



















Updated on:
புதுடெல்லி: ராணுவத்தின் அடுத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரத் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜுன் 30-ம் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்.
ராணுவத் தளபதியாக இருக்கும் ஜெனரல் உபேந்திர திவிவேதி இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதைடுத்து ராணுவ துணைத் தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்தை புதிய தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது.
ராணுவத்தில் சுமார் 40 ஆண்டு காலமாக பணியில் இருக்கும் தீரஜ் சேத், பல பிரிவுகளில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். இவர் கடந்த 1986-ம் ஆண்டு ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார். காஷ்மீரில் தீவிரவாத ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனராலாக பதவி உயர்வு பெற்ற பின் இவர், ராணுவத்தின் வான் பாதுகாப்பு பிரிவான சுதர்ஸன சக்கர படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினார். தென்மேற்கு மற்றும் தென் மண்டலங்களிலும் இவர் தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
அங்கோலா நாட்டில் ஐ.நா படை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பிரான்ஸின் பாரீஸில் இவர் ராணுவ உயர் அதிகாரி பயிற்சியில் பங்கேற்றுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。