惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
量子位
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
Vercel News
Vercel News
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
博客园_首页
V
Visual Studio Blog
宝玉的分享
宝玉的分享
B
Blog
MyScale Blog
MyScale Blog
C
Check Point Blog
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக நிதிநிலை என்ன? - தவெக அரசின் வெள்ளை அறிக்கை சொல்லும...
வேட்டையன் · 2026-06-16 · via hindutamil

Updated on: 

தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது. இதில் 6 ஆய்வு முடிவுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதன் விவரம்:

2021-22-ஆம் ஆண்டு முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான கோவிட் காலத்திற்குப் பிந்தைய ஐந்து ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை எவ்வாறு இருந்துள்ளது என்பதை முந்தைய ஒன்று முதல் எட்டு அத்தியாயங்களும் விரிவாக ஆய்வு செய்துள்ளன. இந்த விரிவான ஆய்வின் பயனாக ஆறு முதன்மையான ஆய்வு முடிவுகள் தற்போது நமக்குக் கிடைத்துள்ளன.

1) முதலாவதாக, 01.04.2021 அன்று இருந்த மாநிலத்தின் நிலுவைக் கடன் அளவு 5.13 இலட்சம் கோடி ரூபாயிலிருந்தது. 313.2026 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் தோராயமாக இரண்டு மடங்கு உயர்ந்து. 10 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்போடு ஒப்பிடுகையில் நிலுவையிலுள்ள கடனின் விகிதம், கோவிட் காலத்திற்குப் பிந்தைய ஆண்டுகள் முழுவதிலும் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து மிக அதிக அளவிலேயே நீடித்து, 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலை கணக்குகளின்படி 28.3 சதவீதமாக இருக்கிறது.

கோவிட் பெருந்தொற்றின் உச்சகட்டத்திற்குப் பின்னர் இதனை கணிசமாகக் குறைப்பதில் இணை மாநிலங்கள் இலக்கை அடைந்திருந்தாலும், தமிழ்நாட்டில் அத்தகைய சீரமைப்பு ஏற்படவில்லை. மாநிலம் தற்போது எதிர்கொண்டு வரும் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையின் விகிதம் குறைந்து வரும் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இந்நிலைமை இன்னும் கூடுதல் கவலைக்குரியதாகிறது.

2) இரண்டாவதாக, வட்டி செலுத்துதலுக்கான தொகை, மாநிலத்தின் மொத்த வருவாய் வரவினங்களில் தோராயமாக 23 சதவீதத்தையும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் தோராயமாக 35 சதவீதத்தை எடுத்துக் கொள்கிறது. 2025.26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி 67,050 கோடி ரூபாயாக உள்ள ஆண்டு வட்டிச் செலவினம். மாநிலத்தின் ஆண்டு மூலதனச் செலவினத்தை காட்டிலும் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு அதிகமாக உள்ளது. புதிய சொத்துக்களை உருவாக்குவதற்கு செலவிடுவதை விட, கடந்த காலக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கே மாநில அரசு தற்போது அதிக அளவில் செலவு செய்து வருகிறது.

3) மூன்றாவதாக, வருவாய் பற்றாக்குறை, தற்போது ஒரு கட்டமைப்பு ரீதியிலானப் பிரச்சினையாக மாறிவிட்டது. 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி, மாநிலத்தின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத நிலையில் 78,324 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.2 சதவீதம் என்பதோடு இது, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பதிவான பற்றாக்குறையின் அளவைக் காட்டிலும் தொகையளவில் மிக அதிகமானதாகும். மாநில அரசு தற்போது முதலீட்டிற்காக அல்லாமல், அன்றாட நடப்பு செலவினங்களுக்கே கடன் வாங்கி வருகிறது.

4) நான்காவதாக, மாநிலத்தின் சொந்த வரி வசூல் திறன் சரிவைச் சந்தித்துள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய்க்கும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கும் இடையிலான விகிதம், 2021-22 ஆம் ஆண்டில் 5.93 சதவீதமாக இருந்து, 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி தோராயமாக 5.45 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது, மாநில அளவில் கடந்த இரண்டு தசாப்தங்களில் மிகக் குறைந்த சதவீதம் என்பதோடு, கோவிட் பெருந்தொற்றிற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் ஒப்பீட்டு அளவுகோலாகக் கருதப்பட்ட ஏனைய இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சரிவாகும்.

