惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
C
Check Point Blog
J
Java Code Geeks
腾讯CDC
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 三生石上(FineUI控件)
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
大猫的无限游戏
大猫的无限游戏
Engineering at Meta
Engineering at Meta
罗磊的独立博客
Last Week in AI
Last Week in AI
B
Blog
IT之家
IT之家
S
SegmentFault 最新的问题
D
DataBreaches.Net
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
博客园 - 聂微东
U
Unit 42
有赞技术团队
有赞技术团队
Y
Y Combinator Blog
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தீயாய் பரவிய ‘அதிமுக + திமுக’ வியூக பேச்சு - என்னதான் நடக...
2026-05-07 · via hindutamil

திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி

Updated on

2 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது தவெக. இந்த சூழலில், அதிமுக - திமுக கூட்டணி ஆட்சியமைக்க உள்ளதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக ஆட்சியமைக்க காத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க அக்கட்சிக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி புதன்கிழமை அன்று தவெக கூட்டணியில் இணைந்தது. காங்கிரஸின் 5 பேரை தாண்டி, பெரும்பான்மைக்கு மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், தவெக தரப்பு விசிக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி வருகிறது.

இந்த சூழலில் ஆட்சியமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்தார். ஆனாலும், பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை வழங்காததால், ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பதில் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆட்சியமைப்பதற்காக விஜய்க்கு இப்போது வரை ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

மேலும், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து அதிமுகவில் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ‘எந்த நிலையிலும் தவெகவுக்கு ஆதரவளிக்க மாட்டோம்’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தடாலடியாக அறிவித்தார்.

இந்த சூழலில்தான், அதிமுக - திமுக கூட்டணி தொடர்பான பேச்சு நடந்ததாக தகவல்கள் பரவ ஆரம்பித்தது. அதிமுக ஆட்சியமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்றும், திமுக வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்றும் தகவல்கள் வெளியானது. பாஜகவை விலக்கிவிட்டு பாமக, விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல், தேமுதிக, அமமுக கட்சிகள் ஆட்சியில் பங்கெடுக்கும் என்றும் தகவல்கள் பறந்தன.

தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுவதால், அரசு அமைப்பதற்கு ஆதரவு கோரி அதிமுக தரப்பு திமுகவிடம் மறைமுகமான தூதுகளை அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. எனினும், அதிமுகவின் இந்த முன்மொழிவை திமுக தலைமை நிராகரித்துவிட்டதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் திமுக உறுதியாக உள்ளது என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி எனும் திகில் கிளப்பும் செய்தி றெக்கை கட்டி பறக்கும் நிலையில், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காங்கிரஸ் கட்சி (மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள்) இழைத்த துரோகத்தையும் மீறி, ஒரு வலிமையான எதிர்க்கட்சியாகச் செயல்படவே திமுக முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்குமாறு அதிமுக தரப்பு பாஜகவை வற்புறுத்தி வருகிறது. இது மக்களின் தேர்தல் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம்’ எனத் தெரிவித்து இப்போது பந்தினை அதிமுக பக்கம் தள்ளிவிட்டுள்ளார்.

ஒரு பக்கம் திமுக - அதிமுக கூட்டணி பற்றிய தகவல்கள் தடதடக்கும் நிலையில், மறுபக்கம் திமுக இந்த செய்திகளை புறந்தள்ளியுள்ளது. ஆனாலும், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து என்னவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், எதிர்பார்ப்புகள் இப்போதே எகிறத் தொடங்கிவிட்டது.