惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗
罗磊的独立博客
宝玉的分享
宝玉的分享
月光博客
月光博客
V
V2EX
博客园 - 司徒正美
Vercel News
Vercel News
量子位
Y
Y Combinator Blog
美团技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
T
Tailwind CSS Blog
博客园 - Franky
小众软件
小众软件
I
InfoQ
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“எம்எல்ஏக்களை விலை பேசி வாங்குவது தவறான செயல்” - தவெக மீத...
அ.அருள்தாசன் · 2026-06-17 · via hindutamil

நயினார் நாகேந்திரன் |கோப்புப் படம்

Updated on: 

திருநெல்வேலி: “தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் எம்.எல்.ஏ.க்கள் விலை பேசி வாங்குவது தவறான செயல்" என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலுள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகியுள்ளது. இந்நிலையில், பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. கடந்த 2 நாட்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது "ப்ரோ", "அங்கிள்" என்றெல்லாம் பேசிய முதல்வர் விஜய், இந்த சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் முதல்வருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இதுகுறித்து வாயே திறக்காமல் முதல்வர் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். மாலை 5 மணிக்கு வீட்டுக்கு செல்கிறார். டிபன், சாப்பாடு சாப்பிடுகிறார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் காட்சிகளை பதிவிடுகிறார்கள். ஆனால், மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தற்போது சினிமா பிரபலங்களை மட்டும் சந்தித்து புகைப்படம் எடுக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் முன்பே அமமுக உறுப்பினரை விலை பேசி வாங்கினர். தற்போது குதிரை பேரம் நடத்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது வேறு, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது வேறு. எம்எல்ஏக்களை வாங்குவதால் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகிறது. அரசின் பணம் வீணாகிறது.

குதிரை பேரம் நடத்தி வரும் இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அதிமுக எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து விலை பேசி வாங்கி வருகிறார். இது நீண்ட நாட்கள் நீடிக்காது. இது தவறான செயல்.

வரும் காலம்... பாஜகவின் காலமாக இருக்கும். விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை. விஜய், அண்ணாமலை போன்றோர் புதிய கட்சி தொடங்கியதால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்துடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. கடந்த ஆட்சியை போலவே தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முதல்வர் தவறிவிட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது காலையில் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது, மாலையில் அது திரும்ப பெறப்படுகிறது.

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சிவகங்கையில் அந்த குழுவில் இருந்த பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

அண்ணாமலைக்கு 17 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறுகிறார்கள். ஒரே நாளில் எனக்கும் 30 லட்சம் பேர் ஆதரவாக உள்ளனர் என்று என்னால் காட்ட முடியும்.

திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்று கேட்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பதில் தெரிவிப்போம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதும், தற்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.