惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX
博客园 - 叶小钗
雷峰网
雷峰网
小众软件
小众软件
量子位
V
Visual Studio Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
Martin Fowler
Martin Fowler
G
Google Developers Blog
博客园_首页
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி மறைவு
2026-05-19 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் புவன் சந்திர கந்தூரி காலமானார். அவருக்கு வயது 91.

உத்தராகண்ட்டின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.சி.கந்தூரி, வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.

இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றிய கந்தூரி, இரண்டு முறை உத்தராகண்ட் முதல்வராக பதவி வகித்தவர். மேலும், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

பி.சி.கந்தூரியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பி.சி. கந்தூரியின் மறைவுச் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இந்திய ராணுவத்தில் மிகச் சிறந்த சேவையாற்றிய பிறகு பொதுவாழ்வில் நேர்மையான, எளிமையான, வெளிப்படையான, வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

நாட்டின் மற்றும் உத்தராகண்ட்டின் வளர்ச்சி, நல்லாட்சி, மக்கள் நலன் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரத்தாக்கதாக இருக்கும். துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தராகண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான புவன் சந்திர கந்தூரியின் மறைவால் நான் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளேன். முப்படைப் பணி முதல் அரசியல் களம் வரை அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் எப்போதும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். முதல்வராக அவர் பதவி வகித்த காலத்தில் இது மிகத் தெளிவாக வெளிப்பட்டது. மத்திய அமைச்சராக அவர் ஆற்றிய பணிகளும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவையாக திகழ்கின்றன.

நாடு முழுவதும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துவதற்காக அவர் இடைவிடாமல் அயராத முயற்சிகளை மேற்கொண்டார். துயரம் சூழ்ந்துள்ள இந்நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தராகண்டின் முன்னாள் முதல்வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான புவன் சந்திர கந்தூரியின் மறைவு குறித்த இதயத்தை நொறுக்கும் செய்தியை நாங்கள் பெற்றுள்ளோம்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில், தேச சேவை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஈடுஇணையற்ற முன்மாதிரியாக கந்தூரி திகழ்ந்தார். அவரது ராணுவ வாழ்க்கை முதல் பொது வாழ்க்கை வரை, அவரது ஆளுமை முழுமையாக தேச நலன்களுக்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.

தனது அரசியல் பயணத்தில், உத்தராகண்டின் வளர்ச்சி, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான பணி கலாச்சாரம் ஆகியவற்றுக்காக அவர் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கினார். தனது எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மூலம் மக்களின் இதயங்களில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்தார். அவரது மறைவு உத்தராகண்டுக்கு மட்டுமல்லாமல், தேசிய அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். மறைந்த அவரது ஆன்மா இறைவனின் திருவடிகளில் அமைதி பெறவும், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமை அளிக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.