惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
罗磊的独立博客
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
J
Java Code Geeks
U
Unit 42
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
爱范儿
爱范儿
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
腾讯CDC
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
I
InfoQ
月光博客
月光博客
博客园_首页
Vercel News
Vercel News
P
Proofpoint News Feed
GbyAI
GbyAI
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆசிரியர்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது? - என் மன வானில்
2026-05-12 · via hindutamil

Updated on

2 min read

ஆண்டு 2012. எங்கள் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் சமுத்திரம். துறுதுறு வென்று இருப்பான். பெரிய மனிதர்களைப்போலத்தான் பேச்சும் நடத்தையும்.

ஏன் நடையும் கூட இருக்கும். ஆய்வு செய்யும் அதிகாரிகள் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு எல்லாப்பக்கமும் கண்களைச் சுழற்றியபடி எங்கேயோ பார்த்து, எதையாவது கேட்பார்களே - அப்படித்தான் அவனது பார்வையும் கேள்வியும் இருக்கும்.

பள்ளிக்கு முதல் மாணவனாக வந்து, கடைசி மாணவனாக வெளியேறுவான். சத்துணவு சாப்பிடுகையில் உணவையோ, முட்டையையோ வீணடிக்கும் சக மாணவர்களைக் கடிந்துகொள்வான்.

ஒரு முறை, ஏழெட்டு நாள் விடுமுறைக்குப் பின்பு பள்ளி திறக்கப்பட்டபோது பிளஸ் 1 வகுப்பில் மாணவிகள் தங்கள் வகுப்பைச்சுத்தம் செய்கையில் டெஸ்க்கின் அடியில் பாம்பு ஒன்றைப் பார்த்து அலறி அடித்து வெளியே வந்தனர்.

மாணவர்களும் தங்கள்

பங்குக்கு நாலாபுறமும் சிதறி ஓடினர், கத்திக்கொண்டே... கத்துவது முக்கிய மில்லையா. சமுத்திரம் எட்டாம் வகுப்பி லிருந்து வெளியே வந்தவன், வழக்கம்போல கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டே வந்து “என்ன சார் பிரச்சினை” என்றான் என்னிடம். “ஏதோ பாம்பு கெடக்குதாம்ப்பா கம்ப எடுத்தா அடிச்சுத் தூக்கிப் போடுவோம்” என்றேன்.

“இருங்க சார்! என்ன பாம்புன்னு பாப்போம்”, என்றவன், அண்ணே... அக்கா தள்ளிக்கங்க என்றவாறு அவர்களை விலக்கிக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தான். எனக்கு உதறலெடுத்தது. ஏதோ பயப்படாதது போலக் காட்டிக்கொண்டு, “போங்கப்பாபோய் அந்த மரத்தடியில நில்லுங்கப்பா... பாம்ப அடிச்சுப்புட்டு கூப்புடுறோம்” என்றேன் மாணவர்களிடம்.

ஒரு பாம்பை அடிக்க இத்தன பேரா என்று வலது கையை நெளித்துக்கேலி செய்துவிட்டு டெஸ்க்குகளை ஆராய்ந்தான், சமுத்திரம். ஐந்து விநாடிகள்தான் வெளியே வந்தான். “கொமரன் பாம்பு சார், ஒண்ணும் செய்யாது” என்றான். நான் கம்பை நீட்டியவாறே வகுப்புக்குள் நுழைந்தேன். “சார்... சார்... அடிச்சிராதீங்க இது வயப் பாம்பு.

விஷமில்லாத பாம்பு சார். எலியைப் பூராம் புடிச்சுத் திங்கிற பாம்பு, அடிக்கப் பிடாது” என்றான். “வேற என்னடா செய்யிறது சமுத்திரம்” என்றேன். “இருங்க சார்.. பதவிசா புடிச்சுப்புடுறேன்” என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “டேய்... விளையாடாதடா... கொத்திப் புடுச்சுன்னா என்னடா பண்றது” என்று பதறினேன்.

