惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
Recent Announcements
Recent Announcements
B
Blog
D
Docker
V
V2EX
GbyAI
GbyAI
L
LangChain Blog
博客园 - Franky
U
Unit 42
T
The Blog of Author Tim Ferriss
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
博客园_首页
D
DataBreaches.Net
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
量子位
Blog — PlanetScale
Blog — PlanetScale
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கல்விப் பணி வாய்ப்பில் சமத்துவத்துக்கான வழிகள் | சொல்... ...
2026-05-13 · via hindutamil
ம.சுசித்ரா

Updated on

2 min read

சாதியப் பாகுபாடுகளைக் களையும் நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிதாக வகுத்த சமத்துவ விதிகளுக்கு எதிர்ப்பலை எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக அதை நிறுத்திவைத்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய உயர் கல்வித் துறையில் நிலவும் சமத்துவ இடைவெளியின் உண்மை நிலையைப் பகுப்பாய்வு செய்வது அவசியம்.

முன்னேறும் மாணவர்கள்

முதலாவதாக, இந்திய உயர் கல்விச் சூழலில் மாணவர் சேர்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சற்றேறக்குறைய இடஒதுக்கீட்டுக்கு நெருக்கமான எண்ணிக்கையில் பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.

இளநிலை, முதுநிலை, எம்.ஃபில், முனைவர் பட்ட ஆராய்ச்சி (பிஎச்.டி.) ஆகிய அத்தனை நிலைகளிலும் அனைத்துச் சமூகப் பிரிவினருக்கும் உரிய இடம் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு வருகிறது.

நம்பிக்கைக்குப் பாத்திரமாக, முதுநிலை, எம்.ஃபில். பிஎச்.டி. ஆகிய உயர்நிலைப் பட்டப்படிப்புகளில் பழங்குடியினரின் சேர்க்கை இடஒதுக்கீட்டு அளவைக் காட்டிலும் 1.5இல் இருந்து 2.7 மடங்கு கூடுதலாக உள்ளது.

அதேபோன்று இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மேல்நிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அனைத்துச் சமூகப் பிரிவினர் மத்தியிலும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கல்விக்கு அடுத்தபடியாகப் பணிச் சந்தையில் அடியெடுத்து வைக்கும்போது சமூகரீதியான ஏற்றத்தாழ்வு நிலவுவதைக் காண முடிகிறது. நாட்டின் 56 மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீட்டு விகிதாச்சாரப்படி பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதை யுஜிசி 2023 ஆண்டறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

சமூகநீதி இடைவெளி

இந்திய அரசமைப்பு, பட்டியல் சாதியினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% என்பதாக இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுள்ள பணி நியமனமோ இதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. உயர் கல்வி சார்ந்த ஆசிரியர் பதவிகளில் தொடக்கநிலை உதவிப் பேராசிரியர் பணி.

இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிவோரின் விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால், 12.5% பட்டியல் சாதியினர் மட்டுமே பணிபுரிகின்றனர். அதிலும், 6.1% பழங்குடியினர் மட்டுமே உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவையன்றி, பொதுவாகச் சமூகத்தில் அதிகாரம் படைத்தவர்களாகக் கருதப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 19.3% மட்டுமே உதவிப் பேராசிரியர்களாகப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உதவிப் பேராசிரியர் நியமனத்திலேயே இவ்வளவு இடைவெளி இருக்கும்போது, அடுத்தடுத்த உயர் பதவிகளுக்கான நியமனத்தில் மேலதிக இடைவெளி காணப்படுகிறது.

அதாவது 27 ஓபிசி பேராசிரியர்கள் இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களில் சராசரியாக 7.2 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 15 எஸ்.சி. பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டிய துறைகளில் 8.8 பேர் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

7.5 எஸ்.டி பேராசிரியர் கற்பிக்க வேண்டிய பல்கலைக்கழகங்களில் 2.2 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள பாரதூரத்தை இது பட்டவர்த்தனம் ஆக்குகிறது.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் இதேபோன்றுதான் நிரப்பப்பட்டுள்ளன. குரூப் சி எனப்படும் கடைநிலைப் பணியில் இடஒதுக்கீட்டுக்குச் சற்றே நெருங்கிய எண்ணிக்கையில் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். குரூப் பி, குரூப் ஏ ஆகிய உயர்நிலை அதிகாரம் சார்ந்த பணியிடங்களில் இடஒதுக்கீட்டைக் காட்டிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பணி நியமனம் நடைபெற்றுள்ளது.

சீர்திருத்தம் தேவை

இதிலிருந்து கல்வியைக் காட்டிலும் உயர் கல்வி சார்ந்த வேலைவாய்ப்பில் சமத்துவமின்மை நிலவுவது உறுதியாகிறது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் உள்ள இடைவெளியை இட்டுநிரப்ப நினைத்தால் ஒரு கல்வி ஆண்டுக்குள் அதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம்.

அதேவேளையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பைச் சீர்செய்வது அவ்வளவு எளிதான வேலையல்ல. இடஒதுக்கீட்டு விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவதைப் பொறுத்தே அடுத்தகட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

அடுத்து, இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு தொடர்பான தரவுகளை ஆராய வேண்டியுள்ளது. கடந்த 2023-24 கல்வியாண்டில் 704 பல்கலைக்கழகங்கள், 1,533 கல்லூரிகளின் சம வாய்ப்பு மையங்கள் (Equal Opportunity Centres), எஸ்.சி./எஸ்.டி. மையங்களில் மாணவர்கள் அளித்த புகார்களை உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி அண்மையில் சமர்ப்பித்தது.

இதில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் படித்துவரும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் தொடர்பான 378 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முக்கியமாக, 90% புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

தீர்வை நோக்கி

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ள, யுஜிசியின் ‘உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026’இல் உள்ள போதாமைகள் களையப்பட வேண்டும். யுஜிசியின் 2026 வழிகாட்டுதல், சமூகரீதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாட்டைத் தடுக்க முயல்கிறது.

அது மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், பிற ஊழியர்களுக்கும் சமத்துவம் உறுதி செய்யப்படும் என்கிறது. இவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்க அனைத்துச் சமூக மாணவர்களை உள்ளடக்கிய சூழல், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் புகார் அளிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டால் மட்டும் போதாது.

பணிவாய்ப்பில் சமத்துவத்தை நிலைநாட்டுவதே தீர்வை நோக்கிய சரியான நகர்வாக இருக்கும். குறிப்பாக, உயர் பதவிகளில் அனைத்து சமூகப் பிரிவினரும் உரிய பிரதிநிதித்துவத்துடன் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினருக்குமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும் பட்சத்தில் பிரச்சினையின் தீவிரத்தன்மை வெகுவாகக் குறையும்.

சமய - சமூக நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கக்கூடிய நேர்மறையான நிகழ்ச்சிகள் உயர் கல்வி வளாகங்களில் வட்டார அளவில் திட்டமிடப்பட வேண்டும். அனைத்துச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அவற்றில் பங்கேற்பதன் மூலம், சுமுகமான வழிகளில் சமத்துவம் கனியும் உன்னத நிலை எட்டப்பட வேண்டும்.