惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
J
Java Code Geeks
有赞技术团队
有赞技术团队
GbyAI
GbyAI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
阮一峰的网络日志
阮一峰的网络日志
Microsoft Security Blog
Microsoft Security Blog
IT之家
IT之家
G
Google Developers Blog
月光博客
月光博客
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - Franky
腾讯CDC
V
Visual Studio Blog
博客园 - 【当耐特】
D
Docker
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தர...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

வீர தீரச் செயலுக்காக ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு முதல்வர் விஜய் ரூ.48 லட்சத்துக்கான காசோலையை வழங்கிப் பாராட்டினார். உடன் படைவீரர் நலத் துறை அமைச்சர் சரத்குமார், ராணுவ வீரரின் குடும்பத்தினர்.

Updated on: 

சென்னை: வீர தீரச் செயலுக்​காக இந்​திய அரசின் ‘கீர்த்தி சக்​ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீ​னாட்சி சுந்​தரத்தை தலை​மைச் செயல​கத்​துக்கு அழைத்து முதல்​வர் விஜய் பாராட்​டி​னார். தமிழக அரசு சார்​பில் அவருக்கு ரூ.48 லட்​சத்​துக்​கான காசோலையை வழங்கி கவுர​வித்​தார்.

தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீ​னாட்சி சுந்​தரம், இந்​திய ராணுவத்​தின் பீரங்கி படைப் பிரி​வில் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2024 டிச.19-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​களுக்கு எதி​ராக நடை​பெற்ற அதிரடி தாக்​குதலின்​போது, தீவிர​வா​தி​கள் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டில் இவரது முகம், தோள்​பட்​டை​யில் பலத்த காயம் ஏற்​பட்​டது. எனினும், தனது உயிருக்கு ஏற்​பட்ட ஆபத்​தை​யும் பொருட்​படுத்​தாமல், கடமை உணர்​வுடன் தொடர்ந்து களத்​தில் போராடி தீவிர​வா​தி​களை வீழ்த்​தி​னார்.

அவரது வீர தீரச் செயலைப் பாராட்​டி, இந்​தி​யா​வின் 2-வது உயரிய அமை​திக்​கால வீர விரு​தான ‘கீர்த்தி சக்​ரா’ விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் கடந்த ஜூன் 8-ம் தேதி நடை​பெற்ற விழா​வில் அவருக்கு இந்த விருதை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்கி கவுர​வித்​தார். மீனாட்சி சுந்​தரத்​தின் நாட்​டுப்​பற்​றும், துணிச்​சலும் தமிழ் மண்​ணுக்​குப் பெருமை சேர்த்​ததுடன், இளம் தலை​முறை​யினரிடம் வீர உணர்​வு, தேசப் பற்றைவளர்க்​கும் வித​மாக அமைந்து பாராட்​டு​களை பெற்​றது.

இந்​நிலை​யில், ‘கீர்த்தி சக்​ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்​தரத்தை நேற்று சென்னை தலை​மைச் செயல​கத்​துக்கு அழைத்து முதல்​வர் விஜய் பாராட்​டி​னார். அவருக்கு தமிழக அரசு சார்​பில் ரூ.48 லட்​சத்​துக்​கான காசோலையை வழங்கி கவுர​வித்​தார்.

<div class="paragraphs"><p>ராணுவ வீரரின் குழந் தையை மடியில் வைத்துக் கொஞ்சிய முதல்வர்.</p></div>

ராணுவ வீரரின் குழந் தையை மடியில் வைத்துக் கொஞ்சிய முதல்வர்.

இந்த சந்​திப்​பின் ​போது, அவரது குடும்​பத்​தினரிடம் முதல்​வர் கலந்​துரை​யாடி​னார். மீனாட்சி சுந்​தரத்​தின் குழந்​தையை கையில் வாங்​கி, முதல்​வர் இருக்​கை​யில் அமர்ந்​த​வாறே தனது மடி​யில் வைத்து கொஞ்சி மகிழ்ந்​தார்.

இந்த நிகழ்​வில் முன்​னாள் படைவீரர் நலத் துறை அமைச்​சர் சரத்​கு​மார், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்​கர், முன்​னாள் படைவீரர் நலத் துறை இயக்​குநர் சுந்​தர​வல்லி, இணை இயக்​குநர்​ மேஜர்​ எம்​.சுரேஷ் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.