惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
J
Java Code Geeks
IT之家
IT之家
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog RSS Feed
P
Proofpoint News Feed
博客园 - Franky
MongoDB | Blog
MongoDB | Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 【当耐特】
Microsoft Security Blog
Microsoft Security Blog
I
InfoQ
B
Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Martin Fowler
Martin Fowler
博客园 - 聂微东
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
大猫的无限游戏
大猫的无限游戏
U
Unit 42
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விபத்தில் கணவர், மகளை பறிகொடுத்த பெண்ணுக்கு ரூ.1.60 கோடி ...
2026-05-16 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் அருகே கார் மீது லாரி மோதி விபத்​துக்கு உள்​ளான​தில் கணவர் மற்​றும் மருத்​து​வ​ரான மகளை பறி​கொடுத்த பெண்​ணுக்கு ரூ. 1.60 கோடியை இழப்​பீ​டாக வழங்க தனி​யார் இன்​சூரன்ஸ் நிறு​வனத்​துக்கு சென்னை மோட்​டார் வாகன விபத்து வழக்​கு​களுக்​கான தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை வில்​லி​வாக்​கம் திரு​மலை நகர் பகு​தி​யில் மருந்​தகம் நடத்தி வந்​தவர் பாஸ்​கர் (61). இவரது மனைவி ஜோதிகா (49), சொந்​த​மாக பியூட்டி பார்​லர் நடத்தி வரு​கிறார். மகள் ஷோபிகா (26), தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்​தார்.

மூவரும் குடும்​பத்​துடன் ஏலகிரி சென்று விட்டு கடந்த 2023 மே 14-ம் தேதி சென்​னைக்கு காரில் திரும்​பிக் கொண்​டிருந்​தனர். காரை அஸ்​வின்​கு​மார் என்​பவர் ஓட்டி வந்​துள்​ளார்.

அப்​போது இரவு 9 மணி​யள​வில் கார் பெங்​களூரு - சென்னை தேசிய நெடுஞ்​சாலை​யில் இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் அருகே வந்து கொண்​டிருந்​த​போது சிப்​காட்​டில் இருந்து அதிவேக​மாக நெடுஞ்​சாலை​யில் புகுந்த சரக்கு லாரி, கார் மீது மோதி​யது.

இதி்ல் படு​காயமடைந்த பாஸ்​கரும், அவரது மகள் ஷோபிகா​வும் உயி​ரிழந்​தனர். ஜோதி​கா​வும், கார் ஓட்​டுநரும் பலத்த காயங்​களு​டன் உயிர் தப்​பினர். இந்​நிலை​யில் இளம் மருத்​து​வ​ரான தனது மகள் மற்​றும் கணவரின் இறப்​புக்​கும், தனக்கு ஏற்​பட்ட காயங்​களுக்​கும் ரூ.3 கோடி இழப்​பீடு கோரி சென்னை மோட்​டார் வாகன விபத்து வழக்​கு​களுக்​கான இழப்​பீட்டு தீர்ப்​பா​யத்​தில் ஜோதிகா தனித்​தனி​யாக 3 வழக்​கு​களைத் தொடர்ந்​தார்.

இந்த வழக்​கு​களை விசா​ரித்த சென்னை சிறு வழக்​கு​களுக்​கான முதன்மை நீதி​மன்ற நீதிபதி ஏ.நசீர் அகமது, ‘இந்த விபத்து சரக்கு லாரி ஓட்​டுநரின் கவனக்​குறைவு, அலட்​சி​யப் போக்கு மற்​றும் அதிவேகத்​தால் நிகழ்ந்​துள்​ளது.

உயி​ரிழந்த பெண் மருத்​து​வர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் ரூ. 1.14 லட்​சம் ஊதி​யம் வாங்கி வந்​துள்​ளார். மருந்​தகம் நடத்தி வந்த பாஸ்​கர் மாதம் ரூ. 50 ஆயிரம் சம்​பா​தித்​துள்​ளார். காயமடைந்த மனு​தா​ர​ரான ஜோதி​கா​வும் தன் பங்​குக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்​பா​தித்து வந்​துள்​ளார்.

இந்த விபத்​துக்கு கார் ஓட்​டுநரின் அதிவேகமே காரணம் என்ற சரக்கு லாரி காப்​பீடு செய்​யப்​பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறு​வனத்​தின் வாதம் ஏற்​புடையதல்ல. மனு​தா​ரர் இந்த விபத்​தில் தனது மகள் மற்​றும் கணவரை பறி​கொடுத்​ததுடன் மட்​டுமல்​லாது அவரும் 34 சதவீதம் அளவுக்கு ஊனமடைந்​துள்​ளார்.

எனவே அவரது மகளின் இறப்​புக்கு ரூ. 1 கோடியே 29 லட்​சத்து 89 ஆயிரத்து 800, கணவரின் இறப்​புக்கு ரூ. 17 லட்​சத்து 24 ஆயிரம், மனு​தா​ரருக்கு ஏற்​பட்ட பாதிப்​புக்கு ரூ. 13 லட்​சத்து 58 ஆயிரத்து 300 என மொத்​தம் ரூ. 1 கோடியே 60 லட்​சத்து 72 ஆயிரத்து 100--ஐ தனியார் இன்​சூரன்​ஸ் நிறு​வனம் 7.5 சதவீத வட்​டி​யுடன்​ வழங்​க வேண்​டும்​’ என உத்தரவிட்டுள்ளார்.