惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Last Week in AI
Last Week in AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MongoDB | Blog
MongoDB | Blog
云风的 BLOG
云风的 BLOG
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
J
Java Code Geeks
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
V
Visual Studio Blog
小众软件
小众软件
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园_首页
IT之家
IT之家
Vercel News
Vercel News
C
Check Point Blog
Google DeepMind News
Google DeepMind News
月光博客
月光博客
D
DataBreaches.Net
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“புதிய நடுவர் மன்றம் தேவையில்லை; அனைத்துக் கட்சி கூட்டத்த...
மு.சக்தி · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: மேகேதட்டு அணை விவகாரத்தில் அரசின் தெளிவான நிலைப்பாட்டை வகுப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”மேகேதட்டு அணை சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. காவிரியின் குறுக்கே மேகேதட்டு அணை கட்டுவதற்கான தேவையையே தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். மேகேதட்டு உள்ளிட்ட எந்த விதமான புதிய அணைகளையும் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றமும், நடுவர் மன்றமும் தெளிவாக தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தேவையில்லாமல் இந்த விவகாரத்தை நடுவர் மன்றத்தின் ஆய்வுக்கு கொண்டு செல்வது தமிழக விவசாயிகளுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட மேகேதட்டு அணை சிக்கல் குறித்த தனித் தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சேர்க்கப்பட்டது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தேன். சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக பாமக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட தமிழக அரசு, புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இனியும் விவாதிக்கப்படக் கூடாது என்றும் கூறியிருக்கிறது. இது மிகவும் அநீதியானது.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது நீர்வளத்துறை அமைச்சரும், பொதுப்பணித் துறை அமைச்சரும் தெரிவித்த கருத்துகள் குறிப்பிடத்தக்கவை. ”புதிய நடுவர் மன்றம் என்பது மேகேதட்டு அணை கட்டுவது தொடர்பானது மட்டும் தான். இதனால் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப் பட வேண்டும் என்ற 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த மாற்றமும் ஏற்படாது” என்று நீர்வளத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

பொதுப்பணித் துறை அமைச்சர் விளக்கமளிக்கும் போது, ”காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மீது தமிழ்நாட்டுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் தான் புதிய நடுவர் மன்றம் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்திருக்கிறது” என்று தெரிவித்தார். இருவரின் நிலைப்பாடுகளையும் ஏற்க முடியாது.

புதிய நடுவர் மன்றம் அமைத்தாலும் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 177.25 டி.எம்.சி என்ற நீரின் அளவு குறையாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மாறாக, மேகேதட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள் முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், மேகேதட்டு அணை சிக்கல் குறித்து விசாரிக்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாடு போராடிப் பெற்ற உரிமைகளை தாரை வார்ப்பதாக அமைந்து விடும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. இதை அரசும், அமைச்சரும் ஆராய்ந்து இந்த விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

நடுவர் மன்றம் என்பது இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட ஒரு விவகாரத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான அமைப்பு ஆகும். ஆனால், காவிரியின் குறுக்கே மேகேதட்டு அணை கட்டுவதற்கான தேவையையே தமிழகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அது குறித்து நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் ? ஒரு வேளை புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இரு தரப்பு கருத்துகளையும் கேட்டு, மேகேதட்டு அணையை கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம்; ஆனால், அதன் கொள்ளளவை 70 டி.எம்.சி என்பதற்கு பதிலாக 68 டி.எம்.சியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தால் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முடியுமா?. அது காவிரி பாசன விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகமாகி விடாதா ?

உண்மையில் மேகேதட்டு அணை சிக்கலுக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது கர்நாடக அரசு வைக்க வேண்டிய கோரிக்கை ஆகும். ஆனால், கர்நாடகத்தின் குரலாக தமிழக அரசு அதை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், திமுகவால் உருவாக்கப்பட்ட ஒரு யோசனையை வலியுறுத்துவதன் மூலம் திமுகவின் குரலாக தவெக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு பாதிப்பைத் தான் ஏற்படுத்தும்.

