惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
有赞技术团队
有赞技术团队
罗磊的独立博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
U
Unit 42
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Recent Announcements
Recent Announcements
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
Martin Fowler
Martin Fowler
V
V2EX
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
aimingoo的专栏
aimingoo的专栏
G
Google Developers Blog
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
Google DeepMind News
Google DeepMind News
雷峰网
雷峰网
阮一峰的网络日志
阮一峰的网络日志
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
"ரவுடிகளை; பாலியல் குற்றவாளிகளை பாஜக வேட்டையாடி பிடிக்கும...
2026-04-26 · via hindutamil

பிரதமர் மோடி.

Updated on

1 min read

வடக்கு 24 பர்கானாஸ்: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ரவுடிகளையும், பாலியல் குற்றவாளிகளையும் வேட்டையாடிப் பிடிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் பங்கான் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "திரிணமூல் காங்கிரஸின் காட்டு தர்பார் ஆட்சியால் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. அவர்கள் மிகப்பெரிய துரோகத்திற்கு ஆளாகியுள்ளனர். சந்தேஷ்காலியில் நமது சகோதரிகளுக்கு எதிராகக் கொடூரமான அட்டூழியங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

திரிணமூல் காங்கிரஸின் காட்டு தர்பார் ஆட்சியின் கீழ், இளம் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மே 4-ஆம் தேதிக்குப் பிறகு, பாஜக அரசு ஒவ்வொரு ரவுடியையும், பாலியல் குற்றவாளியையும் வேட்டையாடிப் பிடித்து, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்கும். பாஜக பெண்களுக்குப் பாதுகாப்பையும், வாய்ப்புகளையும் ஒருங்கே வழங்குகிறது.

மேற்கு வங்கத்தில் பாஜக அரசாங்கம், ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 36,000 தொகையை நேரடியாகச் செலுத்தும். ஆஷா (ASHA) பணியாளர்கள் மற்றும் பிற பெண் சுகாதாரப் பணியாளர்களின் ஊதியம் குறித்தும் மேற்கு வங்க பாஜக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எங்கள் அரசாங்கம் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கும்.

பொது சுகாதார மையங்களில் மருத்துவச் சிகிச்சைகளுக்கு 80% கட்டணச் சலுகை வழங்கப்படும். மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். கர்ப்பக் காலத்தில் ரூ.21,000 நிதியுதவியும், மகள்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்யும்போது ரூ.50,000 நிதியுதவியும் பாஜக அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும்.

பெண்கள் சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்காக வங்கிகளிடமிருந்து ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். வங்கிகளுக்குக் கடன் வழங்கும்போது ஒரு உத்தரவாதம் தேவைப்படும். ஆனால், சகோதரிகளே, அந்த உத்தரவாதத்தை நீங்கள் வழங்கத் தேவையில்லை. அந்த உத்தரவாதத்தை உங்கள் சகோதரனான மோடியே உங்களுக்கு வழங்குவார்.

மேற்கு வங்கத்தின் விளையாட்டு கலாச்சாரத்திற்கு பாஜக ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். திரிணமூல் காங்கிரஸின் 'சிண்டிகேட்' இங்குள்ள விளையாட்டுச் சூழல் அமைப்பையே சீரழித்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடந்த நிகழ்வுகளும், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களைச் சென்றடைந்த அந்தப் படங்களும், இங்கு நிலவும் 'மகா காட்டு தர்பார்' கலாச்சாரத்தின் நேரடி விளைவுகளே ஆகும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ், மேற்கு வங்கத்தில் ஒரு புதிய, சிறப்பான விளையாட்டுச் சூழல் அமைப்பு உருவாக்கப்படும்" என்று அவர் கூறினார்.