惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
博客园_首页
宝玉的分享
宝玉的分享
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
Visual Studio Blog
美团技术团队
IT之家
IT之家
罗磊的独立博客
Blog — PlanetScale
Blog — PlanetScale
Google DeepMind News
Google DeepMind News
月光博客
月光博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
H
Help Net Security
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
博客园 - 叶小钗
M
MIT News - Artificial intelligence
B
Blog RSS Feed
有赞技术团队
有赞技术团队
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுப்பேட்டை: அரசியலதிகாரம் ‘கொக்கி’ குமார்களை வளர்ப்பதும...
அருண் பகத் · 2026-06-02 · via hindutamil

Updated on: 

சில படங்கள் குறித்து எப்போதும் வியந்து பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கலாம். அப்படியொரு படம்தான் ‘புதுப்பேட்டை’.

வெளியானபோது வணிக ரீதியில் தோல்விப் படம். பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘கல்ட்’ படம். பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘க்ளாசிக்’. இனி எப்போதும் ‘க்ளாசிக்’. தமிழின் சிறந்த ‘க்ளாசிக்’ படங்களில் ஒன்று.

ப்ளாட் டிரைவன் (Plot driven) திரைக்கதைகளை விட கேரக்டர் டிரைவன் (Character driven) திரைக்கதைகளுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. கேரக்டர் டீரைவன் படங்களை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். அந்த உளவியல் படிமங்கள் ஒவ்வொரு முறையும் தனது பரிமாணங்களை விஸ்தரித்துக் கொண்டே போகும்.

ஆனால், அந்த உளவியல் படிமங்களை திரையில் உருப்பெற வைப்பது சாதாரண விஷயமல்ல. ப்ளாட் டிரைவன் திரைக்கதைகளின் டிராமாக்களை திரையில் மீட்டுவதை விட, கேரக்டர் டிரைவன் டிராமாக்களை திரையில் மீட்டுவதில் இயக்குநரின் படைப்பாளுமை கூடுதல் நுட்பத்துடன் தொழிற்பட வேண்டும்.

‘புதுப்பேட்டை’ கேரக்டர் டிரைவன் திரைக்கதை என்று மட்டும் சொல்ல முடியாது. அது ப்ளாட் டிரைவன் திகைக்கதையாகவும் இருக்கிறது. ப்ளாட் டிரைவன் திரைக்கதைகள் சம்பவங்களின் வழி முன்னேறுகின்றன. கேரக்டர் டிரைவன் திரைக்கதைகள் கதாப்பாத்திர உளவியல் பரிமாணத்தைச் சொல்கின்றன. ‘புதுப்பேட்டை’யின் திரைக்கதை இரண்டின் அரிதானக் கலவை.

‘கொக்கி’ குமார் தன் வீட்டிலில் இருந்து தப்பித்து பிச்சை எடுப்பதில் இருந்து, பெரியக் கட்சியின் வட்டச் செயலாளர் பொறுப்பு வாங்கும் வரை ஒவ்வொரு சம்பவங்களின் வழியே ‘கொக்கி’ குமாரின் உளவியல் பரிணாமம் அடைகிறது. இந்த பரிணாமத்தின் வழியாக ஒரு சமூகத்தில் அரசியல் அதிகாரத்துக்கும், நிழல் உலகுக்குமான பிணைப்பை குறுக்கு வெட்டு சித்திரமாக முன்வைக்கிறது ‘புதுப்பேட்டை’.

படத்தில் இரண்டுப் பிரதிகள் இயங்குகிறது. ‘கொக்கி’ குமாரின் அகப்பிரதி மற்றும் அரசியலதிகாரம் - நிழல் உலக உறவெனும் புறப்பிரதி.

முதலில் ‘கொக்கி’ குமாரின் அகப் பிரதி - உளவியல் பரிணாமத்தை கவனிப்போம்.

