惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 三生石上(FineUI控件)
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
Engineering at Meta
Engineering at Meta
I
InfoQ
T
Tailwind CSS Blog
N
Netflix TechBlog - Medium
S
SegmentFault 最新的问题
H
Help Net Security
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
腾讯CDC
雷峰网
雷峰网
Martin Fowler
Martin Fowler
The GitHub Blog
The GitHub Blog
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தனி நபர் பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் வரை வைத்திருக்கலாம் ...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ‘தமிழகத்தில் தனி நபர் பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணை ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளிமாநில மதுபானங்களுக்குப் பொருந்தாது’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து 1.680 மி.லி மதுபானத்தை தமிழகத்துக்கு கொண்டுவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லரசு என்பவர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழகத்தில் தனிநபர் பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணைப்படி வெளிமாநிலத்தில் இருந்தும் மதுபானங்களை கொண்டு வரலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமாரிடம் நேற்று முன்தினம் முறையிட்டார்.

ஆந்திர மதுபானம் கடத்தல்

இதற்கிடையே, ஆந்திராவில் இருந்து 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனைக்காக தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக தமிழரசன், ராஜேஷ்குமார் ஆகியோர் மீது கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சிலம்புச்செல்வன், ‘‘தமிழகத்தில் 4.5 லிட்டர் வரை மதுபானங்களை தனிநபர்கள் தங்களது சொந்த உபயோகத்துக்காக வைத்துக் கொள்ளும் அரசாணைப்படி, தனிநபர்கள் குறிப்பிட்ட அளவுவரை மதுபானம் வைத்திருக்க அரசின் விதிகள் அனுமதிக்கும் போது, ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்ததாக போலீஸார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘தனிநபர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக தமிழகத்தில் தயாரி்க்கப்படும் மதுபானங்களை 4.5 லிட்டர் வரை வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து மதுபானங்களைக் கொண்டுவர முடியாது’’ என்றார், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.நிர்மல்குமார், ‘‘தமிழகத்தில் தனிநபர் பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணை ஆந்திரா, புதுச்சேரி போன்றவெளிமாநில மதுபானங்களுக் குப் பொருந்தாது’’ எனக்கூறி, மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.