惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
雷峰网
雷峰网
Google DeepMind News
Google DeepMind News
Y
Y Combinator Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
M
MIT News - Artificial intelligence
WordPress大学
WordPress大学
MongoDB | Blog
MongoDB | Blog
V
V2EX
博客园 - 【当耐特】
GbyAI
GbyAI
Stack Overflow Blog
Stack Overflow Blog
I
InfoQ
Martin Fowler
Martin Fowler
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
V
Visual Studio Blog
D
DataBreaches.Net
C
Check Point Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவது எப்போது? - முதல்வர் ரங்கசா...
செ.ஞானபிரகாஷ் · 2026-06-14 · via hindutamil

Updated on: 

புதுச்சேரி: மீன்பிடி தடைக் காலம் முடிந்து கடலுக்கு மீனவர்கள் புறப்பட்டதையடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தபோது, புதுச்சேரி சட்டப்பேரவை எப்போதும் கூடும் என்ற கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்.

மத்திய அரசின் உத்தரவுப்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. புதுச்சேரியில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், காரைக்காலில் மண்டபத்தூர் முதல் வாஞ்சூர் வரையிலும் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.

தடை காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சீரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். 60 நாட்கள் தடைக்காலம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, தேங்காய்திட்டு துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடிக்கச் செல்லும் 144 விசைப்படகுகளை தயார் செய்யும் பணி மும்மரமாக நடைபெற்றது.

இங்கு 120 படகுகளில் 80-க்கும் மேற்பட்ட படகுகள் இன்று கடலுக்குச் சென்றன. மற்ற படகுகள் அடுத்தடுத்த நாட்களில் கடலுக்குச் செல்லும் எனக் கூறப்படுகிறது.

மீனவர்கள் தங்கள் படகுகளில் போதிய அளவு ஐஸ்கட்டிகள், டீசலை ஏற்றி, நீண்ட நாட்களுக்கு பின் கடலுக்குச் செல்ல தயாராகினர். இதனைத் தொடர்ந்து தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் பணிகள் நடந்தது.

மீனவர்கள் புனித நீரை கடலில் ஊற்றியும், மலர் தூவியும் பூஜை செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி விசை படகுகளுக்கு மலர் தூவி கொடியசைத்து மீனவர்களை தொழிலுக்கு வழியனுப்பி வைத்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில்," வருகிற 17-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். அமைச்சர்கள் பதவியேற்றவுடன் புதுச்சேரி சட்டப்பேரவை எப்போது கூடும் என தெரிவிக்கப்படும். சட்டப்பேரவையை கூட்ட ஆகஸ்ட் வரை காலமுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நியமன எம்எல்ஏக்கள் பதவி குறித்து முடிவு எடுப்போம்” என்றார்.