‘கொக்கி’ குமாரின் பரிதாபமான பிச்சையெடுக்கும் நிலை. போலீஸிடம் அடி, ரவுடிகளிடம் அடி, திருப்பி அடித்தால் தான் பிழைக்க முடியுமென்ற நிலையில் அவனுக்கு உள்ளிருந்து அசாத்திய தகவமைப்பு ஆற்றல் பிறக்கிறது.

தன்னைத் தற்காத்தல், எல்லைத் தாண்டும் துணிச்சல், பாம்பாக வெளியே வரும் பழி உணர்வு, தந்தையை கொல்லுதல், எதிராளிகளை சகட்டு மேனிக்கு கொல்வது, பிடித்துப் போகும் பெண்ணை நண்பனின் தங்கையென்றும் பாராமல் ஒரு நிமிடத்தில் எடுத்துக் கொள்வது என கட்டுக் கடங்காத அதிகார மமதை.

அதன்பின் மமதை உச்ச நிலையை அடைதல், மமதை கட்டுடைதல், அதிகார இழப்பு, பயம் ஆக்கிரமித்தல், வாழ்வா - சாவா நிலையை வந்தடைதல், மரணத்துக்கு தயாராகுதல், மீண்டும் வாய்ப்புக் கொடுக்கும் வாழ்வு.

‘கொக்கி’ குமாரின் இந்த கேரக்ட்டர் ஆர்க் அழுத்தமான அட்டகாசமான சம்பவங்களின் வழி வளர்கிறது. பிச்சையெடுத்தல், ரவுடி கேங்கில் இணைதல், ரவுடி தலைவனை கொல்லுதல், தன்னை தற்காத்து பெரிய ரவுடியாக வளர்தல், அரசியல் தலைமையோடு உறவு கொள்ளுதல், அப்பாவை பழி வாங்குதல், எதிராளிகளை கொல்லுதல், பலவந்தமாக நண்பன் தங்கையை திருமணம் செய்தல், அரசியலில் வளர்ச்சி அடைதல், அதிகாரம் பெருகுதல், அரசியல் தலைமையை பகைத்துக் கொள்ளுதல், அரசியல் தலைமை குமாருக்கு எதிராக திரும்புதல், எதிராளிகள் குமாரைத் துரத்துதல், குமார் எதிராளியைக் கொல்லுதல், சிறையில் அடைக்கப்படுதல், மீண்டும் வாய்ப்பு வழங்கும அரசியல்.

இந்த ஒவ்வொரு சம்பவமும் ‘கொக்கி’ குமாரின் கேரக்டர் பரிணாமத்தை சொல்லும். அதன் வழியே இந்தச் சமூகத்தில் நிழல் உலகுக்கும் அரசியல் அதிகாரத்துக்குமான தொடர்பு, குறுக்கு வெட்டு சித்திரமாக விரிகிறது.

‘கொக்கி’ குமாரின் உருவாக்கம் என்பது அவன் வாழ்ந்த விளிம்பு நிலை சூழலால் நிகழ்கிறது. ‘கொக்கி’ குமாரின் அபரிமித வளர்ச்சி, அவனது அரசியல் உறவினால் ஏற்படுகிறது. அவனது வீழ்ச்சியும் அரசியல் உறவினாலேயே ஏற்படுகிறது.

‘கொக்கி’ குமார்களை உருவாக்கி, வளர்த்து, பயன்படுத்தி, வீழ்த்துகிறது அரசியலதிகாரம்.

இந்த மொத்த படிமத்தையும் படத்தின் ஒரேயொரு காட்சி சொல்லும். படத்தின் மிகச் சிறந்த மற்றும் மிக முக்கியமான காட்சி அது. ‘கொக்கி’ குமார் தன் எதிராளி மூர்த்தியை கொன்று விட்டு அவரைக் கட்டிப் பிடித்து அழும் காட்சி.

‘நான் உன்னைக் கொல்வதோ, நீ என்னைக் கொல்வதோ தவிர்க்க இயலாதது. ஆனால் நம்மை உருவாக்கி பரஸ்பரம் கொல்ல வைத்து சூது ஆடுகிறது இந்த அரசியலதிகாரம்’ என்று சொல்லும் காட்சி அது!

