





















விம்கோ நகர்- விமான நிலையம் நோக்கி வந்த மெட்ரோ ரயில், திருவொற்றியூர் நிலையத்தில் நேற்று மாலை 5:00 மணி அளவில் நின்றபோது, கதவுகள் திறக்கவில்லை. இதற்கிடையே, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தொழில்நுட்ப அலுவலர்கள், கோளாறை சரி செய்தனர்.
மேலும், இதே பிரச்சினை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக, சில நிமிடங்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதனால், இத்தடத்தில், 15 முதல் 20 நிமிடங்கள் வரை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால், பயணிகள் அவதிப்பட்டனர். நெரிசல் மிகுந்த நேரம் (பீக் அவர்ஸ்) என்பதால், அடுத்தடுத்த மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணிகள் கூட்டம் இருந்தது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。