惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Stack Overflow Blog
Stack Overflow Blog
云风的 BLOG
云风的 BLOG
G
Google Developers Blog
J
Java Code Geeks
C
Check Point Blog
Last Week in AI
Last Week in AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
Vercel News
Vercel News
The GitHub Blog
The GitHub Blog
L
LangChain Blog
有赞技术团队
有赞技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 司徒正美
IT之家
IT之家
Martin Fowler
Martin Fowler
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
U
Unit 42
Jina AI
Jina AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ஒருவேளை திமுக + அதிமுக கூட்டணி அமைந்தால்…” - நடிகர் விஷா...
ப்ரியா · 2026-05-08 · via hindutamil

Updated on: 

சென்னை: யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, அதிர்ச்சிகரமான திமுக-அதிமுக கூட்டணி அமைந்தால், பொதுமக்களிடையே அதன் விளைவு மிக மோசமானதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “அடுத்த அரசாங்கத்தை அமைக்கப்போவது தமிழக வெற்றிக் கழகம் இல்லை என்றால், அதே சமயம் யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, அதிர்ச்சிகரமான திமுக-அதிமுக கூட்டணி அமைந்தால், ஒரு குடிமகனாகவும் வாக்காளராகவும் பொதுமக்களிடையே அதன் விளைவு மிக மோசமானதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று நான் கருதுகிறேன். இது நிச்சயமாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

If it’s not #Tvk and if it’s going to be anything else but the unimaginable/shellshocking combination of DMK/AIADMK alliance to form the next government , then I as a citizen and voter foresee a disastrous and catastrophic consequential turnout amidst common public. Will not go…

— Vishal (@VishalKOfficial) May 7, 2026

முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “2017 மற்றும் 2018-ல் கோவா, மணிப்பூர், மேகாலயா, மிக முக்கியமாக கர்நாடகாவில் நடந்த அதே சூழல்தான் இதுவும். அங்கு அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதே முறையில் தமிழகத்திலும் விஜய் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் ஏன் வாய்ப்பு வழங்க தயங்குகிறார்? மக்களின் தீர்ப்புக்கு வழங்கப்படும் மரியாதை இதுதானா? 233 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்க வேண்டியுள்ளது, நமக்குத் தேவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கமே தவிர, ஆளுநர் ஆட்சி அல்ல. 

தவெக பெரும்பான்மைக்கு மிக நெருக்கமான இடங்களைப் பெற்று இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவை பெற்ற பிறகு ஆளுநர் ஆட்சி ஏன்? இந்த அடிப்படை உரிமைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, மிக வலிமையான சக்தியான தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரியும். அன்பிற்குரிய விஜய், நீங்கள் நிச்சயமாக ஆட்சி அமைப்பீர்கள். ஒரு வாக்காளராக நான் அதை முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

Just like the same scenario that happened in 2017 /18 in Goa, Manipur,Meghalaya and most importantly in Karnataka. The government was formed and then was asked to prove their majority in the “floor test “ in the assembly. Why is the governor of Tamil Nadu hesitating to give…

— Vishal (@VishalKOfficial) May 7, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’’ என்று உறுதிபட தெரிவித்தார்.