惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
aimingoo的专栏
aimingoo的专栏
S
SegmentFault 最新的问题
A
About on SuperTechFans
Engineering at Meta
Engineering at Meta
宝玉的分享
宝玉的分享
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
MyScale Blog
MyScale Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 聂微东
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
Tailwind CSS Blog
Recent Announcements
Recent Announcements
Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம்: ஈரான...
2026-05-03 · via hindutamil

Updated on

1 min read

வாஷிங்டன்: ஈரான் முன்மொழிந்துள்ள அமைதிக்கான நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஈரான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். 

ஈரான் ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் மூத்த அதிகாரியான முகமது ஜாபர் ஆசாதி இது குறித்துக் கூறும்போது, அமெரிக்கா தனது வாக்குறுதிகளையோ அல்லது ஒப்பந்தங்களையோ ஒருபோதும் கடைப்பிடித்ததில்லை என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால் ஏப்ரல் 8 முதல் அமலில் இருக்கும் தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து, மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் சமர்ப்பித்த புதிய நிபந்தனைகளில், ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவருவது மற்றும் ஈரான் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குப் பதிலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைப் பிந்தைய நிலைக்குத் தள்ளிவைக்க ஈரான் முன்வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பாரசீக வளைகுடா பகுதியில் ஈரானைத் தவிர மற்ற நாடுகளின் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது.

ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவ்வாறு செய்யத் தாம் விரும்பவில்லை என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார். இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல. அது எனக்கு திருப்திகரமாக இல்லை. அவர்களின் அரசு தலைமை ஒருங்கிணையாமல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.