惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
aimingoo的专栏
aimingoo的专栏
月光博客
月光博客
博客园 - Franky
Martin Fowler
Martin Fowler
U
Unit 42
阮一峰的网络日志
阮一峰的网络日志
Recent Announcements
Recent Announcements
The Cloudflare Blog
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
宝玉的分享
宝玉的分享
J
Java Code Geeks
B
Blog RSS Feed
博客园 - 三生石上(FineUI控件)
MongoDB | Blog
MongoDB | Blog
腾讯CDC
博客园_首页
博客园 - 司徒正美
D
DataBreaches.Net
I
InfoQ
GbyAI
GbyAI
IT之家
IT之家
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வெனிசுலா பூகம்பம்: உயிரிழப்பு 235 ஆக அதிகரிப்பு - தொடரும்...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

கராகஸ்: வெனிசுலா நாட்​டில் நேற்று அடுத்​தடுத்து ஏற்​பட்ட சக்​தி​வாய்ந்த பூகம்​பங்​களில் 235 பேர் உயி​ரிழந்​தனர். 4,000-க்​கும் மேற்பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

தென் ​அமெரிக்க கண்​டத்​தில் வெனிசுலா அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் யாராகுய் மாகாணம், சான்​பெலிப் நகரில் புதன்​கிழமை மாலை 6 மணி அளவில் ( இந்​திய நேரப்​படி வியாழக்​கிழமை அதிகாலை 3.35 மணி) சக்​தி​வாய்ந்த பூகம்​பம் ஏற்​பட்​டது. இது ரிக்டர் அலகில் 7.2 ஆகப் பதி​வானது.

அடுத்த 40 விநாடிகளில் யுமரே நகரில் 2-வது மிகப்​பெரிய பூகம்​பம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அலகில் 7.5 ஆகப் பதி​வானது. முதல் பூகம்​பம் ஏற்​பட்ட சான் பெலிப் நகரில் இருந்து 16 கி.மீ. தொலை​வில் யுமரே நகர் அமைந்துள்​ளது.

இந்த மிகப்​பெரிய பூகம்​பங்​களால் யாராகுய், லா குய்​ரா, கராபோபோ, மிராண்​டா, அரகு​வா, பால்​கான் மற்​றும் வெனிசுலா தலைநகர் கராகஸ் பகு​தி​கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சான் பெலிப், யுமரே, மோரோன், தலைநகர் கராகஸ், சக்​காவோ, சான் பெர்​னார்​டினோ, அல்​ட​மி​ரா, லாஸ் பாலோஸ் கிராண்​டஸ், பருட்​டா, எல் பராய்​சோ, லா குய்​ரா, காட்டியா லா மார், மகுடோ, மைக்​கெட்​டியா உட்பட பல்​வேறு நகரங்​களில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், அரசு அலு​வல​கங்​கள், மருத்​து​வ​மனை​கள் தரை மட்​ட​மாகின. இந்த பகு​தி​களில் அடுத்தடுத்து 30-க்​கும் மேற்​பட்ட நிலநடுக்​கங்​கள் ஏற்​பட்​டன. இவை ரிக்டர் அலகில் 4.9 முதல் 6.3 வரை பதி​வாகின.

பூகம்​பம் குறித்து வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்​ரிக்ஸ் தலைநகர் கராகஸில் நிருபர்​களிடம் கூறிய​தாவது: வெனிசுலாவில் ஏற்​பட்ட சக்​தி​வாய்ந்த பூகம்​பங்​களால் இது​வரை 235 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 4,000-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து உள்​ளனர். பூகம்​பகத்​தால் ஏராள​மான கட்​டிடங்​கள் இடிந்து உள்​ளன. இடி​பாடு​களில் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி போர்க்​ கால அடிப்​படை​யில் நடை​பெறுகிறது.

உயி​ரிழப்பு மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சுகிறோம். வெனிசுலா முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​ பட்டு உள்ளது. மீட்​பு, நிவாரண பணி​களில் அமெரிக்கா உதவி வருகிறது. அந்த நாட்​டுக்கு நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்கிறோம். இவ்​வாறு அதிபர் டெல்சி ரோட்​ரிக்ஸ் தெரிவித்தார்.

விமான நிலை​யங்​கள் மூடல்:

வெனிசுலா தலைநகர் கராகஸுக்கு அருகே 21 கி.மீ. தொலை​வில் மைக்​கெட்​டியா சர்வதேச விமான நிலை​யம் செயல்​படு​கிறது. அடுத்​தடுத்து ஏற்பட்ட பூகம்பங்களால் இந்த விமான நிலை​யம் கடுமை​யாக சேதமடைந்திருக்​கிறது. இதன்​காரண​மாக விமான நிலை​யம் முழு​மை​யாக மூடப்​பட்டு உள்​ளது. நாடு முழு​வதும் உள்ள அனைத்து சர்​வ​தேச விமான நிலை​யங்​களும் மூடப்​பட்டு உள்ளன.

