惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
博客园_首页
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
阮一峰的网络日志
阮一峰的网络日志
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 三生石上(FineUI控件)
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
美团技术团队
IT之家
IT之家
爱范儿
爱范儿
有赞技术团队
有赞技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
量子位
博客园 - 聂微东
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தட்டாஞ்சாவடி தொகுதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெற...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வென்றார். இவர் 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்பி வைத்திலிங்கம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

புதுச்சேரியில், தவெக கூட்டணி 2-ம் இடத்திலும், 3-ம் இடத்தில் சுயேட்சையும் இடம் பிடித்து 4-வது இடத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்பி வைத்திலிங்கம் உள்ளார்.

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தலைவர் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனத்தலைவர் ரங்கசாமிக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்பி வைத்திலிங்கத்துக்கும் இடையே போட்டி நிலவியது. ஆனால் தொடக்கம் முதலே ரங்கசாமி முன்னிலை பெற்றிருந்தார்.

இறுதியில் ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்று வென்றார். தவெக கூட்டணியில் உள்ள நேயம் மக்கள் கழகத்தின் விநாயகம் 5,583 வாக்குகளுடன் 2-ம் இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் சேதுசெல்வம் 3,884 வாக்குகளுடன் 3 இடத்தில் உள்ளார். காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் 2,990 வாக்குகளுடன் 4-ம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி கார்த்திக் குமாரி 534 வாக்குகள் பெற்றார். நோட்டா 196 வாக்குகள் எடுத்திருந்தது.

அதிமுக மாநிலச் செயலர் அன்பழன் வெற்றி:

புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து இம்முறை என்டிஏ கூட்டணியில் இரு தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டன.

முதல் சுற்றில் எண்ணப்பட்ட 17 தொகுதிகளில் முதலாவதாக உப்பளம் தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் 9008 வாக்குகளும், தவெக சிவா - 7826, திமுக அனிபால் கென்னடி 5,320 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து 1182 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது.