惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
博客园 - Franky
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
小众软件
小众软件
Microsoft Security Blog
Microsoft Security Blog
Last Week in AI
Last Week in AI
Vercel News
Vercel News
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
爱范儿
爱范儿
J
Java Code Geeks
博客园 - 叶小钗
Engineering at Meta
Engineering at Meta
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
100 நாட்களாக பிரேத கிடங்கில் இருக்கும் மானாமதுரை இளைஞர் உ...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

மதுரை: ​போலீ​ஸில் பிடிப​டா​மல் இருக்க தப்​பிய​போது தவறி விழுந்து காயமடைந்து உயி​ரிழந்ததாக கூறப்படும் மானாமதுரை இளைஞரின் உடல் 100 நாட்களாக பிரேத கிடங்கில் உள்ள நிலையில், உறவினர்கள் உடலைப் பெற்று அடக்கம் செய்ய உயர் நீதி​மன்​றம் கெடு விதித்​துள்ளது.

சிவகங்கை மாவட்​டம், மானாமதுரை​யில் சாலை​யில் நடந்து சென்​றவர்​களை அரி​வாளால் வெட்​டிய​தாக ஆகாஷ் (26) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். முன்​ன​தாக, போலீ​ஸில் பிடிப​டா​மல் இருக்க தப்பி ஓடிய​போது, ஆகாஷ் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​ட​தாகக் கூறி, சிகிச்​சைக்​காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

ஆனால், ‘ஆகாஷை போலீ​ஸார் கொலை செய்​துள்​ளனர். இதனால் போலீ​ஸார் மீது கொலை வழக்​குப் பதிய வேண்​டும், வழக்கு விசா​ரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்​டும், இழப்​பீடு வழங்க வேண்​டும்’ என வலி​யுறுத்​தி, அவரது தந்தை ராஜேஷ்கண்​ணன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் வழக்கு தொடர்ந்​தார். இந்த மனு நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி முன் விசா​ரணைக்கு வந்​த​போது, ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டது.

வழக்​கில் எஸ்​சி, எஸ்​டி வன்​கொடுமை பிரிவை​யும் சேர்க்​கவும் நீதிபதி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, ஆகாஷ் உடல் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டது. இருப்பினும், அவரது பெற்​றோர் உடலை வாங்க மறுத்​து​விட்​டனர். இதனால், ஆகாஷின் உடல் 100 நாட்​களாக மதுரை அரசு மருத்​து​வக் கல்​லூரி பிரேதப் பரிசோதனைக் கிடங்​கில் வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் நீதிப​தி, காவல்மரண வழக்​கு​களில் அதி​காரிகள் விதி​முறை​களை கடைபிடிக்க வேண்​டும். ஆகாஷ் மரணம் தொடர்​பான வழக்கை சிபிசிஐடி விரைந்து விசா​ரித்து குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டார். இந்த மனு நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி முன் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி, மனு​தா​ரர் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன.

இருப்​பினும், தற்​போது வரை மனு​தா​ரர் அவர் மகன் உடலை பெறாமல் இருப்​பது ஏற்​கத்​தக்​கது அல்ல. எனவே, ஆகாஷின் உடலை அவர் பெற்​றோர் இன்று (நேற்​று) மாலை 5 மணிக்​குள் பெற்​றுக்​கொள்ள வேண்​டும். தவறி​னால் நாளை (இன்​று) போலீ​ஸாரே ஆகாஷ் உடலை அடக்​கம் செய்ய உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும். விசா​ரணை 16-ம் தேதிக்கு (இன்​றைக்​கு) தள்​ளிவைக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டார்.