惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
IT之家
IT之家
V
Visual Studio Blog
The Cloudflare Blog
博客园 - 司徒正美
Jina AI
Jina AI
博客园_首页
阮一峰的网络日志
阮一峰的网络日志
美团技术团队
S
SegmentFault 最新的问题
博客园 - 聂微东
人人都是产品经理
人人都是产品经理
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
博客园 - 三生石上(FineUI控件)
爱范儿
爱范儿
博客园 - Franky
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 94.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச...
2026-05-21 · via hindutamil

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சேலம் குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தாங்கள் தேர்ச்சியடைந்ததை அறிந்து உற்சாகமடைந்த மாணவிகள். படம்:எஸ்.குரு பிரசாத்

Updated on

2 min read

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 8.70 லட்சம் மாணவர்களில் 94.31 சதவீதம் பேர் வரை தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவிகளே இந்த ஆண்டும் தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 4,219 மையங்களில் கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வெழுத 8 லட்சத்து 81,817 பள்ளி மாணவர்கள் பதிவுசெய்தனர். அவர்களில் 4 லட்சத்து 35,396 மாணவர்கள், 4 லட்சத்து 35,247 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 70,643 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களால் 11,174 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று வெளியிட்டார். அடுத்த சில நிமிடங்களில் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) மூலமும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டன. மேலும், செய்தித் துறை மூலமாக வாட்ஸ் அப் வழியாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 4 லட்சத்து 19,891 மாணவிகள், 4 லட்சத்து 1,214 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 21,105(94.31%) பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட (93.80%) 0.51 சதவீதம் அதிகமாகும். மாணவர்கள் 92.15 சதவீதமும், மாணவிகள் 96.47 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 4.32 சதவீதம் அதிகம்.

இதுதவிர மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த தேர்ச்சியில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை(97.54%), தஞ்சாவூர்(97.41%), திருச்சி (97.31%) மற்றும் கன்னியாகுமரி (97.30%) அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன. கடைசி இடத்துக்கு ராணிப்பேட்டை (86.68%) பின்தங்கியுள்ளது. தலைநகரான சென்னையில் 92.34 சதவீதம் தேர்ச்சி வந்துள்ளது. அரசுப் பள்ளிகள் பிரிவில் சிவகங்கை(97.42%) மாவட்டம் முதலிடமும், புதுக்கோட்டை(97.09%), தஞ்சாவூர்(96.89%) 2, 3-ம் இடங்களையும் பெற்றுள்ளன. மேலும், அரியலூர் (82.40%) மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல், பொதுத்தேர்வில் 12,467 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 1,931 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 5,171 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதித்துள்ளன. 2025-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 4,917-ஆக இருந்தது. தனித்தேர்வர்களைப் பொருத்தவரை 24,353 பேர் தேர்வெழுதிய நிலையில் 8,744(35.91%) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மொத்தம் 13,292 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்துகொண்டனர். இதில் 11,416(85.89%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 370 சிறை கைதிகள் தேர்வு எழுதியதில் 354 பேர் (85.89%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்டம் விவரம்: எஸ்எஸ்எல்சி தேர்வில் தமிழ் பாடத்தில் 34 மாணவர்கள் முழு மதிப்பெண்(சென்டம்) பெற்று சாதனை படைத்துள்ளனர். இதேபோல், ஆங்கிலத்தில் 92 பேரும், கணிதத்தில் 3,194, அறிவியலில் 10, 476, சமூக அறிவியலில் 3,336 என ஒட்டுமொத்தமாக 17,132 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர். இதில் இதில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,774 ஆகும். இதையடுத்து மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல் தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 22-ம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமும் அவரவர் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி மே 22 முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி ஜூன் 17 முதல் 19-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.இதற்கிடையே பொதுத்தேர்வை எழுத முடியாதவர்கள், தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே உயர்கல்வியை தொடருவதற்கு ஏதுவாக ஜூலை 8 முதல் 15-ம் தேதி முதல் துணைத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு மே 26 முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in எனும் வலைத் தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சியில் அரசுப் பள்ளிகள் 91.86 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண், தோல்வி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் தயக்கமின்றி அரசின் இலவச உதவி மையத்தை 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். அதேபோல், தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை பள்ளிக்கல்வியின் 14417 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.