惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
博客园 - 司徒正美
J
Java Code Geeks
aimingoo的专栏
aimingoo的专栏
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
腾讯CDC
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
Jina AI
Jina AI
I
InfoQ
雷峰网
雷峰网
The Cloudflare Blog
美团技术团队
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பயணம் எனக்கொரு போதிமரம் | புதிய வானம் புதிய பூமி
Guest Author · 2026-06-14 · via hindutamil

Updated on: 

வாகனத்தின் ஜன்னலோரம் அமர்ந்து பகல் பொழுதில் கடந்து செல்லும் ஊர்களையும் மக்களையும் அவர்களது வாழ்க்கையையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்துக்கொண்டே செல்வது சுகமான அனுபவம். அப்படித்தான் இந்தக் கோடை விடுமுறைக்கு கன்னியாகுமரி சென்றோம். அங்கு மக்களின் பேச்சு, உணவு, பழகுமுறைகளைப் பார்த்து ரசித்தோம். ஒளிப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த திருவள்ளுவர் சிலையை நேரில் கண்டு பிரமித்தபோதுதான் அதன் உண்மை உயர்வை உணர முடிந்தது.

விவேகானந்தர் கடலில் நீந்திச் சென்று பாறையில் அமர்ந்து தவமிருந்த இடம் என்பதை நினைக்கும்போதே விவேகானந்தர் நினைவு இல்லத்தில் இருந்த எங்களுக்குச் சிலிர்த்தது. தியானம் தெரியாவிட்டாலும் கண்களை மூடி அமர்ந்திருந்தபோது நிஜமாகவே மனதில் அமைதி சூழ்ந்தது, ஆனந்தமானது.

அதிகாலைச் சூரிய உதயம் பார்க்கச் சென்றோம். கடலும் காற்றும் ரம்மியமாக மனதை மயக்கின. ஆனால், சூரிய உதயத்துக்குக் காத்திருந்து, காத்திருந்து ஏமாந்தோம். மழை வரும் போலிருந்ததால் மேகமூட்டத்தில் சூரியன் தலைகாட்டவில்லை. சலித்துக் கொண்டபோது எங்களோடு வந்த ஒரு சுட்டிப் பையன் எதார்த்தமாகச் சொன்னான்: “இன்னைக்கு சண்டேதானே. அதான் ‘சன்’னும் லீவு எடுத்திடுச்சி போல”. எல்லாரும் சிரித்துவிட்டோம்.

சுற்றுலாத் தலங்களில் பல்வேறு தரப்பட்ட மக்களும் கூடுவதால் அவர்களோடு பேசி, பழகக் கிடைக்கும் வாய்ப்பு ஒரு வரம். அதையும் அனுபவித்தோம். மறக்காமல் மக்ரூன், பலாப்பழ சிப்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டோம். பயணம்தான் உலகை உணர்த்தி மனதை விசாலப்படுத்தும். பொது அறிவை வளர்த்து மனித நேயத்தைப் பெருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வோமா தோழிகளே?

- அ. யாழினி பர்வதம், சென்னை.