惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
J
Java Code Geeks
宝玉的分享
宝玉的分享
美团技术团队
博客园 - Franky
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
有赞技术团队
有赞技术团队
量子位
Martin Fowler
Martin Fowler
MyScale Blog
MyScale Blog
Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
月光博客
月光博客
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园_首页
腾讯CDC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மக்களிடையே ‘லாக்டவுன்’ அச்சம்” - பெட்ரோல், டீசல் விலை உய...
2026-05-16 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: “மீண்டும் ஒரு ‘லாக்டவுன்’ போன்ற அவசர நிலையை உருவாக்குமோ என்ற பயமும் மக்களிடையே எழுந்துள்ளது. உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த விலை உயர்வால், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கடுமையான விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மறுபுறம் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலை நீடித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் உள்ளது. தற்போதைய சூழல் மீண்டும் ஒரு ‘லாக்டவுன்’ போன்ற அவசர நிலையை உருவாக்குமோ என்ற பயமும் மக்களிடையே எழுந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்பது உறுதி என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். ‘மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது போல, ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, மறுபக்கம் தட்டுப்பாடு என இரட்டைச் சுமைகளால் பொதுமக்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் தவிக்கின்றனர்.

எனவே, தமிழக அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், சந்தையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் தீர்வுகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.