

























சிடிஆர். நிர்மல்குமார் | கோப்புப் படம்
Updated on:
சென்னை: “ஒவ்வொரு வருடமும் மின் கட்டணத்தை ஆண்டுக்கு அதிகபட்சமாக 6% உயர்த்திக் கொள்ளாலாம் என திமுக ஆட்சியில் கொண்டு வந்த பாலிசியே தவறானது. இதனால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மின் கட்டண உயர்வு குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ ஆண்டுதோறும் மின் கட்டணத்தை எவ்வாறு உயர்த்த வேண்டும் என 2022-ல் போடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்துவிட்டு, முடிவெடுக்கப்படும். ஒவ்வொரு வருடமும் மின் கட்டணத்தை ஆண்டுக்கு அதிகபட்சமாக 6% உயர்த்திக் கொள்ளாலாம் என திமுக ஆட்சியில் கொண்டு வந்த பாலிசியே தவறானது. இதனால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
சிறைச்சாலைகளில் தேவையில்லாமல் டிரன்ஸ்பர்கள் நடப்பதாக புகார் வந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். வெளிப்படைத் தன்மையுடன் இனி டிரான்ஸ்பர்கள் நடக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。