





















சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் விடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து அரசு உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும், அரசின் பல்வேறு துறைகளில் கடந்த மே 13 முதல் பல்வேறு குறுகியகால டெண்டர்கள் விடப்பட்டன.
இதற்கு பொதுமக்கள் மத்தியிலும், ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு வந்த நிலையில், ஏற்கெனவே சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள கூடாது என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் காரணமாக, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின் துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த மே 13 முதல் 22-ம் தேதி வரை போடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。