விஜய் வெட்கப்பட வேண்டும். இது குறித்து சிபிஐ விசாரணையை கோர விஜய் தயாரா?

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக காவல்துறையில் இதுவரை ஏன் புகார் அளிக்கப்படவில்லை? சென்சார் போர்டிலும் ஏன் முறையிடவில்லை?

ஜனநாயகம் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு மத்திய அமைச்சர் முருகனும் காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறி இருப்பது வடிகட்டிய பொய். அவர் மீது பாஜக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.

எம்ஜிஆரையும் விஜயையும் இணைத்து பேசி அதிமுக ஓட்டுக்களை பிரிக்கலாம் என்றும், ஜனநாயகன் படம் விவகாரத்தில் பாஜகவிற்கு எதிராக அவதூறு பேசி வாக்காளர்களை குழப்பி ஆதாயம் தேடலாம் என்றும் ஆதவ் அர்ஜுனா கருதுகிறார். கீழ்த்தரமான அவரது இந்த பகல் கனவு பலிக்காது.

திமுகவுக்கு ஓட்டு போடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.