惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
爱范儿
爱范儿
博客园 - Franky
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
有赞技术团队
有赞技术团队
美团技术团队
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
Jina AI
Jina AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Engineering at Meta
Engineering at Meta
T
Tailwind CSS Blog
J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
小众软件
小众软件
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் அதிகம் பெறுகி...
2026-05-02 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: “இன்று திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது என்று சொன்னால், அதற்கு விசிகவின் அணுகுமுறையும், விசிகவின் உறுதிப்பாடும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கூடுதல் தொகுதிகளுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில் நாம் வேறொரு முடிவை எடுத்திருந்தால், தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியிருக்கும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவன் வெளியிட்ட காணொலிப் பதிவில், “திமுக கூட்டணி வேட்பாளர்களும், விசிக சார்பில் போட்டியிட்ட 8 வேட்பாளர்களும் உறுதியாக வெல்வார்கள் என்று நம்புகிறேன்.

கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட சில தொகுதிகளில் சில விசிக பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என்ற தகவல்கள் எனக்கு வந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை திரட்டி வருகிறோம். அதே நேரத்தில் இந்த தேர்தலில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றியதாக கூட்டணிக் கட்சி தலைவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்கள்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறப்போகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில் பெண்கள், இளைஞர்களுக்கான பல திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

மேலும், இக்கூட்டணி ஒரு கொள்கை பிடிப்புள்ள கூட்டணி. இந்த பொறுப்புணர்வோடு இக்கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விசிக பெரும் முயற்சி எடுத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சீர்குலைக்க கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு முயற்சிகளை பலரும் எடுத்தனர். அவர்களின் இலக்கு விசிகதான். எப்படியாவது திருமாவளவனை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என, என்னை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த நினைத்தனர். என் மூலமாக திமுக கூட்டணியை பலவீனப்படுத்த திட்டமிட்டனர்.

பல விதத்தில் ஆசைகாட்டி இக்கூட்டணியை சிதைக்க முயற்சி செய்தனர். ஆனால் பொறுமை காத்து, தொலைநோக்கு பார்வையோடு இக்கூட்டணியில் இருந்தோம்.

மதவாத, சாதியவாத சக்திகள் பலவித முகமூடிகளோடு களத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் வலுப்பெற்றால் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இதனால் அவர்களின் முயற்சிகளையெல்லாம் புறந்தள்ளி கூட்டணியில் தொடர்ந்து நீடித்தோம். இதனை பாராட்டுவதற்கு பதிலாக, கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

கூடுதல் இடங்களை பெற வாய்ப்பிருந்தும் திருமாவளவன் பெறவில்லை என்று விமர்சித்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இந்த அரசு இருந்தாலும், திருமாவளவன் இந்த அரசை ஆதரித்தார் என்றார்கள். இப்படி எல்லாம் பேசி நம்மை கூட்டணியிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தார்கள்.

தற்காலிக லாபத்துக்காக ஒரு முடிவை எடுக்க நான் விரும்பவில்லை. எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், ஆசை காட்டியும் திருமாவளவன் உறுதியாக இருந்தார் என்பதை குறிப்பிட்டு யாரும் என்னை பாராட்டவில்லை. இன்று திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது என்று சொன்னால், அதற்கு விசிகவின் அணுகுமுறையும், விசிகவின் உறுதிப்பாடும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில் நாம் வேறொரு முடிவை எடுத்திருந்தால், தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியிருக்கும். அதை நாம் விரும்பவில்லை.

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் நாம் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்தோம், அது கிடைக்கவில்லை. அதற்காக நாம் முரண்டுபிடித்து, இழுபறி நிலையை உருவாக்கவில்லை. கூட்டணியில் சங்கடமான சூழலை உருவாக்க விரும்பவில்லை. கூட்டணியை பலவீனப்படுத்த கூடாது என்று நானே முடிவெடுத்தேன். மேலோட்டமாக பார்த்தால் அது ஏமாளித்தனம் போல தெரியும். பொறுப்புணர்வோடு ஆய்வு செய்தால் நம் பெருந்தன்மையை புரிந்துக் கொள்ள முடியும். ஆனால், அதனையும் பலர் இங்கு கொச்சைப்படுத்துகிறார்கள்.

எக்ஸிட்போல் முடிவுகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என சொல்லியுள்ளனர். சிலர் அதிமுக - பாஜக அணி வெற்றி பெறும் என சொல்லியுள்ளனர். நாம் கருத்துக் கணிப்புகளை நம்ப தேவையில்லை. எப்படி கணக்கு போட்டாலும் திமுக கூட்டணியே பெரும் வெற்றி பெறும். திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பலர் போட்டிபோட்டு பிரிக்கிறார்கள்.

திமுக, அதிமுகவுக்கு எதிர்ப்பு வாக்குகள் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த வாக்குகளை அவ்வப்போது வந்த தலைவர்கள் அறுவடை செய்தனர். இப்போது திமுகவை அதிமுக, விஜய், சீமான் ஆகியோர் எதிர்த்து வாக்குகளை பிரித்தனர்.

திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் அதிகம் பெறுகிறார். ஆனால், தனித்த சக்தியாக திமுக அதிமுக அணிகளை பின்னுக்கும் தள்ளும் வலிமையை விஜய் பெறவில்லை. எப்படி பார்த்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

விசிக 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும். முடிவு எதுவாக இருந்தாலும் நமது அரசியல் களம் நீர்த்துப் போகாது. நம் பயணம் வேகம் பெறும், தீவிரமடையும்” என்று திருமாவளவன் கூறினார்.