கறைப் பற்களும், குறை ஈறுகளும் தெரிய பளீரென்று சிரித்தான். “சார், சத்தியமா ஒண்ணும் செய்யாது... கடிச்சாலும் விஷமில்ல... பயப்படாதீங்க” என்று சொன்னவாறே குனிந்து அந்தப் பாம்பை கையில் பிடித்துவிட்டான். சின்னப் பாம்புதான். ஆனால், சீறுசீறுவென்று சீறியது. தலையில் தட்டினான். “பேசாம இருக்கமாட்ட... சார்...பயப்படுறாருல்ல...” என்றான்.

வெளியே நின்றிருந்த பெரிய மாணவர்கள், “டேய்... சமுத்திரம் அதைத் தூக்கிக் காட்டுடா” என்றார்கள். “அண்ணே... இது என்ன விளை யாட்டுப் பொருளாண்ணே... நம்மள மாதிரி ஒரு உசிருண்ணே... போங்கண்ணே” என்று சொல்லிவிட்டு காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து வயற்காட்டிற்குள் விட்டுவிட்டு வந்தான்.

அந்த சமுத்திரத்தைப் பற்றி ஆசிரியர்கள் நித்தம் ஒரு குறை சொல்வார்கள். நான் அவனுக்கு வகுப்பு எடுக்கவில்லை என்றாலும் பள்ளியின் முரட்டு வாத்தியார் என்றும் கோபக்கார வாத்தியார் என்றும் பெயரெடுத்து வைத்திருந்ததால், என்னிடம் பலப்பல புகார்கள் வந்தவண்ணம் இருக்கும்.

வீட்டுப்பாடம் எழுதுவதில்லை. படிப்ப தில்லை. கேள்விகள் கேட்டால் சொல்வதில்லை - இப்படி பல குற்றச்சாட்டுகள். அப்படி அன்றும் ஒரு குற்றச்சாட்டைச் சொன்ன சக ஆசிரியர் வகுப்பு லீடரோடு சமுத்திரத்தையும் அனுப்பி வைத்திருந்தார். லீடர் வந்து ஆசிரியர் சொல்லச் சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்னான்.

நாலு அடி போடுவீங்களாம் சார் என்று சொல்லி விட்டு ப்ளக்கென்று சிரித்துக்கொண்டே போனான். சமுத்திரம் வழக்கம்போல கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு ஃபேன் சுழல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு அட்டெண்டன்ஸ் நோட்டில் பென்சிலால் எழுதுவதுபோல பாவனை செய்து கொண்டிருந்தேன்.

கோபமாக இருக்கிறேனாம். மறுபடி அவனைப் பார்த்தபோது பெரிய ஓணான் ஒன்று எனக்குப் பக்கவாட்டு மரத்தில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். செருமினேன். “என்னா சமுத்திரம்... சொன்ன பேச்சு கேக்க மாட்டேங்குறியாம்... ஹோம் ஓர்க் கெல்லாம் பண்ண மாட்றியாம்... என்னா விஷயம்” என்றேன், கண்களை உருட்டி, பெரு மூச்செடுத்து, சட்டையை மடித்து விட்டபடி.

அவன் கொஞ்சமும் அசரவில்லை. என்னை நேருக்கு நேராகப் பார்த்தான். சின்னச் சின்ன கண்கள். பெரிய பெரிய பார்வைகள். செருமிக்கொண்டான். நெருங்கிவந்து என் மேசை மீது இரண்டு கைகளையும் ஊன்றியபடி சொன்னான், சார்... எனக்கு படிப்பு வரலேங்கிறது “எனக்குப் புரிஞ்சுருச்சு... டீச்சர்ங்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது?”

- கட்டுரையாளர்: சுரேஷ் காத்தான், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கோசுகுறிச்சி - நத்தம், திண்டுக்கல்.