惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
小众软件
小众软件
爱范儿
爱范儿
Y
Y Combinator Blog
博客园 - Franky
美团技术团队
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
IT之家
IT之家
人人都是产品经理
人人都是产品经理
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
大猫的无限游戏
大猫的无限游戏
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 聂微东
WordPress大学
WordPress大学
V
Visual Studio Blog
博客园_首页
阮一峰的网络日志
阮一峰的网络日志
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சூரியக் கட்சியின் ‘சிடுசிடு’ சூப்பர் சீனியர் தலைவரின் ‘சோ...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

சூரியக் கட்சியின் ‘சிடுசிடு’ சூப்பர் சீனியர் தலைவர், தான் பெரிதும் நேசித்த தனது ‘பாடி’ தொகுதி மக்கள், தன்னை மூன்றாம் இடத்துக்கு பாஸ்பண்ணி விட்டதில் தாங்கமுடியாத வருத்தத்தில் தவிக்கிறாராம். அதனால், வாக்கு எண்ணிக்கை நாளில் தொகுதியைவிட்டு கிளம்பி தலைநகருக்கு வந்தவர், இதுவரை தொகுதிப் பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லையாம்.

‘‘நமக்கு ஒன்றும் பின்னடைவு இல்லை. இது விசில் அலையால் வந்த வினை. அதனால்தான் நம்ம தலைவரே தோத்துட்டாரு.. விடுங்கப்பா... நமக்கு வாக்களிச்ச மக்களுக்கு நன்றி சொல்லணும் வாங்க’’ என்று ‘கதிரான’ மகன் கட்டாயப்படுத்தி அழைத்தாராம்.

அதை ஏற்க மறுத்தவர், ‘‘அலையும் கிடையாது... மழையும் கிடையாது. அப்படி அலை அடிச்சிருந்தா 200 தொகுதிகளுக்கு மேல அவங்க ஜெயிச்சிருக்கணும். அப்படியா நடந்திருக்கு? தொகுதி மக்களுக்காக பாத்துப் பாத்து எவ்வளவோ செஞ்ச நான், அவங்க என்னை கைவிட மாட்டாங்கன்னு நம்புனேன். ஆனா, அவங்க துரோகம் பண்ணிட்டாங்க. அவங்கள மறுபடியும் சந்திக்க எனக்கு விருப்பம் இல்லப்பா.. விட்டுரு” என்று சொல்லிட்டாராம்.

‘‘நான் மறையும்போதும் எம்எல்ஏவாகவே இருக்கணும். மறைவுக்கு பின்னாடி, என் அஸ்தியை தொகுதி முழுக்கத் தூவணும்’’ என்று தேர்தலுக்குத் தேர்தல் நெகிழ்ச்சியாய் சொல்லிக் கொண்டிருந்த சூப்பர் சீனியர், இப்போது தொகுதியை வெறுப்பதுடன் மட்டுமல்லாது, தன் வசம் உள்ள தலைமைப் பதவியையும் வேறு யாருக்காவது தரச் சொல்லிவிடலாமா என்ற யோசனையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.