惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
M
MIT News - Artificial intelligence
S
SegmentFault 最新的问题
博客园 - 叶小钗
量子位
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
博客园 - 司徒正美
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
Visual Studio Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园_首页
U
Unit 42
月光博客
月光博客
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதுரை சித்திரை திருவிழா - அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்ற...
2026-04-25 · via hindutamil

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

Updated on

2 min read

சென்னை: பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருடா வருடம் சித்திரை திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த ஆண்டு நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர இந்து சமய அறநிலையத்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்.

அக்னி வெயில் சுட்டெரிப்பதால் பக்தர்கள் தங்குவதற்கு ஆங்காங்கே நிழற்குடைகள் அமைப்பது, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தருவது, போக்குவரத்து நெரிசலை சரி செய்வது போன்ற முக்கியமான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சராசரி நாட்களிலேயே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளது. திருவிழா காலம் என்பதால் அதிகமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். எனவே வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் அவசர காலத்தில் மக்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கும். எனவே போக்குவத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர அதிக காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை இந்த விழாவில் அதிக அளவில் கலந்து கொள்வதால் மருத்துவ முதலுதவி வசதிகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டும்.

மிகவும் தொன்மையான சித்திரை திருவிழாவில் பொதுமக்களும் பக்தர்களும் தாமாக முன்வந்து அன்னதானம் நீர் மோர் பந்தல் அமைப்பது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றனர். பக்தி நோக்கோடு அமைக்கப்படும் இது போன்ற காரியங்களுக்கு அரசாங்கம் எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வதால் அவர்கள் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளையும் அறநிலையத்துறை முன்னின்று ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். இந்த திருக்கல்யாணத்தை காண்பதற்காக பக்தர்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் முறைகேடு நடப்பதாக புகார் வந்துள்ளது. திருக்கல்யாணம் மற்றும் தரிசனம் சம்பந்தமான தகவல்களை இணைய வழியில் தருகிறோம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஆனால் பக்தர்கள் இணையத்தில் சென்று தேடினால் அந்த இணைய பக்கம் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பக்தர்கள் சிரமப்படுகின்றனர். திருக்கல்யாண வைபவ டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

சாதாரண காலங்களில் கோயில்களில் தரிசன முறை கட்டணமும் சிறப்பு பூஜைகளுக்கான கட்டணமும் பக்தர்களை சிரமப்படுத்தி வரும் வேளையில் மிகவும் முக்கியத் திருவிழாவான திருக்கல்யாணத்திலும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பது கண்டனத்துரியதாகும்.

இது போன்ற முறைகேடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆராய்ந்து மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன் திருவிழா காலங்களில் முறையான தரிசனத்தை பக்தர்கள் பெறுவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.