惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
The GitHub Blog
The GitHub Blog
罗磊的独立博客
月光博客
月光博客
J
Java Code Geeks
A
About on SuperTechFans
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
Docker
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
F
Fortinet All Blogs
U
Unit 42
C
Check Point Blog
Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Blog — PlanetScale
Blog — PlanetScale
大猫的无限游戏
大猫的无限游戏
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
阮一峰的网络日志
阮一峰的网络日志
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு: தேர்தலுக்க...
2026-04-30 · via hindutamil

Updated on

3 min read

சென்னை: தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்​பு​களில் தமிழகத்​தில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தக்க வைக்​கும். புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற்​றது. ஆளும் கட்​சி​யான திமுக, பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக, முதல் முறை​யாகத் தேர்​தலைச் சந்​திக்​கும் விஜய்​யின் தவெக மற்​றும் சீமானின் நாதக என 4 முனைப் போட்டி நில​வியது .

இதில் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் திமுக 164, காங்​கிரஸ் 28, தேமு​திக 10, விசிக 8, மார்க்​சிஸ்ட் 5, இந்​திய கம்​யூனிஸ்ட் 5, மதி​முக 4, ஐயூஎம்​எல் 2, கொமதேக 2, மமக 2, மஜக, முக்​குலத்​தோர் புலிப்​படை, எஸ்​டிபிஐ, தமிழர் தேசம் கட்சி தலா ஒரு தொகு​தி​யில் களம் கண்​டன.

அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் அதி​முக 166, பாஜக 26, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்​சி, சிங்​கத் தமிழர் முன்​னேற்​றக் கழகம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ், தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக், தமமுக தலா ஒரு தொகு​தி​யில் போட்​டி​யிட்​டன. சசிகலா - ராம​தாஸ் கூட்​ட​ணி​யில் அகில இந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் (சசிகலா) - 71, அய்யா பாட்​டாளி மக்​கள் கட்சி (ராம​தாஸ்) - 38, பசும்​பொன் மக்​கள் தேசம் - 2, வேளாளர் முன்​னேற்​றக் கழகம் - 1, இதரக் கட்​சிகள் 8 இடங்​களில் போட்​டி​யிட்​டன.

முதல் முறை​யாக தேர்​தலைச் சந்​தித்த நடிகர் விஜய்​யின் தவெக 233 தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிட்​டது. சேலம் மாவட்​டம் எடப்​பாடி தொகு​தி​யில் மட்​டும் ஒரு சுயேச்சை வேட்​பாள​ருக்கு தனது ஆதரவை வழங்​கி​யுள்​ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகு​தி​களி​லும் தனித்து களம் கண்​டுள்​ளது. தமிழக வாழ்​வுரிமை கட்சி (வேல்​முரு​கன்) 170 தொகு​தி​கள், புதிய தமிழகம் (கிருஷ்ண​சாமி) 70 தொகு​தி​கள், பகுஜன் சமாஜ் கட்சி 118 இடங்​களில் போட்​டி​யிட்​டன.

இந்​நிலை​யில் 234 தொகு​தி​களுக்​கான வாக்கு எண்​ணிக்கை 62 மையங்​களில் வரும் மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது. அன்று பிற்​பகலுக்​குள் யார் ஆட்​சி​யில் அமர்​வார் என்​ப​தற்​கான முடிவு​கள் தெரிய வரும். இதற்​கிடை​யில் மேற்கு வங்​கத்​தின் 2-ம் கட்ட தேர்​தல் முடிந்​ததை அடுத்​து, நேற்று மாலை 6.30 மணிக்கு தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்பு முடிவு​கள் வெளி​யா​யின.

இதில் தமிழகத்​தைப் பொறுத்​தவரை பல்​வேறு நிறு​வனங்​களின் கணிப்​பில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக சாணக்​கியா ஸ்ட்​ராடஜிஸ், என்​டிடி​வி, ரிபப்​ளிக் டிவி கருத்​துக் கணிப்​பின்​படி திமுக தலை​மையி​லான கூட்​டணி பெரும்​பான்மை இடங்​களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், சிஎன்​என் கணிப்​பில் அதி​முக ஆட்​சி​யைப் பிடிக்​கும் எனவும், இந்​தியா டுடே முடிவு​களில் தவெக முன்னிலை வகிக்​கும் என்றும், காமாக்யா கணிப்​பில் தொங்கு சட்​டப்​ பேரவைக்கான வாய்ப்​பு இருப்​ப​தாக​ கூறப்​பட்​டுள்​ளது.

புதுச்சேரி நிலவரம்: புதுச்​சேரி யூனியன் பிரதேசத்​தில் 30 தொகு​தி​கள் உள்​ளன. தற்​போது ஆட்​சி​யில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் என்​.ஆர். காங்​கிரஸ் 16, பாஜக 10, அதி​முக 2, லஜக 2 இடங்​களில் போட்​டி​யிட்​டன. இண்​டியா கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் 16, திமுக 13, விடு​தலைச் சிறுத்​தைகள் ஒரு இடம் என போட்​டி​யிட்​டன. ஒரு​மித்த கருத்து இல்​லாத​தால் இண்​டியா கூட்​ட​ணி​யில் இடம் பெற்​றிருந்த இந்​திய கம்​யூனிஸ்ட் ஒரு தொகு​தி​யிலும், மார்க்​சிஸ்ட் 2 தொகு​தி​களி​லும் தனி​யாக போட்​டி​யிட்​டன. திமுக போட்​டி​யிடும் 5 தொகு​தி​கள், விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் ஒரு தொகுதி என 6 இடங்​களில் காங்​கிரஸ் போட்டி வேட்​பாளர்​கள் கை சின்​னத்​திலேயே களம் இறங்​கினர்.

அதே​போல், விஜய்​யின் தவெக புதுச்​சேரி​யில் நேயம் மக்​கள் கழகத்​துடன் கூட்​டணி அமைத்​துள்​ளது. தவெக 28 இடங்​களி​லும், நேயம் மக்​கள் கழகம் 2 இடங்​களி​லும் போட்​டி​யிட்​டன. நாம் தமிழர் கட்சி புதுச்​சேரி, காரைக்​காலில் 28 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. மாஹே, ஏனாமில் போட்​டி​யிடு​வதை இம்​முறை​யும் புறக்​கணித்​தது.

புதுச்​சேரியிலும் வாக்கு எண்​ணிக்​கை​ வரும் 4-ம் தேதி நடை​பெறவுள்​ளது. நேற்று வெளி​யான தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்​பு​கள் அனைத்​தும் என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யைத் தக்க வைக்​கும் என்று தெரி​வித்​துள்​ளன. எனினும், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் யார் ஆட்​சியை பிடிப்​பார் என்ற முழு நில​வரம்​ மே 4-ல்​ தெரிய வரும்​.