惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
B
Blog
V
V2EX
T
Tailwind CSS Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
The Cloudflare Blog
J
Java Code Geeks
H
Help Net Security
雷峰网
雷峰网
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
F
Fortinet All Blogs
Martin Fowler
Martin Fowler
D
Docker
L
LangChain Blog
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்” - அமைச்சர் அன்...
2026-04-23 · via hindutamil

அமைச்சர் அன்பில் மகேஸ்

படம்- ர.செல்வ முத்துகுமார்

Updated on

2 min read

திருச்சி: “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றிப் பெற்று, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்,” என்று திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

திருச்சி திருவெறும்பூர் வேட்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி வரகனேரி த.செவந்திலிங்கம் முத்திரியர் உயர்நிலைப்பள்ளியில் வாக்களிக்க தனது மனைவி ஜனனியுடன் வந்தார்.

மக்களோடு மக்களாக வரிசையில் 25 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்தார் அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளரிடம் கூறுகையில், “நான் திருவெறும்பூர் தொகுதியில் முதல் முறை போட்டியிட்டபோது என்னை திமுகவினர் அழைத்துச் சென்று வாக்குகள் சேகரிக்க வைத்தனர்.

அதற்கடுத்த தேர்தலில் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது, கடந்த முறை நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று என்னை வழிமறித்து உரிமையுடன் கேட்டனர். ஆனால் தற்போது 3-வது முறையாக நான் போட்டியிடுகிறேன். என்னை பொதுமக்கள் வரவேற்று, நாங்கள் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள். அதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

ஆனாலும் எங்களுக்கு சில தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி கொடுங்கள் என்று உரிமையுடன் மனுக்களை கொடுக்கின்றனர். நான் வெற்றி பெற்ற பிறகு கண்டிப்பாக உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறேன்.

திமுக அரசின் சாதனைகள் மற்றும் நான் தொகுதிக்கு செய்திருக்கின்ற மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்.

தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பார்.” என்றார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு, "திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மக்களுடன் நெருங்கி பழகக் கூடியவர். அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கேற்க கூடியவர். எனவே அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது,” என்றார்.