惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
博客园 - 【当耐特】
博客园 - 叶小钗
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
D
Docker
T
The Blog of Author Tim Ferriss
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
M
MIT News - Artificial intelligence
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
罗磊的独立博客
小众软件
小众软件
A
About on SuperTechFans
MyScale Blog
MyScale Blog
D
DataBreaches.Net
The GitHub Blog
The GitHub Blog
C
Check Point Blog
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எம்​பாப்​பேயின் ‘ஸ்டன்னிங்’ கோல் - செனகல் சவாலை 3-1 என நொ...
ஆர்.முத்துக்குமார் · 2026-06-17 · via hindutamil

Updated on: 

கிலியன் எம்​பாப்​பே தனது அபாரமான இரட்டை கோல்களால் உலகக் கோப்பை வரலாற்றில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார். பிரான்ஸ் தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதுவும் கூடுதல் நேரத்தில் எம்​பாப்​பே அடித்த கோல் உண்மையில் பிரமிப்பூட்டும் கோல் என்பதோடு இந்த உலகக் கோப்பையில் இதுவரையிலான கோல்களில் ஆகச்சிறந்தது என்ற வகையறாவைச் சேர்ந்ததானது. தனக்கு வந்த அருமையான கிராஸை 30 யார்டு தூரத்திலிருந்து கோல் வலை கிழிய அடித்த சக்தி வாய்ந்த ஷாட் மறக்க முடியாது மனதில் நெடுங்காலம் தங்கும் கோலாக அமைந்தது.

நியூ ஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை குரூப்-ஐ ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் செனகல் தேசிய கால்பந்து அணியை வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடங்கியது.

2018 உலகக் கோப்பையை வென்று, 2022 தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ் அணி இந்த தொடரிலும் கோப்பையை வெல்லும் முக்கிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

எனினும் முதல் பாதியில் செனகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்பாப்பே முதல் பாதியில் வெறும் 14 முறை மட்டுமே பந்தை தொட்டார். பிரான்ஸ் அணியை விட செனகல் 5-1 என்ற கணக்கில் அதிக ஷாட்களை முயற்சித்தது. 25-வது நிமிடத்தில் செனகல் வீரர் நிக்கோலஸ் ஜாக்சன் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு, கோல்கீப்பர் மைக் மெய்னான் காலில் பட்டு வெளியே சென்றது.

ஆனால், 2-வது பாதியில் பிரான்ஸ் தனது ஆட்டத்தின் தரத்தை உயர்த்தியது. 63-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே கொடுத்த துல்லியமான பாஸை எம்பாப்பே கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். மாற்று வீரராக களமிறங்கிய பிராட்லி பார்கோலா 79-வது நிமிடத்தில் செனகல் கோல்கீப்பர் எட்வார்ட் மெண்டியை ஏமாற்றும் வகையில் பந்தை வலைக்குள் செலுத்தினார். பிரான்ஸ் முன்னிலையை 2-0 ஆக முன்னிலை பெற்றது.

பின்னர் இப்ராஹிம் எம்பாயே செனகலுக்காக அடித்த கோல் வெறும் ஆறுதல் கோல் என்று கூற முடியாது, கொஞ்சம் தூரத்திலிருந்து வலையைத் தாக்கிய அவரது ஷாட் திகைப்பூட்டும் இன்னொரு ஷாட்தான் என்பதில் ஐயமில்லை. அட்டகாசமான கோல் இது.

ஆனால், எல்லா கோல்களையும் இதுவரை இந்த உலகக் கோப்பையில் அடித்த கோல்களையும் பின்னுக்குத் தள்ளிய கோலை எம்​பாப்​பே கூடுதல் நேரத்தில் அடித்தார். 30 யார்டுகள் தொலைவில் இருந்து பந்தை எடுத்துச் சென்று, அற்புதமான நீண்ட தூர ஷாட்டை மேல் மூலையில் செலுத்தி ஆட்டத்தின் சிறந்த கோல்களில் ஒன்றானது.

இந்த இரண்டு கோல்களுடன் 27 வயதான எம்​பாப்​பே உலகக் கோப்பை போட்டிகளில் தனது மொத்த கோல்களின் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தி, மேற்கு ஜெர்மனியின் ஜாம்பவான் கெர்ட் முல்லர் சாதனையை சமன் செய்தார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அதிக கோல் பதிவு செய்தவர்கள் வரிசையில் அவருக்கு முன்னால் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோஸ், அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி (தலா 16 கோல்கள்) மற்றும் பிரேசிலின் ரொனால்டோ நசாரியோ (15 கோல்கள்) உள்ளனர். இந்த சாதனையின் மூலம் அவர் பீலே மற்றும் பிரான்ஸ் ஜாம்பவான் ஜஸ்ட் ஃபொன்டெய்ன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார்.

மேலும், இந்த இரட்டை கோல்களால் பிரான்ஸ் அணிக்காக எம்​பாப்​பே அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. இதன் மூலம் முன்னாள் ஒலிவியர் ஜிரூட் வைத்திருந்த சாதனையை முறியடித்து, பிரான்ஸ் அணியின் அதிக கோல் அடித்த வீரராக உயர்ந்தார்.