5) ஐந்தாவதாக, ஒட்டுமொத்த வருவாய் வரவினங்களில் பொறுப்பேற்றச் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் செலவினங்களின் சதவிதம், இணை தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில் உள்ளது. இது, மூலதனச் செலவினங்கள் மற்றும் புதிய முதலீடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை பெருமளவு குறைத்து. மொத்தச் செலவினத்தில் மூலதனச் செலவினத்தின் விகிதம், 11.8 சதவீதமாக உள்ளது. இது, ஒப்பீட்டு அளவுகோலாகக் கருதப்படும் நான்கு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவாகும்.

6) ஆறாவதாக, நிபந்தனைப் பொறுப்புகள், மாநிலத்தின் கடனின் உண்மையான நிலையை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தோராயமாக 13.18 இலட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதோடு, மாநிலத்தின் நிதி நிர்வாகத்திற்குப் பெரும் நிதி அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

ஒட்டுமொத்தப் பாதிப்பு

இந்த ஆறு முடிவுகளும் தனித்தனியானவை அல்ல. ஒன்றோடொன்று தொடர்பில்லாத ஒன்றோடொன்று இவை அனைத்தும் பின்னிப்பிணைந்து, மாநில நிதி நிலைமையின் ஒட்டுமொத்த வீழ்ச்சியை மேலும் வேகப்படுத்தும் வெவ்வேறு வடிவங்களே ஆகும். வருங்கால தலைமுறையினர் சுமக்க வேண்டிய கடன் சுமையானது, தற்போது தவிர்க்கவே முடியாத ஒரு நிரந்தரப் பாதிப்பாக மாறிவிட்டது.

ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும், முந்தைய கடன்களுக்கான வட்டி மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிதிப் பொறுப்புகள், குறைந்தது இன்னும் இருபது ஆண்டுகளுக்காவது நீடிக்கும். இந்தியாவின் பிற பெரிய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையின் சாதகமான வரம்பு தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த காலத்திற்கு இருக்கும் நிலை உள்ளது. தற்போது அந்தச் சாதகமான வாய்ப்புக் காலம் மிக வேகமாக முழுமையடைந்து ஒரு முடிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

மாநிலத்திற்கு அவசியமாகத் தேவைப்படும் இந்த நிதிச் சீரமைப்பை குறுகி வரும் சாதகமான காலத்திற்குள்ளேயே நாம் செய்து முடிக்க வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை காரணமாக உழைக்கும் திறனுள்ளவர்கள் மீது பெரும் சுமை ஏற்படும். வருங்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத நிதிசார் நெருக்கடிகளின்போது, அதற்கு எதிரான நிதிக் கொள்கை சுழற்சியை அரசு மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் இது தற்போது முற்றிலுமாக முடக்கியுள்ளது.

தமிழ்நாட்டின் போட்டித்திறன் சரிவைச் சந்தித்துள்ள நிலைமை மிகத் தெளிவாகத் தெரிகிறது. கோவிட் பெருந்தொற்றிற்குப் பிந்தைய ஐந்து ஆண்டு காலக்கட்டத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் தங்களது நிதிநிலைக் குறியீடுகளை கணிசமாக மேம்படுத்தி அல்லது வலுப்படுத்தியுள்ள வேளையில், இந்த குறியீடுகள் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2026-27 ஆம் ஆண்டிற்கான வருவாய் செலவினம் சுமார் 27,800 கோடி ரூபாய் அளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் வருவாய் வரவினங்கள் 14,000 கோடி ரூபாய் அளவில் மிகையாகக் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்ட மாற்றங்களின் விளைவாக, வருவாய் பற்றாக்குறையானது இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டிருந்த 46,696 கோடி ரூபாய் என்பதிலிருந்து 90,500 கோடி ரூபாய் வரை உயரும். இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1.22 இலட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறையானது, சுமார் 164 இலட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்ட வாய்ப்புள்ளது.

இத்தகைய அதிகரித்த பற்றாக்குறையைச் ஈடு செய்வதற்காக நிதி ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில், மின்சாரத் துறைக்கான 0.5 சதவீத கூடுதல் கடன்களையும் சேர்த்து, அதிகபட்சமாக எதிர்பார்க்கப்படும் கடன் வாங்கும் வரம்பு தோராயமாக 1.52 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே ஆகும். மேலும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசின் பங்களிப்பு 11,600 கோடி ரூபாய் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.