பூகம்​பத்​தால் வெனிசுலா​வின் பெரும்​பாலான பகு​தி​களில் மின் விநி​யோகம் முழு​மை​யாக முடங்கி உள்​ளது. குடிநீர், சமையல் காஸ் விநி​யோகம் நிறுத்​தப்​பட்டு உள்​ளது. தொலைத்​ தொடர்பு சேவை முற்​றி​லு​மாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. கல்வி நிறு​வனங்​களுக்கு கால​வரை​யின்றி விடு​முறை அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. பூகம்​பத்​தில் உயிர் தப்​பிய​வர்​கள் புதன்​கிழமை இரவு முழு​வதும் சாலை, தெருக்​கள், மைதானங்​களில் தங்​கி​யிருந்​தனர். அவர்​களுக்கு தேவை​யான உணவு வகைகளை வெனிசுலா அரசும் தொண்டு அமைப்​பு​களும் வழங்கி வரு​கின்​றன.

இந்நிலையில், பூகம்​ப பாதிப்புக்கு உலக நாடு​கள் ஒன்றிணைந்து உதவி செய்ய வேண்​டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கடம் தரும் களத்தகவல்:

சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து வெனிசுலா நாட்டில் நாளாக மீட்பு பணிகளில் மக்கள் உட்பட பல்வேறு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளார்களா என வெனிசுலா மக்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சுமார் 4,200 பேர் காயங்களுடன் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கார்லோஸ் அல்வரடோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்​கல்: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், ”வெனிசுலா​வில் ஏற்​பட்ட பேரழிவு குறித்து மிகுந்த மன வேதனை அடைந்​தேன். தங்​களது உறவினர்​களை இழந்து வாடும் குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இந்த இக்​கட்​டான தருணத்​தில், சாத்​தி​ய​மான அனைத்து உதவி​களை​யும் வழங்க இந்​தியா தயா​ராக உள்​ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு லட்​சம் பேர் உயி​ரிழப்​பு?

வெனிசுலா பூகம்​பம் குறித்து சர்வதேச புவி​யியல் ஆய்​வாளர்​கள் கூறிய​தாவது: பசிபிக், வட அமெரிக்​கா, யுரேசி​யா, ஆப்​பிரிக்​கா, இந்​தோ- ஆஸ்​திரேலி​யா, தென் அமெரிக்​கா, அண்​டார்​டிகா ஆகிய 7 பெரிய பூமித் தட்டுகளும் பல்​வேறு சிறிய பூமித்தட்​டு​களும் உள்​ளன. இவை ஒன்றோடொன்று உரசும்​போது, மோதும்​போது பூகம்​பங்​கள், நிலநடுக்​கங்​கள் ஏற்​படு​கின்​றன. தற்​போது தென்​அமெரிக்கா பூமித் தட்டு மற்​றும் சிறிய அளவி​லான கரிபீயன் பூமித் தட்​டு​வின் மோதலால் வெனிசுலா​வில் பூகம்​பங்​கள் ஏற்​பட்டு உள்​ளன.

வெனிசூலாவை போன்று ஜப்​பானிலும் வியாழக்​கிழமை மிகப்​பெரிய பூகம்​பம் ஏற்​பட்​டிருக்​கிறது. அந்த நாட்​டில் ஏற்​பட்ட பூகம்பம், ரிக்​டர் அலகில் 7.2 ஆகப் பதி​வாகி உள்​ளது. ஆனால் ஜப்பானில் கடலுக்​கடி​யில் பூகம்​பம் ஏற்​பட்​டது. மேலும் அந்த நாட்டில் பூகம்​பத்தை எதிர்​கொள்​ளும் வகை​யில் வீடு​கள், கட்டிடங்​கள் கட்​டப்​படு​கின்​றன. இதனால் ஜப்​பானில் உயி​ரிழப்பு ஏற்​பட​வில்​லை. வெனிசுலா​வில் தலைநகர் கராகஸ் உட்பட பெரிய நகரங்​களில் அடுத்​தடுத்து 2 பெரிய பூகம்​பங்​கள் ஏற்​பட்டு உள்​ளன. ஏராள​மான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் இடிந்து விழுந்த​தால் அந்த நாட்​டில் உயி​ரிழப்பு அதி​கரித்து வரு​கிறது. இவ்வாறு சர்​வ​தேச புவியியல் ஆய்​வாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அமெரிக்க புவி​யியல் ஆய்வு மையம் (யுஎஸ்​ஜிஎஸ்) நேற்று வெளியிட்ட அறிக்​கை​யில், “வெனிசுலா பூகம்​பகத்​தில் 10,000 முதல் ஒரு லட்​சம் பேர் வரை உயி​ரிழப்பு இருக்​கக்​கூடும்” என்று தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “வெனிசுலா​வில் ஏற்பட்ட இரு பெரிய பூகம்​பங்​களால் ஏராள​மான உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. இந்த நேரத்​தில் வெனிசுலா​வுக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும்​ அமெரிக்​கா வழங்​கும்​. அங்​கிருந்​து வரும்​ முதல்​கட்​ட தகவல்​கள்​ மிக​வும்​ மோச​மாக உள்​ளன” என்​று தெரிவித்துள்ளார்.