



























Updated on:
சென்னை: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ‘‘சாதியப் பிரிவினைகளைத் தடுக்கும் வகையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் கையில் கயிறு கட்டி வரக்கூடாது.
எந்தவிதமான மத அடையாளங்களையும் அணிந்துவரக் கூடாது’’ என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். பள்ளிகளில் சாதிய மோதல்களைத் தடுக்கும் வகையில், முன்னாள் நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை அமல்படுத்த ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில்தான் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அவரது பரிந்துரைகளை திமுக அரசே நடைமுறைப்படுத்தா மல் புறக்கணித்தது. அதை தவெக அரசு அமல்படுத்த நினைப்பது கண்டனத்துக் குரியது. பள்ளிகளில் சாதி ரீதியாக பிரிவினை கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, மத அடையாளங்களை அணிந்துவரக் கூடாது என்பதை ஏற்க முடியாது.
கயிறு கட்டி வரவேண்டாம் என கூறும் அரசு, முஸ்லிம் மாணவர்கள் குல்லா, மாணவிகள் புர்கா அணிந்து வருவதற்கும், கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் சிலுவை அணிந்து வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்குமா? சாதி கயிறுகளை காரணம் காட்டி, சுவாமி கயிறுகளை தடை செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, ‘மத அடையாளங்களை அணிந்து கொண்டு பள்ளிகளுக்கு வரக்கூடாது’ என்ற அறிவிப்பை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。