惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园_首页
大猫的无限游戏
大猫的无限游戏
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
B
Blog
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog
Engineering at Meta
Engineering at Meta
量子位
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
Tailwind CSS Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
N
Netflix TechBlog - Medium
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 叶小钗
博客园 - 【当耐特】
云风的 BLOG
云风的 BLOG
博客园 - Franky
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“அன்று ஸ்டாலின் எங்களிடம் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர...
அ.கோபால கிருஷ்ணன் · 2026-05-26 · via hindutamil

Updated on: 

ராஜபாளையம்: தேர்தல் முடிவுகள் வெளியான மே 4- ம் தேதி மு.க.ஸ்டாலின் எங்களிடம், சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம், புதிய அரசுக்கு 6 மாதம் அவகாசம் வழங்குவோம் என்றார். அன்று அவர் சொன்னதற்கும் இன்று திமுக தலைவர்கள் பேசுவதற்கும் சம்பந்தமில்லை என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.பி.செல்லப்பிள்ளை படத்திறப்பு மற்றும் புத்தக வெளியீட்டு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட, இயக்குனர் சமுத்திரக்கனி புத்தகத்தை பெற்றுக்கொண்டார். 

விழாவில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: தற்போது ஒரு கட்சியில் எம்.எல்.ஏ ஆகி விட்டு, மறுநாளே வேறு கட்சியில் இணையும் அவலம் நிகழ்கிறது. ஆட்சி மாறினால் கட்சி மாறுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் கட்சி மாறுவதில்லை. 

இன்று கரப்பான் பூச்சியை பற்றி உலகமே பேசிக் கொண்டு இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நன்றி. இளைஞர்களுக்கு ஆட்சியாளர்கள் மீது கடும் கோபம் உள்ளது என்பது நமக்கு தெரியாமல் போயிருக்கும். பாஜகவுக்கு எதிராக காக்ரோச் ஜனதா பார்ட்டி தொடங்கப்பட்டு, 2 கோடி பேர் இணைந்து உள்ளனர். 

இளைஞர்களை கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணி என உச்ச நீதிமன்ற நீதிபதி பேசலாமா? அதை கண்டித்து நாடு முழுவதும் இளைஞர்கள் பேரணி நடத்தி உள்ளனர். வேலை கிடைத்து யாராவது வேலைக்கு செல்லாமல் இருக்கிறார்களா? நாட்டில் வேலையின்மை முக்கிய பிரச்சினையாக உள்ளது. கற்ற கல்விக்கு ஏற்ற வேலை இல்லை. 

தமிழக மக்கள் அதிமுக, திமுக இல்லாமல் புதியவர் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பி உள்ளனர். ஆளுங்கட்சிக்கு எதிரான மனப்போக்கு தமிழக மக்கள் மத்தியில் இருந்துள்ளது. 

சில இடங்களில் எங்களது எதிர்ப்பையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம். ஆனால் அந்த எதிர்ப்பு ஆட்சி மாற்றம் வரும் அளவுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறியாமல் விட்டு விட்டோம். எனது ஆவடி தொகுதி எம்.எல்.ஏ யாரென்று எனக்கு இதுவரை தெரியாது. அவர் இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை. யார் என்பதை நாங்கள் பார்ப்பதில்லை மக்கள் நலன் சார்ந்து செயல்படுபவர்களை ஆதரிக்கிறோம். 

இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ள தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். நாங்கள் அன்று அந்த முடிவை எடுக்காவிட்டால் இன்று, குடியரசு தலைவர் ஆட்சி தான் இருந்திருக்கும்.

நேரடியாகவோ மறைமுகமாகவும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது, மக்கள் தீர்ப்பை மதித்து நிபந்தனை அற்ற ஆதரவை தெரிவித்தோம். அமைச்சரவையில் பங்கேற்பது என்று சொன்னால், நமது மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். 34 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு அமைச்சர் இருந்து கொண்டு தங்களது கருத்து சொல்லலாம், ஆனால் எடுபடுமா என்பது தெரியாது. 

இந்த அரசு எந்தவிதமான பொருளாதார கொள்கையை கடைபிடிக்க போகிறது என்பது தெரியவில்லை. தற்போது பயிர்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சில வருத்தமும் உங்களுக்கு இருக்கலாம். அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியாக இருந்தால் தொடர்ந்து தவெகவை ஆதரிப்போம். 

சிலர் நாங்கள் விலகி விடுவோம் என கூறுகின்றனர். எப்போதும் மக்கள் நலன் சார்ந்தே எங்கள் முடிவு இருக்கும். நல்லதை பாராட்டவும், மக்கள் விரோத நடவடிக்கையை சுட்டிக்காட்டவும் தயங்க மட்டோம். அரசியல் பிரிவு செயலாளராக ஜோதிடரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மறுநாளே அந்த நியமனத்தை முதல்வர் ரத்து செய்தார். இந்த அணுகுமுறை தான் நல்லது. 

மே 4- ம் தேதி மாலை மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சி தலைவர்களான எங்களிடம் நாம் இதுவரை சிறப்பான ஆளுங்கட்சியாக செயல்பட்டோம். இனி சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம் என்றார். புதிதாக ஆட்சி அமைப்பவருக்கு 6 மாதம் அவகாசம் அளிப்போம். அவர்களின் செயல்பாட்டை பொறுத்து அதன்பின் விமர்சிப்போம் என்றார். ஆனால் அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்களின் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை. 

முதல்முறையாக பதவியேற்கும் பொது அண்ணாவும், கருணாநிதியும் புதியவர்கள் தான். புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு அவகாசம் கொடுங்கள். 6 மாதம் சும்மா இருங்கள். தினசரி போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்களே, 15 நாட்களாக அமைதியாக உள்ளோம். 

தொகுதிக்கு நல்லது செய்தால் வெற்றி பெறலாம் என சொன்னால் யாரும் நம்பாதீர்கள். கொளத்தூர் தொகுதிக்கு பார்த்து பார்த்து செய்தவர் ஸ்டாலின். மக்கள் நினைத்தால் எவ்வளவு செய்தாலும் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதற்கு ஸ்டாலின் தோல்வி ஒரு உதாரணம். பூரண மது விலக்கு என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. கோயில், பள்ளி, பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக் கடைகளை மூடும் முதல்வரின் முடிவு நல்ல முயற்சி. 

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டி, ஆக்கப்பூர்வமான முடிவை எடுக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி உள்ளோம். தமிழக அரசு புதிய நிதிநிலை அறிக்கை உருவாக்கம் செய்யும் முன் அனைத்து தரப்பு மக்களையும் கலந்தாலோசித்து, சிறந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” இவ்வாறு பெ.சண்முகம் பேசினார்.