惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Martin Fowler
Martin Fowler
MyScale Blog
MyScale Blog
博客园 - 聂微东
有赞技术团队
有赞技术团队
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
T
The Blog of Author Tim Ferriss
D
Docker
L
LangChain Blog
Vercel News
Vercel News
C
Check Point Blog
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
Recent Announcements
Recent Announcements
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
V2EX
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்துள்ளனர்” - தவெகவ...
2026-05-18 · via hindutamil

Updated on

2 min read

தஞ்சை: “சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி சிறு பிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வைத்து, அவர்களின் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்யவைத்து திட்டமிட்டு வாக்களிக்கச் செய்து ஆட்சிக்கு வந்துள்ளனர். அது நம் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சையில் பூண்டி கலைவாணன் இல்ல திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாக கருதி பாடுபடும் இயக்கம் திமுக. நடந்து முடிந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்துவிட்டதை போல, இத்துடன் திமுக முடிந்துவிட்டது என இரங்கற்பா பாடுவதற்கு சிலர் முன்வந்துள்ளனர். நம்முடைய இன எதிரிகள் அந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திமுக இதுவரை எத்தனையோ தேர்தல்களை பார்த்துள்ளது. 1949ல் தொடங்கிய திமுக, பல தேர்தல்களை சந்தித்து வெற்றியையும், தோல்வியையும் பெற்றுள்ளது.

தோல்வியடையும்போதுதான் திமுக ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்திருக்கிறது. இங்கே பேசியவர்கள், மேடையில் உள்ளவர்கள் மற்றும் எதிரில் உள்ளவர்கள் எல்லோரும் சோகமாக இருப்பதுபோல் உள்ளனர். நாம் சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் தான் இன்றைக்கும் ஆட்சியில் இருக்கிறோம். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எல்லா தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசு.

நாம் வெற்றி வாய்ப்பை இழந்து, புதிய ஆட்சி அமைந்தபோது, அவர்களுக்கு வாழ்த்து சொன்னேன். அப்போது, ‘திமுக நிறைவேற்றிய திட்டங்களை தொடர வேண்டும்’ எனச் சொன்னேன். அதன்படி நாம் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். அதனால்தான் இப்போதும் நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்று சொன்னேன். நாம் செய்த சாதனைகளை எல்லாம் யாராலும் மாற்றிட முடியாது. நாம் கொண்டுவந்த இந்த திட்டங்கள் நடக்கும் வரை திராவிட மாடல் தான் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்ததும் நான் சோர்வடையவில்லை. நாம் எப்படி வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பதை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளோம். அந்த ஆய்வின் போது, நம்மிடம் என்ன பிரச்சினை, என்ன குறை எனக் கேட்டறியப்படும். இதற்காக ஒரு இணையதளமும் தொடங்கியுள்ளோம். அதில் அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்தித்து பல்வேறு பணிகளை திமுக செய்தது. ஆனாலும் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை?. ஆனால், தேர்தலுக்கு எந்தப் பணிகளையும் செய்யாமல், மக்களை கூட சந்திக்காமல், பாக முகவர்கள், பூத் ஏஜெண்டுகள், வாக்கு எண்ணும் ஏஜெண்டுகள் கூட நியமிக்காமல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அது தவறு இல்லை.

அவர்களின் வெற்றிக்கு காரணம் சமூக வலைதளம். இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி சிறுபிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வைத்து, அவர்களின் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்யவைத்து திட்டமிட்டு வாக்களிக்க வைத்து ஆட்சிக்கு வந்துள்ளனர். அது நம் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. இனி நாம் உஷாராக இருந்து அதையும் முறியடிக்க திட்டங்களை தீட்டியுள்ளோம். எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்று பணியாற்றுங்கள்.

நாம் இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருந்தால், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம் என்பதே எங்கள் கவலையாக உள்ளது. ஆனாலும், எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம்.” என்று கூறினார்.