惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
有赞技术团队
有赞技术团队
Jina AI
Jina AI
H
Help Net Security
D
Docker
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
罗磊的独立博客
MyScale Blog
MyScale Blog
N
Netflix TechBlog - Medium
B
Blog RSS Feed
Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MongoDB | Blog
MongoDB | Blog
美团技术团队
M
MIT News - Artificial intelligence
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 司徒正美
Microsoft Security Blog
Microsoft Security Blog
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டு...
2026-05-16 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என்று முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் விஜய்: 5 மாநிலங்​களில் தேர்​தல் முடிந்​த​பின் பெட்​ரோலியப் பொருட்​களின் விலையை உயர்த்​தி​யிருப்​பது ஏற்​புடையதல்ல. இந்த விலை உயர்வு இருசக்கர வாக​னங்​கள் மற்​றும் பேருந்​துகளை பயன்​படுத்​தும் ஏழை, எளிய, நடுத்தர மக்​களின் மாத வரு​வா​யில் பெரு​மளவு பாதிப்பை ஏற்​படுத்​தும்.

அன்​றாடப் பொருட்​களின் விலை உயர்​வுக்கு காரண​மாக அமைவதுடன் ஏழை, எளிய மக்​களின் வாங்​கும் திறனை​யும் பாதிக்​கும். குறு, சிறு தொழில் நிறு​வனங்​களுக்கு உற்​பத்​திச் செல​வும் அதி​கரிப்​ப​தால், சந்​தை​யிலும், ஏற்​றும​தி​யிலும் மந்​தநிலை ஏற்பட வாய்ப்​புள்​ளது.

எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்​கள் மற்​றும் குறு, சிறு தொழில் நிறு​வனங்​களைப் பாதிக்​கும் பெட்​ரோலியப் பொருட்​களின் விலை உயர்வை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப்​பெற வேண்​டும்

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தில் புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு மாற்​றம் வேண்​டும் என்ற கொள்​கையை அடிப்​படை​யாக வைத்து செயல்​படு​கிறதென்று சொல்​கிறார்​கள். பெட்​ரோலுக்​கும், டீசலுக்​கும், எரி​வாயு சிலிண்​டருக்​கும் உள்ள விற்​பனை வரியை குறைக்க வேண்​டும் என்று கேட்​டுக்​கொள்​கிறேன்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: ஏற்​கெனவே அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை உயர்​வால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இந்த எரிபொருள் விலை உயர்வு மேலும் பணவீக்​கத்தை அதி​கரித்​து, நடுத்தர மற்​றும் ஏழை மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை பெரிதும் பாதிக்​கும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் சண்​முகம்: பெட்​ரோல், டீசல் விலை உயர்வு மக்​களின் அன்​றாட வாழ்க்​கை​யில் சங்​கி​லித் தொடர் போன்ற பாதிப்​பு​களை உரு​வாக்​கும். புயலில் சிக்​கிய படகு போல குடும்​பங்​கள் தள்​ளாடும் நிலை ஏற்​படும். மத்​திய அரசு இந்த விலை உயர்வை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல் விலை ஏற்​கெனவே அதி​க​மாக உள்​ளன. இத்​தகைய சூழலில் கச்சா எண்​ணெய் விலை உயர்​வின் தாக்​கத்தை இயன்​றவரை எண்​ணெய் நிறு​வனங்​களும், மத்​திய அரசும் தாங்​கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்​திருக்க வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: பெட்ரோல்​-டீசல் விலையை லிட்​டருக்கு ரூ.3 என உயர்த்​தி​யிருப்​ப​தன் மூலம் பாஜக அரசு எளிய மக்​களின் அடிவ​யிற்​றில் கை வைத்​துள்​ளது. இதனால் மிக​வும் பாதிக்​கப்படப் போவது விளிம்​புநிலை​யைச் சார்ந்த ஏழை-எளிய உழைக்​கும் மக்​கள்​தான்.

அமமுக பொதுச்​செய​லா​ளார் டிடி​வி.​தினகரன், தவக தலை​வர் வேல்​முரு​கன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், உள்ளிட்டோரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.