கர்நாடகத்தைப் போலவே தமிழக அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும், மீண்டும் கூறி இந்த மோசமான யோசனையை ஏற்றுக்கொள்ள ஆளுங்கட்சியும், திமுகவும் முயல்கின்றன. தமிழகத்தின் நலனுக்காகத் தான் ஒற்றுமையுடன் செயல்பட முடியும்; தமிழகத்தின் நலனுக்கு ஒரு திட்டத்தால் தீங்கு ஏற்படும் என்றால் அதை முதன் முதலில் எதிர்க்கும் கட்சியாக பாமக தான் இருக்கும்.

அதேபோல், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது 1990--ம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, அதில் 16 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டு, 2007-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதில் சில மாற்றங்களைச் செய்து 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். அதில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளரும் உறுப்பினராக இருக்கிறார். அந்த அமைப்பின் அதிகாரங்கள் தொடர்பாக நிறைய குறைகள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனாலும் கூட தமிழ்நாட்டை மீறி, மேகேதட்டு அணை சிக்கலில் அந்த அமைப்பால் எதையும் செய்துவிட முடியாது.

2007-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பிலும், 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பிலும், இதற்கு முன் காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களிலும் கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் புதிய அணையை கட்ட முடியாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. மேகேதட்டு அணை சிக்கல் தொடர்பாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி அளித்த தீர்ப்பிலும் கூட,”ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை அந்த மாநிலம் எந்த வகையில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; அதில் இன்னொரு மாநிலம் தலையிட முடியாது. ஆனாலும் கூட ஒரு மாநிலத்தின் நடவடிக்கையால் இன்னொரு மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்த்து முறையிட முடியும்” என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு சாதகமான சட்ட அம்சங்கள் ஆகும்.

அதுமட்டுமின்றி, மேகேதட்டு அணை சிக்கல் தொடர்பாக மக்களவையிலும், கடிதங்களின் மூலமாகவும் தொடர்ந்து நான் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி எனக்கு கடிதம் எழுதிய அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, மேகேதட்டு அணைக்கு அனுமதி கோரி எதிர்காலத்தில் விண்ணப்பிக்கப்பட்டாலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அதை பரிசீலிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்.

மேலும், ”கர்நாடகத்தில் காவிரி ஆற்றில் அணை கட்டாமல் ஓடும் நீரில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிவ சமுத்திரம் நீர்மின் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக மின் கழகம் அனுப்பியுள்ளது. மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்; அப்போது தான் மாநிலங்களுக்கு இடையிலான கோணத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று கூறி விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது” என்றும் அந்தக் கடிதத்தில் உமா பாரதி கூறியிருந்தார்.

மேகேதட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக இவ்வளவு அம்சங்கள் இருக்கும் நிலையில், அவற்றை புறந்தள்ளி விட்டு, புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோருவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. மேகேதட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தான் தீர்வு என்று தவெக அரசு கருதியிருந்தால், அதை ஏன் தனித் தீர்மானத்தில் முதலிலேயே தெரிவிக்கவில்லை ?

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும், திமுக வழக்கறிஞர்களும் தெரிவித்த ஆலோசனைகளின் அடிப்படையில் தான் இப்படி ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்ததாகவும் பொதுப்பணித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி சிக்கலில் அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்ட நிலைப்பாட்டுக்கு மாறாக புதிய நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றால் அது குறித்து மற்ற அரசியல் கட்சிகளிடமும், விவசாயிகள் அமைப்புகளிடமும் விவாதித்து கருத்தொற்றுமை அடிப்படையில் தான் செய்ய முடியும். மாறாக சிலரது ஆலோசனையின் பேரில் அரசே தன்னிச்சையாக முடிவெடுத்து திணிக்க முடியாது.

மேகேதட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலைப்பாடும் இது தான். விவசாயிகளின் நலன் காப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கும் பாமக புதிய நடுவர் மன்றம் அமைக்கப் படுவதை ஒருபோதும் ஏற்காது. மேகேதட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் தெளிவான நிலைப்பாட்டை வகுப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக அழைக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.