惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏
Jina AI
Jina AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
美团技术团队
雷峰网
雷峰网
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
U
Unit 42
C
Check Point Blog
S
SegmentFault 最新的问题
Martin Fowler
Martin Fowler
Stack Overflow Blog
Stack Overflow Blog
云风的 BLOG
云风的 BLOG
L
LangChain Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
罗磊的独立博客
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மோட்டார் வாகன ஆய்வாளர், விஏஓ உட்பட லஞ்சம் வாங்கிய 7 அதிகா...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர்.

தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களி​லும் லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கடந்த ஒரு வார​மாக தீவிர நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டனர். திருப்​பூர் மாநக​ராட்சி மண்​டலம்-3 இளநிலை பொறி​யாளர் சுப்​பிரமணி​யன், வடி​கால் பணிக்கு அளவீட்​டுப் பதிவேடு தயாரிப்​பது மற்​றும் ஏற்​க​னவே முடிக்​கப்​பட்ட சாலைப் பணி​களுக்​காக ரூ.5 லட்​சம் லஞ்​சம் வாங்​கிய​போது கைது செய்​யப்​பட்​டார். அவரது வீட்​டில் கணக்​கில் வராத ரூ.13 லட்​சம் பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

தூத்​துக்​குடி மாவட்​டம் கீழ​திருச்​செந்​தூர் கிராம நிர்​வாக அலு​வலர் சரவணன் (ரூ.10 ஆயிரம்), தேனி கிராம நிர்​வாக அலு​வலர் கார்த்​திக் (ரூ.5 ஆயிரம்), திண்​டுக்​கல் பிர்கா சர்​வேயர்​கள் முகமது இப்​ராகிம் (ரூ.5 ஆயிரம்), மீனாம்​பிகை (ரூ.10 ஆயிரம்) பட்டா பெயர் மாற்​றம் செய்ய லஞ்​சம் பெற்​ற​போது பிடிபட்​டனர்.

அதே​போல, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் 215 நெல் மூட்​டைகளுக்​கான கட்​ட​ணப் பட்​டியலை அனுப்ப, ஒரு மூட்​டைக்கு ரூ.50 வீதம் ரூ.10,750 லஞ்​சம் பெற்ற கட்​ட​ணப் பட்​டியல் வசூலிப்​பாளர் சவுந்​தர் கைது செய்​யப்​பட்​டார். திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் லாரிக்கு தகு​திச் சான்​றிதழ் புதுப்​பித்துதர ரூ.5,800 லஞ்​சம் கேட்ட மோட்​டார் வாகன ஆய்​வாளர் சண்​முக ஆனந்த் மற்​றும் அவருடன் இருந்த ஒரு நபர் கைது செய்​யப்​பட்​டனர்.

பழைய ஊழல் வழக்​கு​களை விசா​ரித்த மாவட்ட முதன்மை மற்​றும் அமர்வு நீதி​மன்​றங்​கள் குற்​ற​வாளி​களுக்கு கடும் தண்​டனை​களை வழங்​கி​யுள்​ளன. விருத்​தாசலம் தாலுகா அலு​வலக சர்​வேயர் அண்​ணாதுரை, கிராம உதவி​யாளர் கண்​ணன் ஆகியோ​ருக்கு லஞ்ச வழக்​கில் 3 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை​யும், மொத்​தம் ரூ.10,000 அபராத​மும் விதித்து கடலூர் நீதி​மன்​றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்​பளித்​தது. மாத்​தூர் வட்​டார வளர்ச்சி அலு​வலக ஊரக நல அலு​வலர் இந்​தி​ராணிக்கு லஞ்ச வழக்​கில் 7 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை​யும், ரூ.4,000 அபராத​மும் வி​தித்து கிருஷ்ணகிரி நீதி​மன்​றம் கடந்த 9-ம்​ தேதி தீர்ப்​பு வழங்​கி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.