அதேபோல் அரசியல் கட்சி தலைவர் வேட்பாளர்களை அறிவிக்கும் காட்சி, அரசியல் அதிகாரத்துக்கும், நிழல் உலகுக்குமான உறவை தத்ரூபமாக சொல்லும்.

சமகால சினிமா உரையாடல்களில் சினிமா டைரக்‌ஷன், மேக்கிங் இந்த இரண்டு பதங்களையும் வேறுபடுத்தியே உரையாட வேண்டியிருக்கிறது. காட்சியில் இருக்கும் செழுமை மட்டுமே நல்ல மேக்கிங் என்று வரையறுக்கிறார்கள் பலர். காட்சி செழுமையானது நல்ல தொழில்நுட்ப வசதியும், நல்ல தயாரிப்பு வடிவமைப்பும் இருந்தால் வந்து விடும்.

ஆனால், சினிமா டைரக்‌ஷன் என்பது இந்த செழுமை சார்ந்தது அல்ல. டைரக்‌ஷன் ஆனது தன் கதாப்பாத்திர உளவியலை எவ்வளவு நுட்பமாக இயக்குநர் சினிமா மொழி சாத்தியங்களை பயன்படுத்தி திரையில் வடிவமைக்கிறார் என்பதில் இருக்கிறது. ( How the Director shapes / stages the scene that consists the psychology of his characters). அதற்கு மிகச் சிறந்த உதாரணம் மற்றும் மாஸ்டர் க்ளாஸ் ‘புதுப்பேட்டை’.

ஒரு காதல் கலவியின் உச்சத் தருணத்தைப் போல செல்வராகவனின் படைப்பாளுமை சும்மா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கும் படம்தான் ‘புதுப்பேட்டை’.

‘ஒரு படத்தில் 10 காட்சிகள் நல்லா இருந்தால், அது சுவாரஸ்யமான படமாகிவிடும்’ என்பார்கள். புதுப்பேட்டையில் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்துக் காட்சிகளிலும் இருக்கும் படைப்பாற்றல் அசரடிக்கக் கூடியது . துளிகூட தேய்ந்துபோன பழகிய காட்சிகள் இல்லாத புதிய தரிசனங்களை கொடுக்கும் செதுக்கப்பட்ட காட்சிகள்.

‘அன்பு சார்’ என்று ரவுடிகள் தலைவனை ‘கொக்கி’ குமார் அழைக்கும்போது அன்பு முகத்தில் தோன்றும் ஒரு சின்ன நாணம் கலந்த பெருமிதம் அட்டகாசம்.

சோனியா அகர்வாலை பலவந்தமாக திருமணம் செய்த பின், மறுநாள் தம் ஆட்களிடம் வந்து திருமண குதூகலத்தை ‘கொக்கி’ குமார் விவரிக்கும் காட்சியை நீண்ட நெடிய ஷாட்டாக வைத்திருப்பார் செல்வராகவன். எதிரில் இருப்பவருக்கு கட் செய்திருக்க மாட்டார். அந்த நீண்ட நெடிய ஷாட்டுக்கு ஒரு பொருள் இருக்கிறது. சுற்றி இருக்கும் மனிதர்களின் எதிர்வினையைக் குறித்து கவலையே படாமல் மமதையின் உச்சத்தில் ஆடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் அகநிலையை நுட்பமாக கடத்துவதற்குத்தான் அந்த எதிர் கட் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

செல்வராகவன் தொழில்நுட்ப கிம்மிக்ஸை நம்பி மேக்கிங் என பூச்சாண்டி காட்டுபவரல்ல. அவரது திரைமொழி அசலானது, ஆழமானது, வெகு நுணுக்கமானது.

உலக அரங்கில் தமிழ் சினிமா என்றென்றும் பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்க ஒரு படைப்பு ‘புதுப்பேட்டை’.

அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது.