惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Jina AI
Jina AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
D
DataBreaches.Net
I
InfoQ
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
G
Google Developers Blog
博客园_首页
博客园 - 司徒正美
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 叶小钗
Engineering at Meta
Engineering at Meta
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 【当耐特】
D
Docker
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வர...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு வங்கிகளில் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை மே 25-ம் தேதி முதல்வர் விஜய் வெளியிட்டார்.

அதன்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு (2.5 ஏக்கர் நிலம் வைத்திருப்போர்) கடன்தொகை முழுமையாகவும், ரூ.50 ஆயிரம் வரைகடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு (2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர்வரை) 50 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு (5 ஏக்கருக்கு மேல்) தலா ரூ. 5 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதில் அதிருப்தி அடைந்த விவசாயிகள், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் தவெக தனது தேர்தல் வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் குற்றம் சாட்டின.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார்.

முதல்வர் ஆலோசனை

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை மறு ஆய்வு செய்யும் வகையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் (திங்கள்) முதல்வர் விஜய் தலைமையில் வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின் படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும், தமிழக அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை பயிர்க்கடனை, ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தர விட்டுள்ளார்.

14.43 லட்சம் பேர் பயன்

அதன்படி, குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை 100 சதவீதமும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் ரூ.35 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும். இதன்மூலம் விவசாயி களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரமும் பணப்பயன் கிடைக்கும்.

8 லட்சத்து 33 ஆயிரத்து 773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடி, 5 லட்சத்து 1,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடி, 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.15 கோடி என ஒட்டுமொத்தமாக 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடி தொகையாக ரூ.5,932.23 கோடி கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.