惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
T
The Blog of Author Tim Ferriss
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
I
InfoQ
美团技术团队
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
Visual Studio Blog
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 【当耐特】
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 聂微东
Last Week in AI
Last Week in AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
5 ஆண்டு கால விவாகரத்து வழக்கின் ஆவணங்களை கிழித்து நீதிமன்...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​தார்.

டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2020-ம் ஆண்​டில் ஷிகா​வுக்​கும் சாப்ட்​வேர் இன்​ஜினீயர் சவுரபுக்​கும் திரு​மணம் நடை​பெற்​றது. சில மாதங்​களி​லேயே இரு​வருக்​கும் இடையே கருத்து வேறு​பாடு​கள் எழுந்​தன.

கணவர் வீட்டை விட்டு வெளி​யேறிய ஷிகா, தனது தாய் வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார். கணவர் சவுரபிடம் இருந்து விவாகரத்து கோரி டெல்லி குடும்ப நல நீதி​மன்​றத்​தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுமார் 5 ஆண்​டு​களாக நீதிமன்றத்தில் நடை​பெற்று வந்​தது.

இதனிடையே சில வாரங்​களுக்கு முன்பு ஷிகா​வின் தந்​தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்​பட்​டது. நிதிச்​சுமை காரண​மாக அவர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இந்த தகவல் சவுரபுக்கு தெரிய​வந்​தது. உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு சென்ற அவர், குரு​கி​ராமில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மாம​னாரை சேர்த்​தார்.

மருத்​துவ சிகிச்​சைக்​கான முழுச்​செல​வையும் அவரே ஏற்​றுக் கொண்​டார். இதன்​காரண​மாக இரு குடும்​பங்​களுக்கு இடையே இருந்த கசப்​புணர்வு மறைந்​தது. ஷிகா​வின் மனநிலை​யிலும் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டது.

சில நாட்​களுக்கு முன்பு டெல்​லி​யில் உள்ள குடும்ப நல நீதி​மன்​றத்​தில் விவாகரத்து வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. இதில் ஆஜராக சவுரபும் ஷிகா​வும் நீதி​மன்​றத்​துக்கு சென்​றனர்.

அப்​போது நீதி​மன்ற வளாகத்​தில் கணவரை பார்த்த ஷிகா, ஓடோடிச் சென்று கட்​டியணைத்து கதறி அழு​தார். தனது கையில் வைத்​திருந்த விவாகரத்து வழக்கு ஆவணங்​களை கிழித்​தெறிந்து வீசி​னார்.

இதன்​பின்​னர் நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணை நடை​பெற்​றது. அப்​போது விவாகரத்து வழக்கை வாபஸ் பெறு​வ​தாக இரு​வரும் நீதிப​தி​யிடம் முறை​யிட்​டனர். இதை நீதிபதி மகிழ்ச்​சி​யுடன் ஏற்றுக் கொண்​டார். நீதி​மன்ற வளாகத்​தில் சவுரபும் ஷிகா​வும்​ உணர்​ச்​சிப்​பெருக்​கில்​ கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில்​ வைரலாக பரவி வருகிறது.