惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
月光博客
月光博客
IT之家
IT之家
B
Blog RSS Feed
T
Tailwind CSS Blog
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 三生石上(FineUI控件)
MyScale Blog
MyScale Blog
J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - Franky
博客园 - 叶小钗
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
博客园_首页
B
Blog
V
V2EX
腾讯CDC
Vercel News
Vercel News
量子位
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இடதுசாரிகளும் விசிகவும் தவெக கூட்டணி கட்சிகளா? - அமைச்சர்...
2026-05-15 · via hindutamil

Updated on

1 min read

மதுரை: திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், தவெக ஆட்சியை காப்பாற்ற ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்களையும் சேர்த்து ‘எங்கள் கூட்டணிக் கட்சிகள் சார்பில் எங்களுக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது’ என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியிருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சிடிஆர் நிர்மல் குமார் இன்று முதல் முறையாக மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தவெகவினர் வரவேற்பு அளித்தனர். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தவெக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு நாளும் முதல்வர் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். உறுதியாக மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அவற்றை 100 சதவீதம் நிறைவேற்றுவோம். 140 பேர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால், பெரும்பான்மையை நிரூபித்துவிட்டோம். இதற்கு மேல் என்ன வேண்டும்.

எங்கள் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 120 பேருக்கான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். இந்த ஆதரவில்லாமல் மேலும் பல எம்எல்ஏ-க்கள், மக்கள் தீர்ப்பை மதித்து எங்களுக்கு வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் அளித்த தீர்ப்பை யாரும் எதுவும் செய்துவிடமுடியாது.

மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவது தடுக்கப்படும். நீட் தேர்வு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களால் ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்கள் நோக்கமாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட்கள், விசிக கட்சிகள் தற்போது வரை திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், ஆட்சியை காப்பாற்றவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்களையும் சேர்த்து எங்கள் கூட்டணி கட்சிகள் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியிருப்பது, திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பழனிசாமியை ஏன் முதல்வர் சந்திக்கவில்லை?

அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார் மேலும் கூறுகையில், “ஸ்டாலினும், அதிமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக தனது கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இவர்களெல்லாம் ரகசியமாக பல சந்திப்புகளை நடத்தியுள்ளனர். அதற்குப் பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவிக்காததால், ஒரு கள்ளக் கூட்டணி முடிவுக்கு வந்தது. முதல்வர் விஜய், அதிமுகவில் சில தலைவர்கள் தன்னை பார்க்க விரும்பியதால் அவர்களைச் சந்தித்தார். இதில் எந்தத் தவறு இல்லை” என்றார்.

பழனிசாமியை விஜய் சந்திக்காதது பற்றி கேள்வி எழுப்பியதுபோது, “ஒரு சில பேரை ஒரு சில நேரங்களில் சந்தித்தால் அது சரியாக இருக்காது. ஏனென்றால் சில அரசியல் சூழ்நிலையில், ஒரு சிலரை சந்தித்தால் மக்களுக்கு எதிராக இருக்கும். அதனால், அது சரியாக இருக்காது என்பதால்தான் அந்த சந்திப்பு நடக்கவில்லை” என்றார் அமைச்சர் நிர்மல் குமார்.