惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
博客园_首页
H
Help Net Security
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
The Cloudflare Blog
腾讯CDC
Jina AI
Jina AI
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
博客园 - 叶小钗
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருவான்மியூர் வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வாக்களித்த ந...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வருகை தந்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்க்கவும் அவர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சரியாக 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் வாக்காளராக அவர் தனது ஜனநாயக கடமையைச் செய்து முடித்தார்.

வாக்களித்த பின் தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைக் காட்டிய அவர், செய்தியாளர்களிடம் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அஜித் வருகையை ஒட்டி அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரைத் தொடர்ந்து மற்ற திரை நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பகுதிகளில் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என்று அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இங்கு நுண்​பார்​வை​யாளர்​கள், துப்​பாக்​கிய ஏந்திய போலீ​ஸார் அல்​லது துணை ராணுவப் படை​யினர் நிறுத்தப்பட்​டுள்​ளனர்.

அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் குடிநீர், கழி​வறை, தடையற்ற மின்​சா​ரம், அவசர மருத்​து​வம், கைப்​பிடி​யுடன் கூடிய சாய்​வுதளம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சக்கர நாற்​காலி, நிழற்​பந்​தல், வாக்காளர்​களுக்கு உதவ தன்​னார்​வலர்​கள் ஏற்​பாடு என அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.