惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
B
Blog RSS Feed
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
T
The Blog of Author Tim Ferriss
B
Blog
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
MyScale Blog
MyScale Blog
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
H
Help Net Security
雷峰网
雷峰网
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஊட்டியில் தொடங்கியது 21-வது ரோஜா கண்காட்சி: 70 ஆயிரம் ரோஜ...
2026-05-14 · via hindutamil

Updated on

2 min read

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் இன்று (மே 14) 21-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. 70 ஆயிரம் ரோஜாக்களால் ஆன அன்னப்பறவை ஜோடி பார்வையாளர்களைக் கவர்ந்தது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான 21-வது ரோஜா கண்காட்சி இன்று ஊட்டி ரோஜா பூங்காவில் தொடங்கியது.

கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்து, பூங்காவில் அமைக்கப்பட்ட மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பம்சமாக, ‘பறவைகளின் சொர்க்கம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2 லட்சம் ரோஜா மலர்களால் பல்வேறு பறவை இனங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 70,000 ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட அன்னப் பறவை ஜோடி சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. மேலும், கழுகு, இருவாச்சி பறவை, புல் புல், பேரடைஸ் ஃபிளை கேச்சர், தூக்கணாங்குருவி, தேன் சிட்டு, மலபார் இருவாச்சி, நீலகிரி லாஃபிங் திரஷ் உள்ளிட்ட மொத்தம் 14 வகையான பறவை வடிவங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

கூடுதலாக, ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ போன்ற கார்டூன் வடிவங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பூங்கா முழுவதும் 4,310 ரகங்களைச் சேர்ந்த 33,000 ரோஜா செடிகள் பல்லாயிரக்கணக்கான வண்ணங்களில் பூத்து குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

கண்காட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு ரசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 3 நாட்கள் நடந்த ரோஜா கண்காட்சி, இந்த ஆண்டில் 5 நாட்கள் நடைபெறவுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.