惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
G
Google Developers Blog
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
H
Help Net Security
WordPress大学
WordPress大学
博客园_首页
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
罗磊的独立博客
I
InfoQ
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
J
Java Code Geeks
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை | போலி பட்டா தயாரித்து ரூ.8 கோடி நிலம் மோசடி: ரியல...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: ​போலி பட்டா மூலம் ரூ.8 கோடி மதிப்​புள்ள நிலத்தை மோசடி செய்​த​தாக ரியல் எஸ்​டேட் அதிபர், மனை​வி​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்னை மாதவரத்​தைச் சேர்ந்​தவர் சுந்​தரி (74).

இவருக்​குச் சொந்​த​மான ரூ.8 கோடி மதிப்​புள்ள 21.5 சென்ட் நிலம் மாதவரம் லோட்​டஸ் காலனி முதலா​வது தெரு​வில் உள்​ளது.

இந்த நிலத்தை, மாதவரத்​தைச் சேர்ந்த கார்த்​திக்​(36), அவரது தாயார் ராதா(56), அதே பகு​தி​யைச் சேர்ந்த ரியல் எஸ்​டேட் அதிபர் அருண் பிர​சாத்​(29) மற்​றும் அவரது மனைவி பிரதீ​பா(30) ஆகியோர் கூட்​டாக சேர்ந்து போலி பட்டா தயாரித்​துள்​ளனர்.

பின்​னர், அந்த போலி ஆவணங்​களைக் கொண்​டு, சுந்​தரி​யின் இடத்தை தங்​களது பெயருக்கு கிரையப் பத்​திரங்​களாக பதிவு செய்​துள்​ளனர். அது​மட்​டுமின்​றி, அந்த பத்​திரங்​களை ஒரு தனி​யார் நிதி நிறு​வனத்​தில் அடமானம் வைத்​து, பல லட்​சம் ரூபாய் பெற்று சொத்​தில் வில்​லங்​கத்​தை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளனர்.

இதுகுறித்து, நிலத்​தின் உரிமை​யாளர் சுந்​தரி, சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் அளித்​தார். அவரது உத்​தர​வின்​பேரில், மத்​திய குற்​றப்​பிரிவு கூடு​தல் காவல் ஆணை​யர் ராதி​கா, துணை ஆணை​யர் கீதாஞ்​சலி, உதவி ஆணை​யர் காயத்ரி தலை​மை​யில் மத்​திய குற்​றப்​பிரி​வின் போலி ஆவண புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்​தனர்.

இதில், கார்த்​திக், மாதவரத்​தில் உள்ள ஒரு சூப்​பர் மார்க்​கெட்​டில் வேலை செய்து வரு​வதும், அருண் பிர​சாத் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​வதும், இவர்​கள் அனை​வரும் கூட்டு சேர்ந்து மூதாட்டியின் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள நிலத்தை போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்​ததும் உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த கார்த்​திக், ராதா, அருண் பிர​சாத், பிரதீபா ஆகிய 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய மேலும் சிலரை தனிப்​படை போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.