惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
L
LangChain Blog
GbyAI
GbyAI
F
Fortinet All Blogs
腾讯CDC
Last Week in AI
Last Week in AI
A
About on SuperTechFans
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky
B
Blog
D
Docker
G
Google Developers Blog
月光博客
月光博客
博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
宝玉的分享
宝玉的分享
U
Unit 42
Blog — PlanetScale
Blog — PlanetScale
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜபல்பூர் படகு விபத்து வீடியோவில் அதிர்ச்சி தகவல்: லைப் ஜா...
2026-05-03 · via hindutamil

Updated on

1 min read

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் ஜபல்​பூர் மாவட்​டத்​தி​லுள்ள பார்கி அணை​யில் 3 நாட்​களுக்கு முன்பு படகில் சுற்​றுலா சென்றபோது பலத்த காற்று வீசி​ய​தில் படகு கவிழ்ந்​தது. இதில், தமிழகத்​தைச் சேர்ந்த 5 பேர் உட்பட சுற்​றுலாப் பயணி​கள் 9 பேர் உயி​ரிழந்​தனர். 28 பேர் மீட்​கப்​பட்​டனர்.

இது தொடர்​பாக புதிய வீடியோ ஒன்று வெளி​யாகி​யுள்​ளது. இதன் மூலம், படகுப் பயணங்​களின்போது செய்ய வேண்​டிய அடிப்​படை விதி​களைக் கூட அந்​தப் படகை இயக்​கிய ஊழியர்​கள் பின்​பற்​ற​வில்லை என்று தெரிய வந்​துள்​ளது.

இந்த விபத்​தில் தனது குழந்​தையை மார்​போடு இறுக அணைத்தபடி தாய் ஒரு​வர் சடல​மாக மீட்​கப்​பட்​டார். இந்​தக் காட்சி கல்​நெஞ்​சங்​களை​யும் உருக்​கு​வ​தாக அமைந்​துள்​ளது. மேலும், அந்த வீடியோ​வில் சீல் கூட பிரிக்​கப்​ப​டாத உயிர் காக்​கும் லைப் ஜாக்​கெட்​டு​கள் இருப்​பது தெரிய வந்​துள்​ளது. உயிரைக் காக்க உதவும் லைப்​-ஜாக்​கெட்​டு​களைப் பயணி​களுக்கு படகு ஊழியர்​கள் வழங்​க​வில்​லை.

வீடியோ​வில் சுற்​றுலாப் பயணி​கள் உயிர் பயத்​தில் கூச்​சலிடு​வதும், தப்​பிக்க முயல்​வதும் தெரி​கிறது. படகில் தண்​ணீர் புகுந்த பிறகு அவசர அவசர​மாக கட்டி வைத்​திருந்த லைப் ஜாக்​கெட்​டு​களை அவிழ்த்து பயணி​களுக்கு வழங்​கு​வது பதி​வாகி உள்​ளது. பயணி​கள் பலர் லைப் ஜாக்​கெட்​டு​கள் அணி​யாமல் அலறு​வதும் தெரி​கிறது.

சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை: அதிர்ச்சியில் மீளமுடியாத படகோட்டி - விபத்துக்குள்ளான படகை இயக்கிய பைலட் மகேஷ் படேல் கூறியதாவது:

அணை அமைந்துள்ள கமாரியா தீவில் இருந்து படகை எடுக்கும்போது வானிலை இயல்பாகவே இருந்தது. நடுப்பகுதிக்கு படகு சென்றபோது காற்று பலமாக வீச ஆரம்பித்ததும், படகு தள்ளாட ஆரம்பித்தது. காற்று அதிகரித்த நிலையில் படகின் உள்ளே தண்ணீர் வர ஆரம்பித்ததும், சுற்றுலா பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.

சுற்றுலாப் பயணிகளை காக்கும் நோக்கில் அந்த படகை கரைக்கு திருப்ப முயன்றேன். அப்போது எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து மாற்றுப் படகை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தேன். நடனம் ஆட வேண்டும் என்றும் அதற்கு லைப் ஜாக்கெட் தடையாக இருக்கும் என்றும் கூறி அதை வாங்க மறுத்தனர். நான் 15 ஆண்டுகளாகப் படகோட்டும் தொழிலில் இருந்து வருகிறேன்.

இதுபோன்ற பரிதாபமான விபத்தைச் சந்தித்ததே இல்லை. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை. குற்ற உணர்ச்சியால் சாப்பிட முடியவில்லை. தூக்கம் வரவில்லை. நடந்த தவறுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.